‘சப்தம்’ பட அப்டேட் : 90s நட்சத்திரங்களை களமிறக்கும் அறிவழகன்

‘சப்தம்’ பட அப்டேட் : 90s நட்சத்திரங்களை களமிறக்கும் அறிவழகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்து வரும் படம் ‘சப்தம்’.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

‘சப்தம்’ படத்தின் முதல் ஷெட்யூல் சில வாரங்களுக்கு முன்பு மூணாறில் முடிவடைந்த நிலையில், நடிகை லட்சுமி மேனன் தினங்களுக்கு முன்பு ‘சப்தம்’ படப்பிடிப்பில் இணைந்தார்.

இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது மற்றும் நடிகை லைலா சமீபத்தில் அணியில் இணைந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகை சிம்ரன் ‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

மேலும், சிம்ரனும் ‘சப்தம்’ படத்தின் அவரது பகுதிகளின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

நடிகை சிம்ரனை ‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்ததை இயக்குனர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ‘சப்தம்’ படத்திற்கு சிம்ரனை வரவேற்கிறேன்” என்று எழுதி இருந்தார்.

Simran joined the shooting of ‘Sabdam’ movie

தனுஷ் படத்தில் இணைந்த சூர்யா – கார்த்தி பட நடிகர்

தனுஷ் படத்தில் இணைந்த சூர்யா – கார்த்தி பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜிவி .பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நடிகர் வினோத் கிஷன் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றாலத்தில் நடந்து வரக்கூடிய படப்பிடிப்பு அட்டவணையில் இணைந்துள்ளார்.

வினோத் கிஷன், பாலாவின் ‘நந்தா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி , ‘நான் மகான் அல்ல’ படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடித்த பிறகு அவரது புகழ் அதிகரித்தது.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வினோத் கிஷன்

Actor Vinoth Kishan joins the cast of ‘Captain Miller’

கல்பாக்கத்தை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா செல்லும் ‘இந்தியன் 2’ படக்குழு

கல்பாக்கத்தை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா செல்லும் ‘இந்தியன் 2’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், கமல்ஹாசன் கல்பாக்கத்தில் உள்ள சத்ராஸ் டச்சு கோட்டையில் ஒரு வாரத்திற்கும் மேலாக ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் கல்பாக்கம் ஷெட்யூல் இப்போது முடிவடைந்துவிட்டதாகவும், சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் 2’ அணி தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் எனத் தெரிகிறது.

மேலும், தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து, ‘இந்தியன் 2’ அணி தாய்லாந்து செல்லவிருக்கிறது.

வெளிநாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Kamal Haasan’s ‘Indian 2’ Kalpakkam schedule wrapped up

அருள்நிதி படத்தை தயாரிக்கும் ‘டாடா’ நிறுவனம்.; டைட்டிலுடன் மோசன் போஸ்டர் வெளியீடு

அருள்நிதி படத்தை தயாரிக்கும் ‘டாடா’ நிறுவனம்.; டைட்டிலுடன் மோசன் போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019ல் ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ படத்தை இயக்கிவர் கௌதமராஜ்.

இவர் அடுத்து அருள்நிதி நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தை ‘டாடா’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது

இப்படத்திற்கு ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இதில் நாயகியாக ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் துஷாரா விஜயன் நடிக்க சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ராமநாதபுரம், சிவகங்கை, இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கழுவேத்தி மூர்க்கன்

Arulnithis Kazhuvethi moorkkan motion poster goes viral

@sy_gowthamraj ?
Production @Olympiamovis
Producer @ambethkumarmla
Cast: @officialdushara
Cast: @ActorSanthosh
DOP: @Sridhar_DOP
Music: @immancomposer
@cheqba
@sharmaseenu11 @donechannel1

Here is the impressive motion poster of @arulnithi ‘s #Kazhuvethimoorkkan!
https://t.co/DgP73xlkZd

விக்னேஷ் சிவனை கழட்டிவிட்ட அஜித்.; கை கொடுக்கும் கமல்.; டபுள் ஹீரோஸ் யார்.?

விக்னேஷ் சிவனை கழட்டிவிட்ட அஜித்.; கை கொடுக்கும் கமல்.; டபுள் ஹீரோஸ் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைக்கா நிறுவனம் அறிவித்தது.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் விக்கியை அந்த படத்தில் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

எனவே ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.

இந்த நிலையில் விக்கியின் புதிய படத்தை தயாரிக்க கமல்ஹாசன் முன் வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கமல் தயாரிக்கும் இந்த படத்தில் ‘லவ் டுடே’ நாயகன் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Kamal Vignesh Shivan Pradeep Ranganathan new project updates

‘சந்திரமுகி 2’ படத்தின் தனது படப்பிடிப்பை முடித்த கங்கனா ரனாவத்

‘சந்திரமுகி 2’ படத்தின் தனது படப்பிடிப்பை முடித்த கங்கனா ரனாவத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சந்திரமுகி 2’.

‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, டி.எம்.கார்த்திக் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், கங்கனா ரனாவத், இப்படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார்.

மேலும், ராகவா லாரன்ஸுடன் இருக்கும் சில படங்களை கங்கனா ரனாவத் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Kangana Ranaut has completed shooting of Chandramukhi 2

More Articles
Follows