எனக்கு மார்கெட் இல்லன்னு சொன்னாங்க.. – ‘காளிதாஸ்’ பரத் உருக்கமான பேச்சு

எனக்கு மார்கெட் இல்லன்னு சொன்னாங்க.. – ‘காளிதாஸ்’ பரத் உருக்கமான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharath emotional speech at Kaalidas success meetசென்றவாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் காளிதாஸ். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி இருந்த இப்படத்தை DINA STUDIOS , INCREDIBLE PRODUCTION, LEAPING HORSE ENTERTAINMENT சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் தயாரித்திருந்தனர். ப்ளு வேல் எண்டர்டயின்மண்ட் இந்த படத்தை வெளியிட்டிருந்தது.

இப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை அடைந்திருந்தது. அதைக் கொண்டாடும் வகையில் படக்குழு இன்று மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றை நடத்தினார்கள்.

விழாவில்… தயாரிப்பாளர் மணி தினகரன் பேசியதாவது…

“இயக்குநரின் ப்ளானிங் நேர்த்தி, மற்றும் பத்திரிகைகளின் பாராட்டு தான் எங்களை பெரிய வெற்றி அடைய வைத்தது. அனைவருக்கும் நன்றி,” என்றார்.

Blue Whale Entertainment அபிஷேக் பேசியதாவது…

“பெரிய டென்சனில் இருந்த ஒரு சமயம் தான் இந்தப்படத்தை போய்ப்பார்த்தேன். ஆனால், படம் பார்த்த பிறகு டென்சன் விலகியது. பெரிதாக என்கிரேஜ் பண்ணியது. அப்போது தான் முடிவு செய்தேன். இந்தப்படம் பெரிதாக கொண்டு செல்ல வேண்டும் என்று. அது நடந்து விட்டது,”என்றார்.

சக்திவேல் பெருமாள்சாமி பேசியதாவது…

“அரவிந்த் என்பவர் தான் இந்தப்படத்தை பார்க்க வைத்தார். ஒரு முக்கியமான டிஸ்டிப்யூட்டரோடு தான் பார்த்தேன். ஒருசில காரணங்களால் அவரால் பண்ண முடியவில்லை. பிறகு நானே செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.

எங்களுக்கு பத்திரிகையாளர்கள் கான்பிடண்ஸ் கொடுத்தார்கள். பைரஸியில் படம் பார்ப்பவர்களால் எங்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

அதையும் தாண்டி நாங்கள் ஜெயிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. மேலும் இந்தப்படம் இந்த வாரமும் ஓட வேண்டும் அப்போது தான் வசூலில் நாங்கள் அடுத்த நிலையை அடைய முடியும். அதற்கு அனைவரும் சப்போர்ட் பண்ணணும்.

மேலும் இந்தவாரம் மூன்று பெரிய படங்கள் வருகின்றன. அந்தப்படங்களோடு எங்கள் படமும் ஓட வேண்டும். அதற்கு மீடியா ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.” என்றார்

நடிகர் தங்கத்துரை பேசியதாவது,

“படத்தைப் பத்தி மீடியா நல்லா எழுதி இருந்தாங்க. அவ்வளவு பேருக்கும் நன்றி. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இயக்குநர் ஆகியோர் அனைவருக்கும் நன்றி. பரத் சார் என்னை சூட்டிங் ஸ்பாட்டில் நல்லா என்கிரேஜ் பண்ணார். அவருக்கும் நன்றி.

இன்றைய வாழ்க்கை ரொம்ப வேகமாக போவதால் நாம் யாரும் வீட்டில் நேரம் செலவிடுவதில்லை. ஆனால் அப்படி இருக்கக் கூடாது என்பதை படம் மிக அழகாக பதிவு செய்திருந்தது. இந்தப்படத்தை பார்த்த பிறகு நான் மனைவியோடு இரண்டு நாள் நேரத்தை செலவு செய்தேன். நாம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் வீட்டிற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்” என்றார்

