ஒவ்வொரு ப்ரேமையும் மீட்டெடுக்கிறது.. காத்திருக்க முடியாது.; ஆனந்தத்தில் அருண் விஜய் பதிவு

ஒவ்வொரு ப்ரேமையும் மீட்டெடுக்கிறது.. காத்திருக்க முடியாது.; ஆனந்தத்தில் அருண் விஜய் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’.

இப்படத்தில் எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அருண் விஜய் தனது பகுதியின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டார்.

ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசும் வீடியோவைப் பகிர்ந்த நடிகரின் ட்வீட், “ஒவ்வொரு பிரேமையும் மீட்டெடுக்கிறது!! மிஷன் அத்தியாயம் 1 மூடப்பட்டது. உற்சாகம்!! காத்திருக்க முடியாது!!” என கூறினார்.

மேலும், இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Arun Vijay completes dubbing for ‘Mission 1’

மாணவிகளுக்காக ‘அயலி’ ஸ்பெஷல் ஷோ.; பெருமையான படைப்பு என அமைச்சர் பாராட்டு

மாணவிகளுக்காக ‘அயலி’ ஸ்பெஷல் ஷோ.; பெருமையான படைப்பு என அமைச்சர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வலையில் ZEE5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.

ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி இணையத் தொடர் பெண்ணடிமைத்தனத்தை அழுத்தமாக பேசி, பெண் கல்வி மீது புதிய ஒளி பாய்ச்சியது. திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரிடமும் பெரும் பாரட்டுக்களை குவித்தது.

இத்தொடரை பள்ளிகளில் திரையிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அழுத்தமாக கோரிக்கை வைத்தனர்.

தற்போது அந்த வகையில் முதல் முன்னெடுப்பாக ZEE5 தளம் மூலம், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக அயலி இணையதொடர் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.

இந்த திரையிடலில் 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பை சார்ந்த 35 மாணவிகள் பங்கேற்றனர்.

இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ், முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திரு கே. நந்தகுமார் ஐஏஎஸ்., கமிஷனர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுடன் உரையாடி வாழ்த்து தெரிவித்தனர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மேலும் இவ்விழாவினில் ZEE5 தெற்கு தலைமை கிளஸ்டர் அதிகாரி திரு. சிஜு பிரபாகரன், ZEE5 நிறுவன தலைமை அதிகாரி கௌசிக் நரசிம்மன், அயலி தொடரின் தயாரிப்பாளர் S. குஷ்மாவதி இயக்குநர் முத்துக்குமார், நடிகை அபி நட்சத்திரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது…

அயலி நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய படைப்பு முதலில் இந்த இணையத்தொடருக்காக ZEE5 நிறுவனத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

இது ஒரு பொழுது போக்கு தொடர் அல்ல, நாம் பெண்ணடிமைத்தனத்தில் எந்த இடத்திலிருந்து இப்போதைய நிலைக்கு வந்துள்ளோம் என்பதற்கு சான்றாக இந்த தொடர் உருவாகியுள்ளது.

கல்வி என்பது ஆண் பெண் என பார்க்காமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதற்கு இந்த அரசாங்கம் பாடுபட்டு வருகிறது. கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவுத்திட்டம் முதலாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாம் பெரியார் அண்ணா கலைஞர் காலங்களில் பெண்ணுரிமைக்காக போராடி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். இதனை மிக அழகாக இந்த தொடர் சித்தரித்துள்ளது இதனை உருவாக்கிய குழுவிற்கும் நடித்த நடிகர் நடிகையர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார் அன்பில் மகேஷ்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

TN Minister Appreciated Ayali special screening for girl students

புத்தகங்களை ஆட்டோகிராஃப் போட்டு இலவசமாக வழங்கும் நடிகர் சரத்குமார்

புத்தகங்களை ஆட்டோகிராஃப் போட்டு இலவசமாக வழங்கும் நடிகர் சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னுடைய வீட்டு நூலகத்திலிருந்து புத்தகங்களை மக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தொடங்கியுள்ளார்.

தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்…

“நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6,000 புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வது தான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று நான் எண்ணினேன்.

சரத்குமார்

இறைவன் ஒரு தனி மனிதனிடம் அதிகமான செல்வத்தை தருகிறான் என்று சொன்னால், அது பொருட்ச்செல்வமாக இருக்கலாம், அறிவு செல்வமாக இருக்கலாம், அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளில் நான் படித்திருக்கிறேன், அந்த பண்பை பழகிக்கொண்டும் இருக்கிறேன்.

என்னிடம் உள்ள இந்த புத்தகங்களை நூலகத்தில் கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள், சிலர் விற்று விடலாம் என்று கூறினார்கள்.

இந்த புத்தகங்களில் இருந்து நான் கற்றுக் கொண்ட விஷயங்களை பிறரும் படித்து பயன்பெற வேண்டும் என்கிற அடிப்படையில் இலவசமாகவே வீட்டின் வெளியில் இந்த புத்தங்களை வைத்திருக்கிறேன்.

நான் வீட்டில் இருக்கும் போது வந்து வாங்குவோருக்கு புத்தகத்தில் நான் கையெழுத்திட்டு தந்து வருகிறேன்.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் கைபேசி, அமேசான் கிண்டில், ஐபேட், மடிக்கணினி ஆகியவைகளால் புத்தக வாசிப்பு குறைந்துள்ளது. இதனால் புத்தக வாசிப்பை மேலும் முன்னெடுத்து செல்லவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

இதே போல பிறரிடம் புத்தகங்கள் அதிகமாக இருந்தால் அவர்களும் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்று சரத்குமார் கூறினார்.

