தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘அசுரன்’.
சமூகத்தில் நிலவும் சாதி & அதிகார அரசியல் போன்றவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வெளியானது.
வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் தனுஷ், மஞ்சுவாரியார், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், டீஜெய் அருணாச்சலம், அம்மு அபிராமி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
நடிகர் கருணாஸ் மகன் கென்னின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
கலைப்புலி தாணு தயாரித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வசூல் வேட்டையாடியது இந்த திரைப்படம்.
எனவே நடிகர் தனுஷ் டுவிட்டரில் தனது புரொபைல் பெயருக்கு கீழே ‘அசுரன்’ என வைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஜப்பானில் நடைபெறும் ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.
மேலும் சிறந்த தமிழ் பட பிரிவிலும் போட்டியிடுகிறது.
இம்மாதம் மார்ச் 27, 28 தேதிகளில் இந்த விருது வழங்கும் விழா ஓசாகா நகரில் நடைபெறுகிறது.
Asuran will be screened at Osaka film festival