ரஜினியின் முத்து பட வசூலை முறியடிக்காத பாகுபலி2

rajini muthu baabubali 2கடந்த 1995ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடித்த முத்து படம் வெளியானது.

அதுநாள் வரை இந்தியாவில் மட்டுமே இருந்த ரஜினியின் மார்கெட் ஜப்பான் வரை தொட்டது.

இதனால் இன்று வரை அங்கு ரஜினிக்கு மாபெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அங்கு ரஜினியை டான்சிங் மகாராஜா என்றே ஜப்பானியர்கள் அழைக்கின்றனர்.

அதுபோல் நடிகை மீனாவுக்கும் அங்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

இப்படம் சுமார் 15,00,000 யுஎஸ்டாலர் வரை அப்போதே வசூலித்துள்ளதாம்.

மேலும் ‘முத்து’ படம் ஜப்பான் நாட்டில் ஒரு தியேட்டரில் மட்டும் 22 வாரங்கள் ஓடியுள்ளதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கிட்டதட்ட ஒன்றரை மாதங்களுக்கு முன் ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படம் ஜப்பானில் வெளியாகியுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1800 கோடி வரை வசூலித்துள்ளது.

ஜப்பான் நாட்டில் மட்டும் இதுவரை 5,50,000 யுஎஸ் டாலர் வரை வசூலித்துள்ளதாம்.
உலகம் முழுவதும் இப்படம் கோடிகளை குவித்தாலும் ரஜினியின் முத்து படத்தின் வசூலை இப்படம் முறியடிக்காமல் அங்கு திணறி வருகிறதாம்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Baahubali 2 movie cant beat Rajinis Muthu box office collection

Overall Rating : Not available

Related News

இந்திய சினிமாவையே அதிர வைக்கும் அளவுக்கு…
...Read More
அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம்…
...Read More
ஒரு படம் உருவாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்…
...Read More

Latest Post