ஆதவ் கண்ணதாசன் பேசியதாவது,

“கன்டென்ட்டை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளருக்கு பெரிய நன்றி. இயக்குநர் ஸ்ரீசெந்தில் சார் ஒரு சைடாக யோசிக்க மாட்டார். இந்த காளிதாஸ் மூலமாக பரத்திற்கு பெரிய ப்யூச்சர் கிடைக்கும். ரிவியூ தான் இந்தப்படத்தை பெரிதாக கொண்டு சேர்த்தது.
அவர்கள் அனைவருக்கும் நன்றி. இன்னும் ஒருவாரம் இந்தப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கனும்,” என்றார்

இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசியதாவது,

“நல்லா ஒருபடம் பண்ணி இருந்தோம். அதைக் கொண்டுவர ரொம்ப கஷ்டப்பட்டோம். ஒருவழியாக கொண்டுவந்தோம். படம் ப்ரிவியூ சோ போடும் வரை பயம் இருந்தது. ஆனால் ப்ரிவியூவில் பார்த்தவர்கள் படத்தை பாராட்டி மக்களிடம் கொண்டு சேர்த்தனர். படம் துவங்கியதற்கான காரணமாக இருந்த தினா சாருக்கு பெரிய நன்றி. அவர் எனக்காக படம் எடுத்தார்.

முழு உழைப்பை போட்டால் இந்த பிரபஞ்சம் நமக்கு சப்போர்ட் பண்ணும். அது மெய்யாகி இருக்கிறது. சிவநேசன் சார் சொன்ன லைன் தான் இந்தக்கதை. இது 30 நாட்களில் எழுதப்பட்ட கதை. எழுதியதும் பரத் சாரை மீட் பண்ணி கதை சொன்னேன். அதில் இருந்து 24 மணி நேரத்திற்குள் இந்தப்படம் முடிவாகிவிட்டது. நிறைய நல்ல மனங்கள் தான் இந்தப்படத்தை நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்த்தது.

இந்தப்படத்திற்காக பரத் சார் நல்ல உழைப்பை போட்டார். படம் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை வருவதற்கு நடிகர்கள் ரொம்ப முக்கியம். அந்த வகையில் பரத் சிறப்பாக செய்தார்.

ஆன் ஷீத்தல் டூப் இல்லாமலே நடித்தார். என்னோட டெக்னிஷியன்ஸ் எல்லாருமே நல்லா வேலை செய்தார்கள். புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டர் என்பதைத் தாண்டி எனக்கு ரொம்ப நண்பராகிவிட்டார். எனக்குள் பெரிய எனர்ஜியை ஏற்றியவர் அவர் தான்.

சக்திவேல் ராமசாமி, அபிஷேக், சிவகுமார் ஆகியோர் படத்திற்குள் வந்தபிறகு எங்கள் நம்பிக்கை பெரிதாகி விட்டது. ஜெயவேல் அண்ணன் தான் என்னை சினிமாவிற்குள் கொண்டுவந்தார். அவர் படம் மூலமாகத் தான் நான் உள்ளே வந்தேன். இந்த நேரத்தில் அவருக்கு பெரிய நன்றி”என்றார்.

அம்மு ராமச்சந்திரன் பேசியதாவது…

“ஸ்ரீசெந்தில் சாருக்குத் தான் நான் பெரிய நன்றி சொல்லணும். அவர் என்னை நடிக்க அழைத்த போது நான் டிராபிக் ராமசாமி படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். என்னால் டேட் கொடுக்க முடியாத சூழல் இருந்தது.

ஆனாலும் எனக்கு உதவி பண்ணி என்னை நடிக்க வைத்தார். பரத்தோடு நடித்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இப்படியான ஒரு கேரக்டர் எனக்கு கொடுத்ததன் மூலமாக எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நல்ல விதமாக படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்

நடிகர் பரத் பேசியதாவது…

“வெற்றி நாயகன் என்ற வார்த்தையைக் கேட்டு ரொம்பநாள் ஆச்சு. நேற்று மும்பையில் சூட்டிங்கில் இருக்கும் போது காளிதாஸ் சக்ஸஸ் மீட் இருக்கு என்று சொன்னார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் சினிமாவிற்கு வந்த 17 ஆண்டுகள் ஆகிறது.

