போலீஸாக பரத் மிரட்டும் காளிதாஸ் பட டப்பிங் பணிகள் தொடக்கம்

போலீஸாக பரத் மிரட்டும் காளிதாஸ் பட டப்பிங் பணிகள் தொடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Bharath started his dubbing for Kaalidass movieலீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’.

பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில்.

இவர் நாளைய இயக்குநர் சீசன் – 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

முக்கியமான கேரக்டர்களில் ஆதவ் கண்ணதாசனும், சுரேஷ் மேனனும் நடித்திருக்கிறார்கள்.

பரத்திற்கு ஜோடியாக அன் ஷீத்தல் என்ற மலையாள நடிகையை அறிமுகம் செய்கிறோம்.

சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக தடைப்பட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், வேலை நிறுத்தம் முடிவடைந்ததும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

நடிகர் பரத் டப்பிங் பேசி வருகிறார். விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும்.’ என்றார்.

Actor Bharath started his dubbing for Kaalidass movie

சூட்டிங்கே ஸ்டார்ட் ஆகல; ஆனாலும் பிஸ்னஸை ஆரம்பித்தார் சூர்யா!

சூட்டிங்கே ஸ்டார்ட் ஆகல; ஆனாலும் பிஸ்னஸை ஆரம்பித்தார் சூர்யா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya 37 movie hindi satellite rights sold out for huge priceஒரு படம் ஹிட்டானால் அதன் சாட்டிலைட் ரைட்ஸ் மூலம் தயாரிப்பாளர்களுக்கு பெரும் தொகை கிடைத்துவிடும்.

படம் ப்ளாப் ஆனாலும் அந்த படத்தை சீக்கிரமே விற்று சின்ன லாபம் பார்த்து விடுவார்கள்.

தற்போது சேனல்கள் அதிகரித்துள்ளதால் போட்டி போட்டுக் கொண்டு ஹிட் படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை அதிக விலைக்கு வாங்குகின்றனர்.

இதனிடையில் சேனல்களுக்கு இடையே சிண்டிகேட் அமைக்கப்பட்டதால் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவதை சேனல்கள் நிறுத்திக்கொண்டன.

பின்னர் படம் வெளியான பிறகே சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவோம் என அறிவித்தன.

இருந்த போதிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ள படங்களை ரிலீசுக்கு முன்பே வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஹிந்தி ரைட்ஸ் மூலம் பெரும் தொகை கிடைத்து வருகிறது.

லைகா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் ஹிந்தி ரைட்ஸ் ரூ. 20 கோடிக்கு விலைபோயிருக்கிறதாம்.

இந்த படத்தின் சூட்டிங் தொடங்கவே இன்னும் 2 மாதங்கள் உள்ளன என்பதுதான் இங்கே கவனித்தக்கது.

Suriya 37 movie hindi satellite rights sold out for huge price

காதலருக்கு குட் பை சொல்வது ரொம்ப கொடுமை.; ஸ்ருதி ஃபீலிங்ஸ்

காதலருக்கு குட் பை சொல்வது ரொம்ப கொடுமை.; ஸ்ருதி ஃபீலிங்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shrutihassan tweet about her lover Michael Corsales feelingsநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலின் மகள் ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலித்து வருகிறார்.

இந்த காதலுக்கு உலகநாயகனும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

சில மாதங்கள் முன்பு மைகேல் சென்னை வர, இருவரும் மிக நெருக்கமாக இருந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் மும்பை வந்த மைக்கேல் ஸ்ருதிஹாசனுடன் தங்கியுள்ளார்.

அதன்பின்னர் அவர் மீண்டும் லண்டன் சென்றுவிட்டு “ஒவ்வொரு முறையும் இங்கிருந்து புறப்படும் போதும் நான் மிக சோகமாகிவிடுகிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டார்.

அதற்கு ஸ்ருதி எப்படி பதிலளித்துள்ளார் தெரியும்மா..?

“நம்முடன் இருக்க வேண்டும் என நினைக்கும் ஒருவரை விமானத்தில் அனுப்பிவிட்டு குட் பை சொல்வது கொடுமையானது” என பதிவிட்டுள்ளார்.