இந்த முன்முயற்சியின் பலனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சரத்குமார்

Actor Sarathkumar autographs books and gives them away for free

மிருதா.. மிருதா.: மனித வடிவில் இருக்கும் மிருகம் வெற்றிமாறன்.. – சீமான்

மிருதா.. மிருதா.: மனித வடிவில் இருக்கும் மிருகம் வெற்றிமாறன்.. – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ‘விடுதலை’ திரைப்படம் கடந்த மாதம் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தை பார்த்த பல்வேறு தரப்பினரும் பாராட்டி இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் பட குழுவினரை அழைத்து நேரில் பாராட்டு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ‘விடுதலை’ படத்தை பார்த்து தன் கருத்தை பேசியுள்ளார் சீமான்.

அவர் பேசியதாவது..

“தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்பாளிகள் உள்ளனர்.

பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா எனப் பல படைப்பாளிகள் வந்துள்ளனர்.

அந்த வரிசையில் வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் சிறந்த படங்களை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

‘விடுதலை’ போன்ற படத்தை எடுப்பதற்கு கடும் உழைப்பை கொட்ட வேண்டியிருக்கிறது.

அடர்ந்த காட்டுக்குள் பயணித்து மலையில் ஏறி பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர்.

வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம் அந்த வெறியில் தான் அவர் படம் எடுக்கிறார். அது பாராட்டத்தக்கது” என பேசியுள்ளார் சீமான்.

seeman praises of vetrimaaran

பிரபாஸ் – தீபிகா – அமிதாப் இணையும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ

பிரபாஸ் – தீபிகா – அமிதாப் இணையும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘ப்ராஜெக்ட் கே’.

இந்த படத்தின் உருவாக்கத்தின் போது படமாக்கப்பட்ட காணொளியின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டிருக்கிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘ப்ராஜெக்ட் கே’. ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் அதிக பொருட்செலவில் தயாராகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தனித்துவமான பாணியில் விளம்பரப்படுத்த திட்டமிட்ட படக் குழுவினர், இதன் ஒரு பகுதியாக ‘ஃபிரம் ஸ்க்ராட்ச்’ எனும் பெயரில் படத்தின் முன் தயாரிப்பு பணிகளின் காணொளியை வெளியிட்டனர்.

இந்த காணொளியின் முதல் பாகத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிப்பது குறித்த பல விசயங்கள் இடம் பிடித்திருந்தது.

இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இதனையடுத்து படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் காணொளியின் இரண்டாவது பாகத்தில், ‘அசம்பிளிங் தி ரைடர்ஸ்’ என்ற பெயரில் எதிர் நாயகனுக்குரிய சீருடை பட்டாளம் பற்றிய விசயங்கள் இடம் பிடித்திருக்கிறது.

இது இந்தத் திரைப்படத்தின் விலை உயர்ந்த பகுதி என தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

தொழில்நுட்ப ரீதியில் இந்த ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படம் அனைவராலும் பேசப்படும் படைப்பாக இருக்கும்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், ஐம்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால்.. பொன்விழா படைப்பாக ‘ப்ராஜெக்ட் கே’ வைத் தயாரித்து வருகிறது.

வைஜெயந்தி மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரித்து வரும் இந்த படத்தில் ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.

‘பிக் பி’ என செல்லமாக போற்றப்படும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Prabhas Deepika Amithab starree Project K making video is here

ஹரிஸ் – இவானா இணையும் LGM பட போஸ்டரை வெளியிட்ட கிரிக்கெட்டர் தோனி

ஹரிஸ் – இவானா இணையும் LGM பட போஸ்டரை வெளியிட்ட கிரிக்கெட்டர் தோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படம் ‘எல்.ஜி. எம்’.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியது. இதனை இப்பட தயாரிப்பாளர் எம். எஸ் தோனி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘எல். ஜி. எம்’.

இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஃபில் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வரும் இப்படத்தின் தயாரிப்பாளரான விகாஸ் ஹசிஜா பேசுகையில்…

‘எல். ஜி. எம்’ சிறப்பாக உருவாகி வருகிறது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பின்னணி வேலைகளைத் தொடங்கவிருக்கிறோம்.

தமிழ் திரையுலகில் எங்களின் சிறப்பான பயணம் தொடங்கி இருக்கிறது. மேலும் இது நல்ல அனுபவங்களையும் வழங்கி இருக்கிறது.” என்றார்.

படத்தின் படைப்புத்திறன் நிர்வாக தலைவரான பிரியன்சு சோப்ரா பேசுகையில், ” எல் ஜி எம் புதுமையான உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் பல ஆச்சரியமளிக்கும் விசயங்கள் இடம்பெற்றிருக்கிறது. திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர்களின் முழுமையான பங்களிப்புடன் இந்த படைப்பு உருவாகி வருகிறது. நேர்த்தியாகவும், தோழமையுடனும் தயாராகி வரும் இதனை நாங்கள் மிகவும் ரசிக்கிறோம்” என்றார்.

LGM

Legendary Cricketer MS Dhoni reveals the First Look of LGM

More Articles
Follows