எனக்கும் சில படங்கள் தவறி இருக்கிறது. அது எல்லா ஹீரோக்களுக்கும் வரும் தான். ஆனால் என்றாவது ஒருநாள் நமக்கு ஒரு நல்லபடம் அமையும் என்று நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது. சினிமா என்பது வணிகம் சார்ந்தது. நிறைய நல்லபடங்கள் நடித்திருந்தாலும் வணிக ரீதியான வெற்றி ரொம்ப முக்கியம்.

2017- ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். சினிமாவில் நிறையபேர் இந்தப்படத்தை பார்த்து விட்டார்கள். நிறையபேர் படம் நல்லாருக்கு. ஆனால் இவர் நடித்து இருக்கிறார்.

இவருக்கு மார்க்கெட் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அது எனக்கு நிறைய மன உளைச்சலைத் தந்தது. ஆனால் இந்தப்படத்தை முதலில் பார்த்த மீடியா பெரிதாக கொண்டாடினார்கள்.

நெகட்டிவ் ரிவியூ ஒன்று கூட இல்லை. அதற்கு ஊடகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. இப்போ ஒரு நல்லபடம் எடுத்தால் மட்டும் போதாது. அதை வாங்கியவர்கள் எப்படி வெளியீட வேண்டும், அதற்கு தியேட்டர்ஸ் எப்படி போட வேண்டும் என்பது மிக முக்கியம். அதை அபிஷேக் சார் சிறப்பாக செய்தார்.

எல்லாருமே இந்தப்படத்தை பெரிதாக்க வேண்டும் என்று மொத்தமாக உழைத்தோம். அடுத்தவாரமும் இந்தப்படத்தை நாங்க கொண்டு போகணும். ஏன்னா இந்த வாரம் ஹீரோ, தம்பி, தபாங் 3 ஆகிய படங்கள் வெளிவருகிறது. அதோடு நாங்கள் நிற்க வேண்டும். இயக்குநர் ஸ்ரீசெந்தில் மிக நேர்த்தியாக உழைத்து இருக்கிறார்.

ஒரு இயக்குநராக அவர் நின்றுவிட்டார். தமிழ்சினிமாவில் ஒரு தரமான இயக்குநர் லிஸ்டில் அவர் இருப்பார். ரொம்ப வருசம் கழித்து எனக்கு ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது”என்றார்.

Bharath emotional speech at Kaalidas success meet

பரத்

திருநங்கையாக நடிக்க ஆசைப்பட்ட ரஜினி; தாதா 87 டைரக்டர் அழைப்பு

திருநங்கையாக நடிக்க ஆசைப்பட்ட ரஜினி; தாதா 87 டைரக்டர் அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhadha 87 director Vijay Sri invite Rajinikanthசாருஹாசன் நடிப்பில் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் வெளியான படம் ‘தாதா 87’.

இந்த படத்தில் திருநங்கையின் காதலை அருமையாக படம் பிடித்திருந்தார். இந்த பட நாயகியே திருநங்கையாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்தன.

இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற தர்பார் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது தனக்கு திருநங்கையாக நடிக்க நீண்ட நாள் ஆசை என பேசியிருந்தார்.

இதனையறிந்த டைரக்டர் விஜய்ஸ்ரீ அவர்கள் ரஜினிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், ‘தர்பார் பட புரோமோஷன் அடுத்த பட வேலைகளுக்கு நடுவில் காலம் நேரம் ஒத்துழைத்தால் தாதா87 படத்தை காண்பிக்க தயாராக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

Dhadha 87 director Vijay Sri invite Rajinikanth

இந்த கடிதம் இதோ…

Dhadha 87 director Vijay Sri invite Rajinikanth

ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் “ஹீரோ“ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C வில்லியம்ஸ் !

ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் “ஹீரோ“ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C வில்லியம்ஸ் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

George c williams and sivakarthikeyanமிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமா ஒளிப்பதிவு தளத்தில் மிகவும் பிரபலமான ஒருவராக மாறியிருக்கிறார் ஜார்ஜ் C வில்லியம்ஸ். கதையின் மையத்தோடு இணைந்து திரையில் அவர் எழுதும் ஒளிக்கவிதைகள் இந்தியா முழுதும் கவனிக்கப்பட்டு பாரட்டுபெற்று வருகிறது. அவரது ஒளிப்பதிவில் விரைவில் வெளியாகவுள்ள “ஹீரோ” திரைப்படம் சிவகார்த்திகேயன், அர்ஜீன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் எனும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்புக்குள்ளாகியுள்ளது.

“ஹீரோ” படம் குறித்து ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C வில்லியம்ஸ் பகிர்ந்துகொண்டதாவது…

“ஹீரோ” அதன் முன்னோட்டத்தில் சொல்லப்பட்டிருப்பது போலவே நாட்டில் நிலவும் மிக முக்கியமான பிரச்சனையை எல்லோருக்கும் சென்று சேரும் விதத்தில் பேசும் படைப்பாக இருக்கும். தயாரிப்பாளர் கொட்டாப்பாடி J ராஜேஷ் இல்லையென்றால் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவரால் தான் இப்படம் பெருமளவு ரசிகர்களை சென்றடையும் வகையில் மிகப்பிரமாண்டமான முறையில் வெளியிடப்படுகிறது. இப்போது முழுப்படமாக பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் மிகச் சிறு கருவாக இருந்த இந்தப் படத்தினை ஒவ்வொரு நடிகர்களும், ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் இணைந்து இந்தளவு மிகப்பெரிய படமாக உருவாக்கியுள்ளார்கள். இந்தப்படம் ஒரு ஐடியாவாக உருவானதிலிருந்தே நான் இயக்குநர் மித்ரனுடன் இணைந்து பயணிக்கிறேன். இது ஒளிப்பதிவாளராக படத்திற்கு பெரும் துணையாக இருந்தது. நண்பர்களுடன் இணைந்து வேலை செய்வது எளிதானது மேலும் அதற்கான பலன்களும் அதிகம். நான், மித்ரன், சிவகார்த்திகேயன் மூவரும் நண்பர்களாக இருப்பதும் ஒத்த கருத்துகள் கொண்டிருப்பதும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்தது. சிவகார்த்திகேயனின் திரை ஆளுமை ஒப்பிடமுடியாத வசீகரம் கொண்டது. சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவர் நடிப்பின் இன்னொரு முகத்தை இப்படத்தில் காண்பார்கள். ஆக்‌ஷன் கிங் அர்ஜீன் மிகத் திறமையான நடிகர், அவரது நடிப்பு படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் இருவரும் தங்கள் நடிப்பால் படத்திற்கு புத்துணர்வூட்டியுள்ளார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரும் பலம். நாங்கள் அனைவருமே அவரின் தீவிர விசிறிகள். அவரின் இசை படத்தின் உயிர்ப்பை உறுதி செய்திருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், எடிட்டர் ரூபன் என அனைவரும் தங்கள் படமாக கருதி ஆத்மார்த்தமாக உழைத்திருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் அனைவரும் மிகச் சிறப்பான படத்தை தர கடுமையாக உழைத்திருக்கிறோம் படத்தை உருவாக்கும் போது நாங்கள் அடைந்த இன்பத்தை ரசிகர்கள் படம் பார்க்கும் போது அடைவார்கள் என உறுதியாக நம்புகிறேன் என்றார்.

KJR Studios சார்பில் கொட்டாப்பாடி J ராஜேஷ் தாயாரிப்பில் மித்ரன் R ஜவஹர் இயக்கியிருக்கும் “ஹீரோ” திரைப்படம் டிசம்பர் 20, 2019 அன்று வெளியாகிறது.

ஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா

ஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaniganஒரு படத்திற்கான அங்கீகாரம் என்பது மக்களால் பெரிதாக அங்கீகரிக்கப்பட்ட பிரலபங்கள் அப்படத்தை எதாவது முறையில் அங்கீகரிக்கும் போதுதான். தற்போது புதிதாக தயாராகியுள்ள வணிகன் என்ற படத்தின் ஆடியோ உரிமைதை வாங்கி அப்படம் மீதான நம்பிக்கையை கூட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.

