மாற்றுத் திறனாளியாக நடிக்கும் ரோஹினி

மாற்றுத் திறனாளியாக நடிக்கும் ரோஹினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’திரைப்படத்தில் டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார் பட்டாளம் சுந்தரிபாய் பாத்திரத்தில் நடிக்க,அவருக்கு நேரெதிரான லதாம்மா என்ற காது கேட்காத வாய் பேசாத ஒரு ஆழமான அன்னை வேடத்திற்காக ரோகிணி அவர்களை அணுகினேன்.

அவரிடம் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தன்னை அந்த லதாம்மாவாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்.அவருடனான உரையாடல்கள்,காட்சி விவரங்களைக் கூட அதன்பின் சைகை மொழியிலேயே என்னை சொல்லப் பணித்தார்…

கதாநாயகன் ஆரவ் மற்றும் புதுமுகம் விஹான் ஆகியோருடன் பயிற்சிப் பட்டறையாக அது விரிவடைந்தது.

படப்பிடிப்பின் போது அம்மா உணவகத்தில் பணி புரியும் ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணை எங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரோகிணி!

ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் காட்சி முடிந்தவுடன் கூட அவர் அதிலிருந்து சகஜ நிலைக்குத் திரும்ப பல மணி நேரம் பிடித்தது!

படத்தை திரையில் காணும்போதும் பார்வையாளர்கள் அதேவிதமான உணர்ச்சிக்கு ஆட்படுவார்கள் என்பது ஒரு இயக்குனராக என் அசைக்கமுடியாத நம்பிக்கை!

12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)தளபதியின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அனைத்து தொகுதி தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள், தொண்டரணி தலைவர்கள் தொகுதி நிர்வாகிகள், கிளை மன்ற இயக்கத் தலைவர்கள்,
உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து நேற்று செஞ்சி சாலையில் உள்ள பாரதிதாசன் திடலில் 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
அரிசி 1045 நபருக்கு தலா 5 கிலோ வீதமும், புடவை 945 பெண்களுக்கும், சர்க்கரை 445 நபருக்கு தலா 5 கிலோ வீதமும் ,பள்ளி மாணவர்களுக்கு 445 பேருக்கு ஸ்கூல் பேக்,
ஆடு ஒரு நபருக்கும் ,டிபன் கடை தள்ளுவண்டி ஒரு நபருக்கும், டிபன் பாக்ஸ் 545 நபருக்கும், சில்வர் பாத்திரம் 145 நபருக்கும் ,அயன்பாக்ஸ் 145 நபருக்கும்,
பிளாஸ்டிக் குடம் 145 நபருக்கும் ,விளையாட்டுப் பொருட்கள் கிரிக்கெட் செட் 3 குழுவிற்கும் ,வாலிபால் செட் 5 குழுவிற்கும் ,கேரம் போர்டு 5 நபருக்கும் ,
நோட்புக் 645 மாணவ மாணவிகளுக்கும் ,தனி நபர் காப்பீட்டு திட்டம் 145 நபருக்கும் ,தலைக்கவசம் 45 நபருக்கும் ,கடிகாரம் 245 நபருக்கும் ,பிளாஸ்டிக் பாக்ஸ் 545 நபருக்கும்,
புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தலா 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம், கல்வி உதவித்தொகை
தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க செயலாளர் சரவணன் மற்றும் புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க உறவுகள் முன்னிலையில் அகில இந்திய தளபதி
விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுவை மாநில தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தந்தை கேப்டன் விஜயகாந்தின் வழியில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் மகன் சண்முக பாண்டியன்

தந்தை கேப்டன் விஜயகாந்தின் வழியில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் மகன் சண்முக பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)தந்தை கேப்டன் விஜயகாந்தின் கவர்ந்திழுக்கும் அம்சங்களை கொண்ட அவரது மகன் சண்முக பாண்டியனையும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் அன்பை பொழிந்து வரவேற்கிறார்கள். உயரமான மற்றும் களையான இந்த நாயகன் தனது ஒவ்வொரு படத்திலும் மிகவும் தனித்துவமான மற்றும் இணையற்ற திறன்களை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். இந்த முறை, அவர் தனது தந்தை மிக வெற்றிகரமாக இருக்கும் ஒரு மண்டலத்திற்குள் நுழைந்திருக்கிறார்.

ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் ‘ப்ரொடக்ஷன் நம்பர் 1’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம், இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக வீரம், வேதாளம், மற்றும் விவேகம் படங்களில் பணிபுரிந்த ஜி.பூபாலன் இயக்குனராக அறிமுகமாகிறார். போலீஸ் திரைப்படங்கள் என்றாலே எப்பொழுதும் இருக்கையின் விளிம்பில் அமர்ந்து பார்க்க வைக்கும் திரில்லர் படங்களாக தான் அமைந்திருக்கின்றன. ஆனால் பூபாலன் வேறு விதமான ஒரு கதையை சொல்ல இருக்கிறார். அவர் கூறும்போது, “போலீஸ் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் துரத்தல், பிடித்தல் என்ற வகையிலேயே இருக்கும், ஆனால் நாங்கள் மிகவும் யதார்த்தமான விதத்தில் சித்தரித்திக்கிறோம். இது ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் கொண்ட வண்ண மயமான பொழுதுபோக்கு படம். கல்லூரி படிப்பை முடித்து, காவல் துறையில் பயிற்சி பெற்று, மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து சேவை செய்யும் ஒரு இளைஞனின் கதை” என்றார்.

இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக ரோனிகா நடிக்கிறார். வம்சி கிருஷ்ணா, பவன், சாய் தீனா, அழகம் பெருமாள் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ஏ வெங்கடேஷ், விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பப்பு, யூடியூப் புகழ் பாரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அவருடைய நகைச்சுவையான மற்றும் பெயர் சொல்லும் கதாபாத்திரங்கள் மூலம் நடிக்கும் எல்லா படங்களுக்கும் அதிர்ஷ்ட சின்னமாக விளங்கும் ‘முனிஷ்காந்த்’ இந்த படம் முழுக்க தோன்றும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, நாயகனின் தாயாக நடிக்கிறார். இந்த அம்மா, மகன் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பு இந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

அருண்ராஜ் (இசை), பி. ஜெயமோகன் (வசனம்), முரளி கிரிஷ் (ஒளிப்பதிவு), ரூபன் (படத்தொகுப்பு), தேவக் (கலை), மதன் கார்க்கி, அருண் பாரதி (பாடல்கள்), சதீஷ் (நடனம்), விக்கி (சண்டைப்பயிற்சி), டான் கார்த்திக் (ஆடைகள்), ஜி ஃபிராங்க்ளின் வில்லியம்ஸ் (நிர்வாக தயாரிப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் ‘ப்ரொடக்‌ஷன் நம்பர் 1’ ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்குகிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலம் இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மிக விரைவில் வெளியிடுவார்.

“தயாரிப்பாளரை புடிப்பது முக்கியமல்ல. அவரை காப்பாற்றுவது தான் முக்கியம்”- தெளலத் பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு!

“தயாரிப்பாளரை புடிப்பது முக்கியமல்ல. அவரை காப்பாற்றுவது தான் முக்கியம்”- தெளலத் பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)சினிமா உலகில் சிறியபடம், பெரியபடம் என்ற வேறுபாடு நட்சத்திரங்களையும் பட்ஜெட்டையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி படத்தின் வெற்றியை படத்தின் தரம் தான் தீர்மானிக்கிறது. அப்படியொரு தரமான படமாக தெளலத் படத்தைத் தயாரித்து இருக்கிறார் M.B.முகம்மது அலி. சக்தி சிவன் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி நடித்துள்ளார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழு உள்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசியதாவது,

