‘பாகுபலி2’ படத்திற்கு எதிர்ப்பு… சத்யராஜால் ராஜமவுலிக்கு வந்த சோதனை

‘பாகுபலி2’ படத்திற்கு எதிர்ப்பு… சத்யராஜால் ராஜமவுலிக்கு வந்த சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathyaraj in baahubali 2இந்திய சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் பாகுபலி.

ராஜமவுலி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இதன் இரண்டாம் பாகம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை வெளியிட கூடாது என கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காவிரி பிரச்சினையின் போது, நடிகர் சத்யராஜ் கன்னடர்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.

எனவே, அவர் நடித்த படத்தை தங்கள் மாநிலத்தில் திரையிடக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

இதனால் பாகுபலி தரப்பு என்ன செய்யலாம்? என ஆலோசித்து வருகிறதாம்.

தாய்லாந்தில் தடை; தாயகம் திரும்பினார் சிம்பு

தாய்லாந்தில் தடை; தாயகம் திரும்பினார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor simbuஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 4 கேரக்டர்களில் நடித்து வருகிறார் சிம்பு.

இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சனாகான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதில் மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய கேரக்டர்களின் டீசர் வெளியாகிவிட்டது.

இந்நிலையில் இதன் அடுத்த கட்ட சூட்டிங்குங்காக அண்மையில் தாய்லாந்து சென்றதாம் படக்குழு.

ஆனால் அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கலவில்லையாம்.

எனவே இந்தியா திரும்பிய படக்குழு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டில் செட் போட்டு சூட்டிங்கை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

எல்லை மீறும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சொல்லும் ‘சிலந்தி-2’

எல்லை மீறும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சொல்லும் ‘சிலந்தி-2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress hari priya hotதென்னிந்திய திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான சிலந்தி படத்தை எழுதி இயக்கி வெற்றிபெற்ற ஆதிராஜன் தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனம் மூலம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ”சிலந்தி-2”

கை நிறைய சம்பாதிக்கும் வேகத்தில் நாகரீக மோகத்தில் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காற்றில் பறக்கவிட்டு, சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறி சிறகடிக்கத் துடிக்கும் பெண்களால் ஏற்படும் விபரீத விளைவுகளும் அதனால் அந்த பெண்களுக்கு உருவாகும் ஆபத்துக்களையும் மையப்படுத்தி பரபரப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ரசனையான காதல்.. நாகரீகமான நகைச்சுவை.. அதிரடி சண்டைக் காட்சிகளுடன்.. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் இந்த த்ரில்லர் படத்தில் விஜயராகவேந்திரா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இவர் கன்னடத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவர். நட்சத்திர குடும்ப வாரிசு.

(Raghavendra is the son of famous Kannada film producer, S. A. Chinne Gowda. He is also related to the actor and singer Rajkumar and is the cousin of the actors Shiva Rajkumar, Raghavendra Rajkumar and Puneeth Rajkumar. His brother, Sriimurali, is also an actor. He married Spandana in 2007)

அர்ஜுனுடன் வல்லக்கோட்டை.. கரனுடன் கனகவேல் காக்க.. சேரனுடன் முரண்.. அட்டக்கத்தி தினேஷுடன் வாராயோ வெண்ணிலவே.. நானியுடன் ஜமீன் உட்பட தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழிகளில் 30 படங்களில் நடித்திருக்கும் ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

ஒரு ஸ்பெஷலான குத்துப்பாடலுக்கு சிறுத்தை புகழ் மேக்னா நாயுடு செமத்தியாக ஆட்டம் போட்டிருக்கிறார்.. இவர்களுடன் ஜஸ்வர்யா விஷால் ஹெக்டே.. சத்யஜித்.. ரங்கா உட்பட பலர் நடித்துள்ளனர்..

இசை-பெ.கார்த்திக்.. மழை..லீ..பொக்கிஷம்..ராமன் தேடிய சீதை.. சென்னை 28 பார்ட்-2.. உட்பட பல படங்களில் பணியாற்றிய ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எடிட்டிங் ஸ்ரீகாந்த்-வி.ஜே.சாபு. பாடல்கள் சினேகன்.. நெல்லைபாரதி.. ஆதிராஜன்.. நடனம் ராதிகா..கலைக்குமார்.. ஸ்டண்ட் மாஸ் மாதா..

படத்தின் தலைப்பு மாற்றம் பற்றி இயக்குநர் ஆதிராஜனிடம் கேட்டபோது…

பெங்களூர், கோவா, மைசூர் சாமுண்டி ஹில்ஸ் உட்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழ், கன்னட மொழிகளில் உருவான’ ரணதந்திரா’ தமிழில் ’அதர்வனம்’; என பெயரிடப்பட்டிருந்தது.

இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த பலர் ’அதர்வனம்’ என்ற தலைப்பு அவ்வளவு புரியவில்லை எனவும், ’சிலந்தி பார்ட் 2’ என்பதே இப்படத்திற்கு சரியாக இருக்கும் என்று சொன்னதால் தற்போது சிலந்தி-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது.

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

சிலந்தி படத்தின் முதல் பாகத்தில் நடிகை மோனிகா கவர்ச்சியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hari Priya and Vijaya Raghavendra starring in Silandhi 2 Directed by Aadhirajan

silanthi-2 Haripriya (4)
.

‘விவேகம்’ படத்தில் அஜித்தின் பைக் சாகச டீசர் வீடியோ லீக்கானதா.?