FESTUS PRODUCTIONS என்ற பட நிறுவனம் சார்பில் செந்தில் விஜயகுமார் தயாரிப்பில் டேனியல் VP எழுதி இயக்கியுள்ள படம் வணிகன்.
நேரம், பிரேமம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம்வந்து கொண்டிருக்கும் நக்ஷத்திரா நாகேஷ் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சார்லி, புச்சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – சுரேஷ்குமார்.TR – புவனேஷ்செல்வனேஷன்
ஒளிப்பதிவு – அகஸ்டின் இளையராஜா
பாடல்கள் – மோகன்ராஜன்
எடிட்டிங் – பரமேஷ்கிருஷ்ணா
தயாரிப்பு – செந்தில் விஜயகுமார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் டேனியல்VP.
இவர் இதற்கு முன் இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் டேனியல்VP. கூறியதாவது,

“இது ஒரு எதார்த்தமான திரில்லர் படம். தற்போது சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை இதில் கையாண்டிருக்கிறோம். இந்த படத்தின் பாடல்களை கேட்ட பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இசையமைப்பளார்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தனது யூ1 ரெக்கார்டஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார் அது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறோம். தவிர இந்த படத்தில் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் மோகன்ராஜன் எழுதிய ” வாடி முட்ட கண்ணி ” என்ற பாடலை பாடியுள்ளார். அந்த பாடலை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டார். அது தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது. படம் விரைவில் வெளியாக உள்ளது” என்றார் இயக்குனர் டேனியல்VP.

ஹீரோ பட எடிட்டிங்கில் சிவா முழு ஒத்துழைப்பு வழங்கினார் – படத்தொகுப்பாளர் ரூபன்

ஹீரோ பட எடிட்டிங்கில் சிவா முழு ஒத்துழைப்பு வழங்கினார் – படத்தொகுப்பாளர் ரூபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Editor Ruben and Sivakarthikeyanசமீபத்தில் வெளியிடப்பட்ட ஹீரோ படத்தின் ட்ரைலருக்கு எல்லா தரப்பிலிருந்தும் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக படத்தொகுப்பாளர் ரூபன் தனது குழுவிற்கு கிடைத்து வரும் வரவேற்பால் பெரு மகிழ்ச்சியில் திளைக்கிறார். இந்த பாராட்டுரைகள் அனைத்தும் இயக்குநர் பி.எஸ்.மித்திரனுக்குத்தான் செல்லவேண்டும். காரணம் அவரது தெளிவான பார்வையும் மற்றும் சரியான திட்டமிடலும்தான் என்கிறார்.விஷுவல் புரொமாக்களை எப்படி வடிவமாக்க வேண்டும் என்று குழுவாக நாங்கள் திட்டமிட்டு செயலாற்றியதற்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு எங்களுக்கு மகத்தான மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் ரூபன்.
ஹரோ படத்தின் முன்னோட்டம் முழுவதும் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், மற்ற பாத்திரங்களின் பங்களிப்புக்கும் வாய்பு வழங்கியிருக்கிறது. இது குறித்தும் விவரித்த படத்தொகுப்பாளர் ரூபன் மேலும் தொடர்ந்து கூறியதாவது…
இதற்காக நான் சிவகார்திகேயனுக்குதான் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். மிகப் பெரிய நடிகராக இருந்தும் அவர் எங்கள் பணியில் எப்போதும் குறுக்கிடவில்லை. குறிப்பாக டிரைலர் கட் பண்ணும்போதும் எங்களை முழு சுதந்திரத்தைக் கொடுத்தார்.. டிரைலரையும் பின்னர் முழுப்படத்தையும் பார்த்துவிட்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் என்று சொல்லும் ரூபன், எஸ்.கேயினின் இந்த செய்கையும் பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய ரூபன் ஹீரோ படம் குறித்து கூறியதாவது…
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிலேயே பலரும் சொன்னதை இப்போது நான் மீண்டும் சொல்கிறேன் என்று நினைத்தாலும் கவலையில்லை. அதுதானே உண்மை. ஒரு திரைப்படம் என்பதைத்தாண்டி, சமூகப்பொறுப்புடன் ஒரு காட்சியை கருத்தாக்கம் செய்யும் மித்ரன் வசீகரமான முறையில் அதை வழங்கியிருக்கிறார். ஹீரோ படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய ஜனரஞ்சகப்படம் என்றாலும், இதிலுள்ள செய்தி படம் பார்ப்பர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி பாராட்டும் வரவேற்பும் பெறும் என நான் நம்புகிறேன். திரையில் தோன்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு, ஆதிக்கம் செலுத்தும் யுவன் சங்கர் ராஜா சாரின் மனம் மயக்கும் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் அருமையான ஒளிப்பதிவு என்ற ஹீரோ படத்தின் ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களிடம் வெகுவான பாராட்டுதல்களைப் பெறும் என்றார்.

