கமலின் பிறந்தநாள் பார்ட்டி மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து..!

கமலின் பிறந்தநாள் பார்ட்டி மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் சகலகலா வல்லவர் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் தான்.

கமல், தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் நேற்று கமலின் பிறந்தநாள் பார்ட்டி நடைப்பெற்றது.அதில் பிந்து மாதவி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும்,ட்விட்டரில், அவரது பிறந்தநாளுக்கு மம்முட்டி, குஷ்பு உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கமல்ஹாசன்

celebrities wish Ulaganayagan a happy birthday

கமலுடன் இணைவதை உறுதி செய்த 2 இந்திய பிரபல இயக்குனர்கள்.; காத்திருக்கும் 3 தமிழ் இயக்குனர்கள்

கமலுடன் இணைவதை உறுதி செய்த 2 இந்திய பிரபல இயக்குனர்கள்.; காத்திருக்கும் 3 தமிழ் இயக்குனர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் சகலகலா வல்லவன் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இவரது கைவசம் தற்போது 5 படங்கள் உள்ளன. இதில் 2 உறுதியாகி விட்டது. இவர்கள் இருவரும் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர்கள் ஆவர்.

‘இந்தியன்2’ படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். கமலின் 234 படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார்.

இவையில்லாமல் தமிழில் பிரபலமான 3 இயக்குனர்களுடன் இணையவுள்ளார் கமல்ஹாசன்.

மணிரத்னத்துடன் இணைவதை நேற்று உறுதி செய்திருந்தார். இந்த படம் கமலின் 234 ஆவது படமாக உருவாகிறது. இந்த படத்தை மணிரத்னம் கமல்ஹாசன் உதயநிதி ஆகியோர் தயாரிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

தற்போது லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்த வருகிறார்.

இதனையடுத்து 2 பிரபலமான தமிழ் இயக்குனர்களுடன் இணைய உள்ளார் கமல்ஹாசன்.

ஒருவர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தில் இணைந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் கிராமத்து பாணியில் உருவாகும் ஒரு படத்திலும் நடிக்க தயாராக வருகிறார் கமல்.

இந்த நிலையில் ‘துணிவு’ பட இயக்குனர் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்திலும் கமல் நடிக்க உள்ளார்.

இந்த தகவலை நாம் ஏற்கனவே நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

Ulaganayagan Kamalhassan upcoming line up..

– A movie with Shankar #Indian2 (Current project)

– A movie with #HVinoth (2023 project)

– A movie with #PaRanjith

– A movie with #ManiRatnam (2023-2024 project)

– A movie with #LokeshKanagaraj

கிராமத்து அரசியலை பேசும் ‘பாண்டிய வம்சம்’.; பசும்பொன் கோயிலில் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

கிராமத்து அரசியலை பேசும் ‘பாண்டிய வம்சம்’.; பசும்பொன் கோயிலில் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பாக ஏ.சிவபிரகாஷ் மற்றும் கேப்டன் எம் பி ஆனந்த் இணைந்து தயாரித்திருக்கும் ‘பாண்டிய வம்சம்’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை பசும்பொன் முத்துராமலிங்க திருக்கோவிலில் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் டாக்டர் . பி. வி. கதிரவன் Ex MLA வெளியிட்டார்.

‘பாண்டிய வம்சம்’ திரைப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கி நடித்துள்ளார் ஏ.சிவபிரகாஷ்.

இதில் நாயகியாக ரக்ஷிதா பானு மற்றும் ஆலியா ஹயாத் நடித்துள்ளனர்.

முழு நீள வில்லனாக மனோஜ் குமார் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகுமார், போஸ் வெங்கட் மற்றும் குட்டி புலி, சரவணன், சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதையைப் பற்றி இயக்குனர் கூறுகையில்…

“இப்படம் கிராமத்தில் உள்ள அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் மட்டுமல்லாது இந்த சமுதாயத்துக்கு தேவையான சில முக்கிய விஷயங்களையும் பதிவு செய்துள்ளோம் என்றார்”.

இப்படத்திற்கு இசை ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு கண்ணதாசன் செழியன், படத்தொகுப்பு மாதவன்.

Paandiya Vamsam Movie First look released

‘கேஜிஎஃப் 3’ பற்றி மனம் திறந்து பேசிய யாஷ்

‘கேஜிஎஃப் 3’ பற்றி மனம் திறந்து பேசிய யாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“எங்களுக்கு ஒரு யோசனையும் திட்டமும் இருந்தது, ஆனால் நான் வேறு ஏதாவது செய்ய விரும்பினேன்.

எல்லாம் சரியாகிவிட்டால் நாங்கள் அதை பின்னர் செய்வோம், ஆனால் எந்த நேரத்திலும் இல்லை” என்று சொல்லமாட்டோம் கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் கூறினார்.

“எனக்குத் தெரியும், நிறைய செய்திகள் உலவுகின்றன.

முடிவாகும் போது அறிவிக்கப்படும். மீதி விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம், அது வெளிவரும்போது நான் வந்து சொல்கிறேன். ,” என்று அவர் கூறினார்

3வது முறையாக விஜய் உடன் இணைந்த ‘ரஞ்சிதமே.. பாடகி மானசி

3வது முறையாக விஜய் உடன் இணைந்த ‘ரஞ்சிதமே.. பாடகி மானசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய், ராஸ்மிகா, யோகிபாபு, குஷ்பூ, சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’.

தமன் இசையமைத்து வரும் இந்த படத்தை 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட வில் உள்ளனர்.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.

இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இதுவரையில் 2.2 கோடிக்கு அதிகமான பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்துள்ளனர்.

இந்தப் பாடலை நடிகர் விஜய் உடன் பாடகி மானசியுடன் இணைந்து பாடியுள்ளார்.

இதற்கு முன் தலைவா படத்தை இடம்பெற்ற ‘வாங்கன்னா வணக்கம் அண்ணா.. என்ற பாடலில் ‘ஹம்மிங்… மட்டும் செய்திருந்தார் மானசி.

அதன்பின் விஜய்யின் ‘புலி’ படத்தில் சங்கர் மகாதேவனுடன் இணைந்து ஒரு பாடலை பாடியிருந்தார்.

தற்போது 3வது முறையாக விஜய் உடன் இணைந்து டூயட் பாடியுள்ளார் ‘ரஞ்சிதமே..’ MM மானசி.

singer Manasi joined  Vijay for the 3rd time for ‘Ranjithame’

ஆடம்பரமான திருமண பரிசுகளை தனது கணவரிடமிருந்து பெற்ற நடிகை பூர்ணா

ஆடம்பரமான திருமண பரிசுகளை தனது கணவரிடமிருந்து பெற்ற நடிகை பூர்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை பூர்ணா , துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஜேபிஎஸ் குழும நிறுவனங்களின் தலைவர் ஷானித் ஆசிப் அலியை அக்டோபர் 24 அன்று திருமணம் செய்து கொண்டார்.

அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு செய்திகளை வெளியிட்டார்.

இப்போது சமீபத்திய செய்தியில் அவர் தனது திருமண நாளில் தனது கணவரிடமிருந்து பல ஆடம்பரமான விலையுயர்ந்த பரிசுகளை பெற்றுள்ளார்

பூர்ணாவுக்கு கிடைத்த பரிசுகளில் 2700 கிராம் தங்கமும் அடங்கும். இந்த தங்கத்தின் விலை ரூ.1.30 கோடி என கூறப்படுகிறது.

More Articles
Follows