“பெரிய ஹீரோக்கள் நடித்த படம் மட்டும் பேசப்படும் சூழல் உள்ளது. சரியான கதையோடும் தரத்தோடும் நிறைய சின்னப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் வெளியில் வரவேண்டும். இந்தப் படத்தின் தலைப்பு டெளலத். டெளலத் என்றால் உருது மொழியில் செல்வம் என்று பொருள். இந்தப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்காமல் படத்தைப் பற்றிப் பேசக்கூடாது. ஆனால் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் நடிகர் ஜீவா நடிகர் சங்கத்தைப் பற்றி மறைமுகமாக சொன்னார். நான் நேரடியாகவேச் சொல்கிறேன். விஷாலைப் பற்றி எனக்கு இப்போது தான் தெரியும். அயோக்யா படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர். அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்தேன். முதலில் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அதற்குப் பின் பதவிக்கு வரவேண்டும். இங்கு தயாரிப்பாளரைப் பிடிப்பது முக்கியமல்ல. தயாரிப்பாளைக் காப்பாற்ற வேண்டியது தான் முக்கியம்” என்றார்.

மேலும் விழாவில் கலந்து கொண்ட பலரும் படத்தையும் படக்குழுவினரையும் வாழ்த்திப் பேசினார்கள்.

பிரபாஸ் படத்துக்கு பயந்து விலகும் அஜித்-சூர்யா படங்கள்

பிரபாஸ் படத்துக்கு பயந்து விலகும் அஜித்-சூர்யா படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)பாகுபலி 2 வை தொடர்ந்து சாஹோ என்னும் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்க, அருண் விஜய்தான் வில்லனாக நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குனர் சூஜீத் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்படத்தின் சூட்டிங் மிகுந்த பொருட்செலவில் நடைபெற்றது.

ரூ. 300 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை யூவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்பட டீசர் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகி சாதனைகளை படைத்து வருகிறது.

எனவே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியிட இருந்தனர்.

ஆனால் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் சூர்யாவின் காப்பான் ஆகிய படங்கள் வெளியாகவிருந்தன.

தற்போது ஒரே வாரத்தில் பிரபாஸ் படம் வருவதால் தங்களின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் இதன் வெளியீட்டை ஜீலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிடலாமா? என இரு படக்குழுவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

விஷாலுக்கு பெண்களை சப்ளை செய்யும் டீம்; தொழில் மீது சத்தியம் செய்யும் ஸ்ரீரெட்டி

விஷாலுக்கு பெண்களை சப்ளை செய்யும் டீம்; தொழில் மீது சத்தியம் செய்யும் ஸ்ரீரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Sri Reddys sensational allegations against Vishalஎன்னோடு படு… சினிமாவில் சான்ஸ் தருகிறேன் என பலர் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதெல்லாம் புகார் கூறியிருந்தார்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தெலுங்கு நடிகர் சங்கம் முன், அரை நிர்வாணம் போராட்டமும் நடத்தியிருந்தார்.

அதற்கு அடுத்து சில தினங்களில் இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோரும் மீதும் இதே குற்றச்சாட்டை கூறினார்.

நீங்கள் திறமையான நடிகை என்றால் நானே என் படத்தில் வாய்ப்பு தருகிறேன் என அப்போதே அறிவித்தார் ராகவா லாரன்ஸ். பின்னர் அது என்ன ஆனதோ? அப்படியே நின்றது.

இந்த நிலையில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் வேளையில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிடும் விஷால் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார்.

அதில்… “விஷால் படத்தில் நாயகியாக வேண்டுமென்றால் அவரோடு படுத்துத்தான் ஆக வேண்டும்.

அவருக்கு பெண்களை ஏற்பாடு செய்ய ஒரு குழுவே உள்ளது. அவர்கள் யார் யார் என்பதும் எனக்குத் தெரியும்.

இதை நான் என் அம்மா மீதும் என் சினிமா தொழில் மீதும் சத்தியம் செய்து கூறுவேன். இனியும், நீங்கள் யாரையும் ஏமாற்ற முடியாது.” என பரபரப்பாக பேசியுள்ளார் ஸ்ரீரெட்டி.

Actress Sri Reddys sensational allegations against Vishal

More Articles
Follows