படத்தொகுப்பாளர் ரூபன் படத்துக்கு இடையூறாக இருக்கும் பாடலையோ காட்சியமைப்பயோ அனுமதிக்க மாட்டார் என்று
படக்குழுவினரிடைய ஒரு பலமான கருத்து.உண்டு. இது குறி்த்து சிரித்துக் கொண்டே விவரித்த ரூபன், இயக்குநர்கள் என்மீது நம்பிக்கை வைத்து பொறுப்புகளை விடும்போது எனக்கு சற்று லேசான நடுக்கம் ஏற்படுவதுண்டு.ஹீரோ படத்தைப் பொறுத்தவரை இது சற்று கடினமான பணியாக இருந்தது. காரணம் இயக்குநர் மித்ரன் மற்றும் எழுத்துப் பணிகளைச் செய்யும் அவரது குழுவினர், ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கத் தக்கவகையி்ல் எடுத்திருந்தனர். படத்துக்கு தேவையில்லை என்று தோன்றும் காட்சிகளை நீங்கள் தாராளமாக வெட்டி எடுத்து விடலாம் என்று சவால் விடுவதுபோல் சுவையான காட்சிகளை கொண்டு வந்து என் எடிட்டிங் டேபிளை நிரப்பியிருந்தார்கள். செதுக்கி செதுக்கி ஹீரோ படத்தை நாங்கள் உருவாக்கிய விதம் எங்கள் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும்,திருப்தியையும் கொடுத்திருக்கிறது. இப்போது ரசிகர்கள் எனும் நீதிபதிகள் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார்.

உலகெங்கும் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரும் ஹீரோ திரைப்படத்தை கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸுக்காக கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபய் தியோல் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இவானா ஆகியோர் சிவகார்த்திகேயனும் இணைந்து முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும் செய்திருக்கின்றனர். கலை இயக்குநராக வி.செல்வகுமாரும், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயனும், பணியாற்றியிருக்கின்றனர். எழுத்துப் பணிகளை எம்.ஆர்.பொன் பார்தித்திபன், அண்டனி பாக்யராஜ், சவரிமுத்து ஆகியோர் செய்திருக்கின்றனர். சவுண்ட் டிசைனிங் பொறுப்பை தபஸ் நாயக்கும் செய்திருக்கின்றனர். பாடல்களை பா.விஜய் எழுத, ராஜு சுந்தரம் மற்றும் சதீஷ் நடனக்காட்சிகளை அமைத்திருக்கின்றனர். ஆடை அலங்காரப் பொறுப்பை பல்லவி சிங் ஏற்க, டிசைன்கள் பொறுப்பை எஸ்.செல்வகுமார் சிவா டிஜிட்டல் ஆர்ட்ஸ் லார்வென் ஸ்டுடியோ, மைண்ட் சென் வி.எப்.எக்ஸ்.செய்திருக்கின்றனர்.
நிர்வாகத் தயாரிப்பாளர் பணிகளை டி.எழுமலையான் ஏற்றிருக்கிறார்

திருவள்ளுவராக மாறும் ஹர்பஜன் சிங்; பிளாக் ஷீப் குழு புதிய முயற்சி

திருவள்ளுவராக மாறும் ஹர்பஜன் சிங்; பிளாக் ஷீப் குழு புதிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Blacksheep teams Adutha 6 Harbhajan Singh as Thiruvalluvarஇணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது.

