ஐஸ்வர்யா ரஜினியை பிரிந்து வாழும் தனுஷுடன் 2வது திருமணம்.?; மீனா ரியாக்‌ஷன் என்ன?

ஐஸ்வர்யா ரஜினியை பிரிந்து வாழும் தனுஷுடன் 2வது திருமணம்.?; மீனா ரியாக்‌ஷன் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு தன் கணவர் வித்யாசாகரை இழந்தார் நடிகை மீனா. இதனையடுத்து சமீப காலமாக மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார் என தகவல்கள் பரவியது.

இதற்கு மீனா பலமுறை மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை பிரிந்து வாழும் தனுஷ் விரைவில் நடிகை மீனாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் கிளம்பியது.

இதனை பிரபல நடிகர் ஒருவரும் உறுதிப்படுத்தும் விதமாக தகவல்களை பரப்பி கொண்டு இருந்தார்.

மேலும் பலர் உண்மை நிலையை அறியாமல் மீனா – தனுஷ் திருமணம் விரைவில் என தலைப்பிட்டு செய்திகளை பரப்பி வந்தனர்.

இந்த நிலையில் இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார் நடிகை மீனா.

அவரின் பதிவில்

” என்னுடைய கணவர் இல்லை என்பதை தற்போது வரை என்னால் நம்ப கூட முடியவில்லை.

தற்போது என் கவனம் எல்லாம் மகளின் எதிர்காலம் மற்றும் சினிமாவை பற்றி தான் இருக்கிறது” என மீனா கூறியுள்ளார்.

2nd marriage with Dhanush . What’s her reaction?

காவலர்களை கண்டதும் காரில் இருந்து இறங்கிய ரஜினி.; ஏன் தெரியுமா.?

காவலர்களை கண்டதும் காரில் இருந்து இறங்கிய ரஜினி.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று சொன்னால் அது மிகையல்ல.

சினிமாவை தாண்டியும் இவரின் எளிமைக்கும் பண்புக்கும் குணத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு, ரெட்டின் கிங்சிலி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலம் கொச்சி அருகே சாலக்குடியில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்றார் ரஜினி.

அப்போது வழக்கம் போல அவரைக் கண்டதும் ரசிகர்கள் ஓடோடி வந்து தலைவா என்று அழைத்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

பிறகு அவர் காரில் ஏறி செல்லும்போது ரஜினியை காண போலீஸ் உயர் அதிகாரிகள் அருகே வந்தனர். அவர்களை கண்டதும் காரில் இருந்து இறங்கி வந்து போலீஸ் உடன் செல்ஃபி எடுத்து புறப்பட்டுச் சென்றார் ரஜினி.

இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rajini got down from the car when he saw the guards

‘பத்து தல’ பரபரப்பில் வீணாகி போகும் ‘விடுதலை’.; தயாரிப்பாளர் கண்டு கொள்வாரா.?

‘பத்து தல’ பரபரப்பில் வீணாகி போகும் ‘விடுதலை’.; தயாரிப்பாளர் கண்டு கொள்வாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் வரிசையில் சிலம்பரசன் & விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் அடங்குவர்.

சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல திரைப்படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உபிலி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

இதற்கு அடுத்த நாள் மார்ச் 31ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகிறது.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

சிம்பு படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பும் எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் பிரமோஷன் தான்.. பத்து தல படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தனஞ்செயன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

ஆனால் விடுதலைப் படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் மந்தமாக உள்ளது.

வெற்றிமாறன் – இளையராஜா ஆகியோரது கூட்டணியின் முதல் படம் இது. இருந்தபோதிலும் போதுமான விளம்பரமும் ப்ரோமோஷனம் இல்லாததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Low promotions for viduthalai compared to Pathu thala

மும்பையில் ரூ. 70 கோடியில் பங்களா வாங்கிய சூர்யா – ஜோதிகா.?!

மும்பையில் ரூ. 70 கோடியில் பங்களா வாங்கிய சூர்யா – ஜோதிகா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘காக்க காக்க’, ‘மாயாவி’ உள்ளிட்ட படங்களில் நடித்த போது சூர்யாவும் ஜோதிகாவும் காதலிக்க தொடங்கினர். இதனையடுத்து அவர்கள் காதல் திருமணமும் செய்து கொண்டனர்.

பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

சூர்யா ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக இருந்த போதிலும் தன் மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக தரமான படங்களை தயாரித்து வருகிறார். ஒரு சில படங்களில் சூர்யாவே நாயகனாகவும் நடித்து வருகிறார்.

தற்போது இவர்கள் தயாரிப்பில் அக்சய்குமார் நடிக்க ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாகி வருகிறது.

எனவே தற்போது சூர்யா குடும்பத்தினர் மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அப்போது தனது குழந்தைகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என இவர்கள் தரப்பில் பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை விடுத்தது வைரலானது.

இந்த நிலையில் மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் சூர்யா – ஜோதிகா சொந்த பங்களா ஒன்றை வாங்கி உள்ளதாகவும் அங்கேயே அவர்கள் வசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் அவர்கள் சொந்த வீடு எதுவும் வாங்கவில்லை என சூர்யா தரப்பில் அவரது பிஆர்ஓ உறுதிப்படுத்தியுள்ளார்.

suriya bought new house in mumbai

JUST IN அமீர் தயாரித்து நடித்த படத்தை வெளியிடும் யுவன் சங்கர் ராஜா

JUST IN அமீர் தயாரித்து நடித்த படத்தை வெளியிடும் யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் இந்த கூட்டணி மட்டும் சரியாக அமைந்து விட்டால் அந்தப் படத்தின் வெற்றி பாதி நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக அமைந்துவிடுகிறது.

இந்த கூட்டணியை நாம் பல படங்களில் பார்த்திருக்கலாம்.. உதாரணமாக மணிரத்னம் & இளையராஜா என்று இருந்த ஒரு காலகட்டம் பல வெற்றி படங்களை கொடுத்தது.

அதன் பிறகு மணிரத்னம் – ஏ ஆர் ரகுமான் கூட்டணி வந்தது. பின்னர் ஷங்கர் – ஏ ஆர் ரகுமான்..

அது போல பி வாசு – இளையராஜா.. பாலா – இளையராஜா.. கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ்.. வெற்றிமாறன் – யுவன் சங்கர் ராஜா.. வெற்றிமாறன் – ஜிவி பிரகாஷ் செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா ஆகியோரது வெற்றி கூட்டணிகளை சொல்லலாம்.

இந்த வரிசையில் இணைந்திருப்பவர்கள் தான் அமீர் மற்றும் யுவன் சங்கர் ராஜா.

இவர்களது கூட்டணியில் உருவான பருத்தி வீரன், ராம் பல படங்கள் வெற்றி வாகை சூடி உள்ளன.

இந்த நிலையில் யுவனின் YSR ஃபிலிம்ஸ் மற்றும் இயக்குனர் அமீரின் அமீர் ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்களின் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் அமீர் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை நாங்கள் இணைந்து வெளியிடுகிறோம் என அமீர் தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

படத்தின் தலைப்பு மற்றும் மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-@afcmovies and @thisisysr ‘s @YSRfilms join together to release a new film in which @directorameer plays a lead role!

Title Announcement Coming Soon…

#AmeerYuvanShankarRajaJoinHands

Yuvan release Ameer’s new film

‘சிறுத்தை’ படத்தில் நடித்த குழந்தையா இது? வைரலாகும் சமீபத்திய புகைப்படம்!

‘சிறுத்தை’ படத்தில் நடித்த குழந்தையா இது? வைரலாகும் சமீபத்திய புகைப்படம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறுத்தையில் கார்த்தியின் மகளாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரமான ரக்ஷனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் ரிலீஸ் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. ரக்ஷனா இப்போது டீனேஜ். சமீபத்திய நேர்காணலில், கிளாசிக்கல் நடனம் கற்றுக்கொள்வதற்காக நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்ததாக அவர் தெரிவித்தார். தான் +2 படித்து வருவதாகவும், படிப்பில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

மேலும் படித்து முடித்த பிறகு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் என்று ரக்ஷனா தெரிவித்துள்ளார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘Siruthai’ movie child actress’ recent photos go viral on social media!

More Articles
Follows