தலைப்பு செய்தியானார் ‘தல’… புதிய பட்டத்தை ஏற்பாரா அஜித்.?

தலைப்பு செய்தியானார் ‘தல’… புதிய பட்டத்தை ஏற்பாரா அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith style stillsசிவா இயக்கும் ஏகே57 படத்திற்காக அஜித் தற்போது ஆஸ்த்ரியா நாட்டில் இருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இவர் தமிழகத்தின் முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும் எந்தவொரு அடைமொழியோ பட்டமோ வேண்டாம் என மறுத்து வருபவர்.

இந்நிலையில் ஆஸ்த்ரியாவின் பிரபலமான Carinthia என்ற மீடியா நிறுவனம் இவருக்கு ‘இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.

மேலும் அஜித் படம் பற்றிய செய்தியை தலைப்பு செய்தியாக்கி அங்கு வெளியிட்டுள்ளது.

பாபி சிம்ஹா-பிரசன்னா இணையும் ‘திருட்டு பயலே 2’

பாபி சிம்ஹா-பிரசன்னா இணையும் ‘திருட்டு பயலே 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bobby Simha Prasannaசுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா, அப்பாஸ் ஆகியோர் நடித்த படம் திருட்டு பயலே.

பரத்வாஜ் இசையமைத்த இப்படம் 2006ஆம் ஆண்டு வெளியானது.

தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது.

இரண்டாம் பாகத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க சுசீ கணேசனே இயக்குகிறார்.

நாயகனாக பாபி சிம்ஹா நடிக்க, பிரசன்னா வில்லனாக நடிக்கிறார்.

செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது.

5 ஸ்டார் படம் மூலம் பிரசன்னாவும் சுசிகணேசனும் சினிமாவுக்கு அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush stillsகோவையில் புதிதாய் உருவாகியுள்ள பிரின்ஸ் ஜீவல்லரியின் புதிய கிளையை திறந்து வைக்க சென்றார் தனுஷ்.

எனவே அவரை பார்க்க கட்டுங்கடங்காத கூட்டம் கூடியது.

இதுகுறித்து தனுஷ் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“திறப்பு விழாவுக்கு வந்தபோது என் மீது அன்பும், ஆதரவும் காட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி.

உங்களை சந்திக்க விரும்பினேன். ஆனால் விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதாலும் வேலையின் அவசரம் காரணத்தினாலும் விரைந்து செல்ல நேரிட்டது.

எனவே உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

அஜித்-சூர்யாவுடன் நடிக்கும் கமல் மகள்களுக்கு ஒரே கேரக்டராம்

அஜித்-சூர்யாவுடன் நடிக்கும் கமல் மகள்களுக்கு ஒரே கேரக்டராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shruthi haasan and akshara haasanஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர் இப்படத்தில் ஹீரோவுக்கு உதவும் பத்திரிகையாளராக நடிக்கிறாராம்.

அதுபோல் அஜித்தின் ஏகே 57 படத்தில் நடிக்கும் அக்ஷராஹாசனும் ஹீரோவுடன் பயணிக்கும் பத்திரிக்கை தொடர்பான கேரக்டரிலும் நடிக்கிறாராம்.

சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த நெருப்புடா அருண்ராஜா காமராஜ்

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த நெருப்புடா அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash and arun raja kamarajஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தை சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்குகிறார்.

இது ஜிவி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் 8வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடங்காதே என்று பெயரிடப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

இவர்களுடன் வைபவி சந்தில்யா, தம்பி ராமையா உள்ளிட்டோர் விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

அஜித்தின் படம் வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்

அஜித்தின் படம் வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thala 57 movie stillsஅஜித் மற்ற நடிகர்களைப் போல் அடிக்கடி வெளியில் தலை காட்டமாட்டார்.

பொது நிகழ்ச்சிகளுக்கும் அதிகம் வரமாட்டார். தேர்தல் சமயத்தில் ஓட்டு போட வந்திருந்தார்.

இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகளுக்கு மட்டுமே அவர் பொது இடங்களுக்கு வருவார்.

எனவே அவரது போட்டோக்கள் அதிகம் கிடைப்பதில்லை.

இந்நிலையில் அவர் நடிக்கவுள்ள தல 57 படத்தின் படப்பிடிப்பு ஆஸ்ட்ரியாவில் நடந்து வருகிறது.

அப்போது எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

எனவே நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More Articles
Follows