இதன் துவக்கவிழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ, நடிகரும் டாக்டருமான சேதுராமன், தொலைக்காட்சி புகழ் கோபிநாத், அசார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

பிளாக் ஷீப்பின் அடுத்த 6+1 பற்றிய அறிவிப்புகள்….

1. திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ் :- சிஎஸ்கே அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் ஹர்பஜன் சிங் திருவள்ளூவராக நடிக்கும் வலைத் தொடர் ஒன்றை DUDE விக்கியின் இயக்கத்தில் தயாரிக்க உள்ளது.

இந்த வலைத்தொடரின் 12 பகுதிகளை கொண்ட முதல் சீசன் வரும் பிப்ரவரி 2, 2020 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

2. பிளாக் ஷீப் டிஜிட்டல் விருதுகள் :- தமிழ் டிஜிட்டல் தளத்தில் இயக்கும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தனித்துவமான விருதினை வழங்கி கௌரவப்படுத்திட விருது வழங்கும் விழா நடத்த இருக்கிறார்கள்.

3. பிளாக் ஷீப் வேல்யூ :- பிளாக் ஷீப்பின் புத்தம் புதிய நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் வேல்யூவில் பார்த்து ரசிக்கலாம். பிளாக் ஷீப் ஓடிடி (Black Sheep OTT) என்று சொல்லப்படும் தனி ஆப்-பை அறிமுகப்படுத்தினார்கள்.

4. பிளாக் ஷீப் F3 :- ஜனவரி 5 2020 F 3 (FACES FOR THE FUTURE) என்ற பெயரில் மாநில அளவிலான கல்லூரி திறமைத் திருவிழாவை நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு பிளாக் ஷீப்பில் இணையும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

5. பிளாக் ஷீப் ரீவேம்ப் :- ஜனவரி 2, 2020 ம் தேதி முதல் மேலும் பல புதிய நிகழ்ச்சிகளுடன், மேன்படுத்தப்பட்ட தரத்தில், பல புதுமைகளுடனும் பிரம்மாண்டத்துடனும் பயணிக்கத் தயாராகிவிட்டது பிளாக் ஷீப்.

6. ஆண்பாவம் :- ஒரு ஆண் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளை வேடிக்கையான முறையில் விவாதிக்க வரும் நிகழ்ச்சிதான் ஆண் பாவம். இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் கதாநாயகனான டாக்டர் சேதுராமன் நடிப்பில், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் தன் முத்திரியை பதித்த கார்த்திக் வேணுகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக இருக்கிறது.

12 பகுதிகளை கொண்ட இந்த தொடரின் முதல் சீசன் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் வெளியாக இருக்கிறது.

பிளாக் ஷீப்பின் அடுத்த திரைப்படம் :-

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த பிளாக் ஷீப், தற்போது புட் சட்னி புகழ் ராஜ்மோகன் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் வெற்றிகரமான விநியோகஸ்தராக தன் முத்திரையை பதித்த ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிப்பில், பர்ஸ்ட் காபி அடிப்படையில், பிளாக் ஷீப் புரொடக்‌ஷன்ஸ் மூலம் புதிய படம் தயாரிக்க இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் தற்கால பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, தேவை, ரசனை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், நட்பு மற்றும் இன்றைய சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்ய இருக்கிறார்கள். ஒட்டு மொத்த பிளாக் ஷீப் நட்சத்திரங்களும் நடிக்க, பிளாக் ஷீப் அயாசும், மைக் செட் ஸ்ரீராமும் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

இத்திரைப்படம் கோடை விடுமுறையை குறிவைத்து வெள்ளித்திரைக்கு தயாராகிறது.

Blacksheep teams Adutha 6 Harbhajan Singh as Thiruvalluvar

Blacksheep teams Adutha 6 Harbhajan Singh as Thiruvalluvar

 

More Articles
Follows