Shrutihassan tweet about her lover Michael Corsales feelings

shruti haasan‏Verified account @shrutihaasan
The yucky feeling of saying goodbye to someone at the airport when you really want them to stay

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினி படம் இன்னொரு பாட்ஷா.? கபாலி.?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினி படம் இன்னொரு பாட்ஷா.? கபாலி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Karthik Subbaraj movie latest updatesரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் மாதம் 7-ந்தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படம் வெளியாகவுள்ளது.

கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் நிச்சயம் வெளியாகிவிடும்.

தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். திரும்பிய உடன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இந்த படம் அரசியல் சார்ந்த கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் தன் சமீபத்திய பேட்டியில் ரஜினியை வைத்து தான் இயக்கும் படம் ஒரு அதிரடியான ஆக்சன் கதையாக இருக்கும் என தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

அப்படியென்றால் இந்த படம் கபாலி போல் கிளாசிக் ரஜினியை காட்டாமல் பாட்ஷா போல ஒரு மாஸான ரஜினியை காட்டும் என நம்பலாம்.

Rajini and Karthik Subbaraj movie latest updates

இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவானார் நடிகர் வடிவேலு

இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவானார் நடிகர் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actor Vadivelu became Grand Father for twinsநடிகர் வடிவேலு காமெடிக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை எனலாம்.

அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் காமெடியில் முத்திரை பதித்தவர் அவர். சில ஆண்டுகளாக அவரது படங்கள் வெளியாகவிட்டாலும் இன்றுவரை டிவிக்களில் அவரது காமெடிதான் பிரபலம்.

அண்மையில் மீண்டும் ஹீரோவாக இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்கவிருந்தார்.

ஆனால் படம் தாமதம் ஆக ஆக, அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி கோலிவுட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலு வீட்டில் ஒரு சந்தோஷமான விசேஷம் நடந்துள்ளது.

அவரது மகளுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாம்.

ஒரு பெண் குழந்தை மற்றொன்று ஆண் குழந்தையாம்.

ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாத்தாவான உற்சாகத்தில் இருக்கிறாராம் இந்த வைகை புயல்.

அதே உற்சாகத்தோட சினிமாவுக்கு வந்துடுங்க சார்.. நல்லா சிரிச்சி ரொம்ப நாளாச்சு

Comedy Actor Vadivelu became Grand Father for twins

பிரச்னையை பார்த்து கை கட்டி நிக்காதீங்க; மய்யம் விசில் அடிங்க… : கமல்

பிரச்னையை பார்த்து கை கட்டி நிக்காதீங்க; மய்யம் விசில் அடிங்க… : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maiam Whistle App launch on 30th April 2018 to solve peoples problemகடந்த 2017 ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார் கமல்ஹாசன்.

அப்போதே மக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்க ‘மய்யம் விசில்’ என்னும் செயலியை (மொபைல் ஆப்) விரைவில் அறிமுகம் செய்வேன் என அறிவித்தார்.

அதன்படி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ‘மய்யம் விசில்’ என்ற அந்த செயலி வரும் ஏப்ரல் 30ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தற்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள கமல், அதில் பேசியுள்ளதாவது…

காற்றை கெடுத்தார்கள், ஆற்றையும் கெடுத்தார்கள். தண்ணீர் ஓடினால் அது வெறும் ஆறு, சாயம் மட்டும் ஓடினால் அது சாக்கடை. வண்டி ஓட வேண்டிய இடத்தில் மழை தண்ணீர் ஓடுகிறது.

மரம் இருக்க வேண்டிய இடத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதுபோன்ற ஆயிரம் பிரச்னைகள், அநீதிகள், அக்கிரமங்கள், அநியாயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டே இருக்கிறது.

இதற்கெல்லாம் முதல் காரணம் யார் தெரியுமா, நம்மை சுற்றி என்ன நடந்தாலும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் நாம் தான்.

இனி எந்த பிரச்னையையும் பார்த்து, பயந்து, ஒதுங்கி இருக்க வேண்டாம். ஏனென்றால் இனி உங்கள் கையில் விசில் இருக்கிறது. போனை எடுங்கள் மையம் விசில் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள். உங்களை பாதிக்கும் பிரச்னைகளை பதிவு செய்யுங்கள். விசில், அது எப்படி கேட்காமல் போகும்..? என்று பேசியுள்ளார்.

ஆண்ட்ராய்டு, ஐஓஸ் இயங்குதளங்களில் இயங்கும் வகையில் ‘மய்யம் விசில்’ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

Maiam Whistle App launch on 30th April 2018 to solve peoples problem

More Articles
Follows