‘விவேகம்’ படத்தில் அஜித்தின் பைக் சாகச டீசர் வீடியோ லீக்கானதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தவிர அஜித்தின் 4/5 போட்டோக்கள் வெளியானது.

இதனை அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து கொண்டாடி வந்தனர்ர்.

படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில், அஜித் பைக்கில் சாககம் செய்வது போன்ற ஒரு நிமிடம் 7 நொடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது விவேகம் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளா? அல்லது ரசிகர்கள் எடிட்டிங் செய்த வீடியோவா? என்பது குறித்த தகவல்கள் இல்லை.

ஆனால் எடிட்டிங் அருமையாக இருப்பதால் ரசிகர்கள் அதை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Whether Ajith bike stunt Video leaked from Vivegam movie

விக்ரமுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்த விஜய் நண்பர் ஸ்ரீமன்

விக்ரமுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்த விஜய் நண்பர் ஸ்ரீமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sketchவிஜய்யின் நண்பராக பல படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீமன்.

இவர் தற்போது 18 வருடங்களுக்கு பிறகு விக்ரமுடன் இணைந்து ஸ்கெட்ச் படத்தில் நடித்து வருகிறார்.

இதுபற்றிய தன் அனுபவத்தை இங்கே பகிர்கிறார்.

சேது’ படத்துக்கு முன்பே நானும், விக்ரமும் நெருங்கிய நண்பர்கள். அவருக்கு நான் நடனத்தையும், எனக்கு அவர் நடிப்பையும் கற்றுக் கொடுத்தார்.

இதை நாங்கள் கலா மாஸ்டர் பள்ளியில் இருக்கும் போது பழகுவோம்.

‘சேது’வுக்கு முன்பாகவே எங்களுக்கு இருவருக்குமே ஒரு பெரிய வாய்ப்பு ‘புதிய மன்னர்கள்’ படம் மூலமாக அமைந்தது. எனக்கு அது தான் முதல் படம். கிட்டதட்ட அண்ணன் – தம்பி போலத் தான் பழகுவோம்.

நிறைய விஷயங்கள் பேசிக் கொள்வோம்.

நாம் இருவரும் இணைந்து நடிப்பதற்கு சரியான கதாபாத்திரம் அமைய வேண்டும் என்று சொல்வார். எங்கள் இருவருக்குமே ‘சேது’ ஒரு முக்கியமான படமாக அமைந்தது.

அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டிய படம் ‘தில்’. அதில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

மீண்டும் விக்ரமுடன் நடிக்க நல்ல வாய்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். அது விஜய் சந்தர் சாருடைய ‘ஸ்கெட்ச்’ படம் மூலமாக அமைந்துள்ளது.

எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதற்காக கொஞ்சம் உடல் எடையை அதிகரித்துள்ளேன். இத்தனை வருடங்கள் கடந்தாலும் விக்ரமிடம் எந்ததொரு மாற்றமுமில்லை.

‘சேது’வுக்கு முன்னால் கென்னி என்ற பெயரில் தான் அழைப்போம். அப்போது எப்படியிருந்தாரோ அப்படித் தான் இப்போது இருக்கிறார். அவருடைய பெயருக்கு பின்னால் தேசிய விருதுகள் இணைந்திருப்பதை எல்லாம் பேச்சில் காட்டிக் கொள்ளவே இல்லை.

’சேது’ படப்பிடிப்பு நடத்திய வீட்டில் தான் ‘ஸ்கெட்ச்’ படமும் படமாக்கி வருகிறார்கள். ஆகையால் இருவருமே இங்கு தானே படப்பிடிப்பு செய்தோம் என்று பழைய நினைவுகளில் நிறைய மூழ்கினோம்.

எங்கள் இருவரையுமே நல்ல நடிப்பார்கள், கண்டிப்பாக கதாபாத்திரங்கள் கொடுக்கலாம் என்று மற்ற இயக்குநர்களுக்கு நம்பிக்கை அளித்த படம் ‘சேது’. முதலில் அந்த வீட்டுக்குச் சென்றவுடன் எங்கள் இருவரிடமும் மெளனம் தான் இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

படப்பிடிப்பில் நான் இந்தக் காட்சியை இப்படி மாற்றி பண்ணட்டுமா என்று கேட்டு நடிப்பேன். அப்போது அது எனக்கு பெயர் வரக்கூடிய காட்சியாக இருந்தாலும், விக்ரமும் இப்படி செய்யுங்கள் இன்னும் நன்றாக இருக்கும் என்பார். நடிகர்களை ஊக்குவிப்பது என்பது அவரிடம் இருக்கும் மிக முக்கியமான குணமாகப் பார்க்கிறேன்.

நல்ல மெச்சூர் ஆயிட்டா.. நிறைய கதாபாத்திரங்களில் நடிக்கிற என்று ரொம்ப பாராட்டினார். இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் விஜய் சந்தர் சாருக்குத் தான் நன்றி சொல்லணும். என்றார் ஸ்ரீமன்.

Vijay friend Actor Sriman taught dance movements to Vikram

sriman with vijay

விஜய்-ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தில் 3 ஹீரோயின்கள்

விஜய்-ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தில் 3 ஹீரோயின்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay 62 Project may have 3 heroinesஅட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யாமேனன் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தை அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்க, லைக்கா தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்த படத்திலும் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஏற்கெனவே ராகுல் ப்ரித்திசிங் நடிக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இவருடன் டாப்சி மற்றும் எமிஜாக்சன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay AR Murugadoss Project may have 3 heroines

More Articles
Follows