VERA LEVEL SAGO.. சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் ஏஆர். ரஹ்மான் வெளியிட்ட ‘அயலான்’ பாடல்

VERA LEVEL SAGO.. சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் ஏஆர். ரஹ்மான் வெளியிட்ட ‘அயலான்’ பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vera Level Sago (2)நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பிப்ரவரி 17ல் தனது 36வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் அவரின் ‘அயலான்’ பட பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான்.

இந்த படத்தில் ரகுல்பிரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள பாடிய இப்பட முதல் பாடல் VERA LEVEL SAGO இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார்.

இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது.

Ayalaan first single VERA LEVEL SAGO released by AR Rahman

‘வணக்கம் தமிழா’ சாதிக் இசையமைத்து தயாரித்து இயக்கும் படம்..; ‘ஜீவி & கன்னி மாடம்’ கலைஞர்கள் கூட்டணி

‘வணக்கம் தமிழா’ சாதிக் இசையமைத்து தயாரித்து இயக்கும் படம்..; ‘ஜீவி & கன்னி மாடம்’ கலைஞர்கள் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vanakkam Tamizha saathik (2)வணக்கம் தமிழா மூவிஸ் சார்பில் ‘வணக்கம் தமிழா’ சாதிக் இசையமைத்து தயாரித்து இயக்கும் படம் புரொடக்ஷன் நம்பர்-1.

இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனத்தை ‘ஜீவி’ பட புகழ் பாபுதமிழ் எழுதுகிறார்.

அஜய் வாண்டையார், கன்னிமாடம் ஶ்ரீராம் கார்த்திக் மற்றும் VJ பப்பு ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர்.

மற்ற கதாபாத்திர தேர்வு நடைபெற்று வருகிறது.

படத்தொகுப்பை ‘பியார் பிரேமா காதல்’ புகழ் மணிகுமரன் சங்கரா மேற்கொள்கிறார்.

ஒளிப்பதிவு இனியன் ஜே. ஹாரிஸ்.

இத்திரைப்படம் டார்க் ஃபேண்டஸி ஜானரில் உருவாக்கப்படவுள்ளது.

மார்ச் மாதத்தில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Vanakkam Tamizha Saathik new film details here

‘உங்க வார்த்தைக்கு கட்டுப்படுறோம் தல’..; வலிமை அப்டேட் கேட்டவர்களை ஆஃப் செய்த அஜித்.. அடங்கிய ரசிகர்கள்

‘உங்க வார்த்தைக்கு கட்டுப்படுறோம் தல’..; வலிமை அப்டேட் கேட்டவர்களை ஆஃப் செய்த அஜித்.. அடங்கிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Kumarஅஜித் நடித்து வரும் ‘வலிமை’ பட அப்டேட்டை அவரது ரசிகர்கள் கடவுள் முதல் முதல்வர் வரை கேட்டனர்.

எனவே ஓரிரு தினங்களுக்கு முன் அஜித் தரப்பில்…

“எனது ரசிகர்கள் என்ற பெயரில் தான் நடித்துக் கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு போன்ற இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை மனம் வருந்தச் செய்துள்ளது.

படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அது குறித்து பட தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து முடிவு செய்ய உள்ளேன். அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு சினிமா பொழுதுபோக்கு. ஆனால் எனக்கு அது தொழில். நான் எடுக்கும் முடிவுகள் சினிமா மற்றும் சமூக நலம் சார்ந்தவையாக இருக்கும்” என தெரிவித்து ஓர் அறிக்கையை தன் மேனேஜர் மூலம் வெளியிட்டார் நடிகர் அஜித்.

இந்த நிலையில் அஜித்தின் அறிக்கையை ஏற்கும் வகையில் மதுரையில் அவரது ரசிகர்கள் “உங்களது வார்த்தைக்கு கட்டுப்பட்டு காத்திருக்கிறோம் தல” என்ற வாசகம் கொண்ட போஸ்டரை பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர்.

Thala fans reaction on Ajith’s recent statement

JUST IN: +2 Public Exam Time Table.. மே 3 முதல் ஆரம்பம்..; தேர்வு அட்டவணை வெளியீடு

JUST IN: +2 Public Exam Time Table.. மே 3 முதல் ஆரம்பம்..; தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

+2 students (2)கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகள் இயங்காமல் இருக்கின்றன.

எனவே பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுத்தேர்வை கணக்கில் கொண்டு 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்காக பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டன.

கிட்டத்தட்ட 30-40% வரை குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, வகுப்பு நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி அந்த மாத இறுதியில் முடிவடையும்.

தற்போது கொரோனா காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் மே மாதம் நடைபெறவுள்ளன.

அதாவது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு பிற்பகல் 1. 15 மணிக்கு முடிவடையும்.

மாணவர்களுக்கு கேள்வித்தாள்களை படிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

+2 பொதுத் தேர்வு அட்டவணை இதோ…

Tamilnadu 12th Time Table 2021 Out

+2 Time Table

துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கம்..; தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு

துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கம்..; தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரியில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் கடந்த சில வருடங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.

தங்கள் அரசு பணிகளை செய்யவிடாமல் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பிரச்னை செய்வதாக முதல்வர் நாராணயணசாமி தெரிவித்து வந்தார்.

எனவே கிரண் பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் மனுவை புதுச்சேரி முதல்வர் கொடுத்திருந்தார்.

இதனிடையே புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம் ஏற்ப்பட்டது.

4 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

மொத்தம் 33 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம், சபாநாயகர் சிவக்கொழுந்துவுடன் சேர்த்து 14 ஆக குறைந்துள்ளது.

இவை தவிர 3 நியமன எம்.எல்.ஏக்கள் உடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்தது.

எனவே காங்கிரசின் ஆட்சி புதுச்சேரியில் தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. சபாநாயகரும் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பை ஏற்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

கிரண் பேடி விடுவிப்புக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Kiran Bedi removed as Puducherry LG and Tamilisai Soundararajan given additional charge

தெலுங்கு ரசிகர்களையும் வியக்க வைத்த விஜய் சேதுபதி..; மாஸ் காட்டும் மக்கள் செல்வன்

தெலுங்கு ரசிகர்களையும் வியக்க வைத்த விஜய் சேதுபதி..; மாஸ் காட்டும் மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi uppena (1)புஜ்ஜி பாபுவின் இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி் நடித்த தெலுங்கு படம் ‘உப்பெனா’.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு பத்திரிகையாளர்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில் விஜய்சேதுபதியின் நடிப்பு வியக்க வைத்துள்ளது.

அவரின் நடிப்பை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படம் வெளியான மூன்று நாட்களிலேயே சுமார் 45 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.

தமிழை போலவே தெலுங்கிலும் மாஸ் காட்ட தொடங்கி விட்டார் மக்கள் செல்வன்.

Massive response for Vijay Sethupathi acting in telugu movie

More Articles
Follows