கௌதம் மேனன் பட நாயகியை மணக்கும் ஓவியாவின் எக்ஸ் லவ்வர்

கௌதம் மேனன் பட நாயகியை மணக்கும் ஓவியாவின் எக்ஸ் லவ்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

joshua heroineபிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான போதே அதில் பங்கேற்ற ஓவியா ஆரவ் இருவரின் காதல் பற்றி ஊரே பேசியது.

ஆரவ்விடம் ஓவியா தன் காதலை ஓபனாக அறிவித்தார். பின்னர் அந்த பேச்சு அப்படியே ஓய்ந்து போனது.

தற்போது இருவரும் அவரவர் திசைகளில் பிரிந்து சென்றுவிட்டனர்.

‘மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்’, ‘ராஜ பீமா’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார் ஆரவ்.

இந்த நிலையில் ராஹீ என்பவரை திருமணம் செய்யவிருக்கிறாராம் ஆரவ்.

கௌதம் மேனன் இயக்கிய ஜோஷ்வா படத்தில் வருண்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஹீ.

ஆரவ் மற்றும் ராஹீ இருவரது திருமணம் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்தியின் ‘சுல்தான்’ படம் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் முடிவு..?

கார்த்தியின் ‘சுல்தான்’ படம் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் முடிவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi in sultanசிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தை இயக்கியவர் பாக்யராஜ் கண்ணன்.

இவர் தற்போது கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தை இயக்கியுள்ளார்.

இதில் தெலுங்கு சினிமாவின் ஹாட் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தை கைதி பட தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் சுல்தான் பட ரிலீஸ் குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவரின் பதிவில்…

“சுல்தான்’ 90 சதவீதம் படப்பிடிப்பு எடிட்டிங் முடிந்துவிட்டது.

கொரோனா பிரச்சினை இடையில் மீதமுள்ள படப்பிடிப்பை எப்படி முடிப்பது என்று பார்க்கிறோம்.

எங்களது தயாரிப்பில் மிகப்பெரும் தயாரிப்பாகவும், என்டெர்டெயின்மென்ட் படமாகவும் இருக்கும்.

இந்த படத்தின் வெளியீடு பற்றி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை,” என தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

C U SOON படத்தை ஐபோனில் படமாக்கிய பஹத்பாசில்.; டிரைலர் வெளியிட்ட கமல்

C U SOON படத்தை ஐபோனில் படமாக்கிய பஹத்பாசில்.; டிரைலர் வெளியிட்ட கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

fahadh faasilமலையாள சினிமாவில் இளம் ஹீரோக்களில் ஒருவர் பஹத் பாசில். இவர் நடிகை நஸ்ரியாவின் கணவர் ஆவார்.

தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் நடித்துள்ள ‘சி யூ சூன்’ என்ற படத்தை ஐ போனிலேயே படமாக்கியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளரை, அவரது குடும்பம், துபாயிலிருக்கும் அவரது உறவினரின் மனைவியைத் தேடும் வேலையைக் கொடுக்கிறது. அந்த மனைவியோ தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஒரு காணொலிக் குறிப்பைப் பகிர்ந்து விட்டு மாயமாகியுள்ளார்.

ஊரடங்கின் போது கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் மொபைல் ஃபோனில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் என்ற தனித்துவச் சிறப்பு இந்தப் படத்துக்கு உள்ளது.

செப்டம்பர் 1, 2020 அன்று, சர்வதேச அளவில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், சியூ ஸூன் வெளியாகவுள்ளது.

அதிதி ராவ் ஹைதரி, ஜெயசூர்யா நடிப்பில் சூஃபியும் சுஜாதையும் திரைப்படத்தின் வெற்றிகரமான உலகளாவிய வெளியீடுக்குப் பிறகு, சியூ ஸூன் மலையாளப் பட வெளியீடுடை அமேசான் அறிவித்துள்ளது.

மஹேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ரோஷன் மாத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவரின் புதிய முயற்சியை கமல்ஹாசன் பாராட்டி இந்த பட ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை இயக்கியிருக்கிறார் மகேஷ் நாராயணன். இவர் விஸ்வரூபம் படத்திற்கு எடிட்டராக பணிபுரிந்தவர்.

மேலும் கொரோனா விழிப்புணர்வு பாடலாக கமல் உருவாக்கிய ‘அன்பும் அறிவும்’ பாடலையும் இவர் தான் எடிட்டிங் செய்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

“சியூ ஸூன் கணினித் திரையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் ஒரு த்ரில்லர் திரைப்படம். இந்திய சினிமாவில் கையாளப்படாத ஒரு புதிய கரு இது என்கின்றனர் படக்குழுவினர்.

வெண்தாடியுடன் அசத்தும் உலகநாயகன்..; பிக்பாஸ் 4 புரோமோ ரெடி

வெண்தாடியுடன் அசத்தும் உலகநாயகன்..; பிக்பாஸ் 4 புரோமோ ரெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bigg boss 4 kamal haasan lookவெள்ளிதிரையின் சகலகலா வல்லவனாக நமக்கு அறிமுகமான கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையிலும் தடம் பதித்தார்.

விஜய் டிவி ஒளிப்பரப்பான பிக்பாஸ் மூன்று சீசன்களையும் இவரே தொகுத்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு சீசன் தொடங்கும்போது தொகுப்பாளர் மாறுகிறார் என்ற வதந்தி கிளம்பும்.

ஆனால் கமலை தவிர இந்த நிகழ்ச்சியை சிறப்பாக எவராலும் தொகுத்து வழங்கமுடியாது என்பதை உணர்ந்துள்ள விஜய் டிவி கமல்ஹாசனையே 4வது சீசனுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இது ஒளிபரப்பாகும்.

ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது.

தற்போது பிக்பாஸ் 4 சீசனுக்கான வேலைகள் தொடங்கியுள்ளதாம்.

இதற்க்கான ப்ரமோ வீடியோ தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் புரோமோ வீடியோ வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்காக கமல் வெண் தாடியுடன் அசத்தல் லுக்கில் தரிசனம் தருகிறாராம்.

எம்ஜிஆர் பட தலைப்பை கைப்பற்றினார் ‘பிக்பாஸ்’ தர்ஷன்

எம்ஜிஆர் பட தலைப்பை கைப்பற்றினார் ‘பிக்பாஸ்’ தர்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் கமல்ஹாசன் வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இதுவரை சீசன் 3 வரை முடிந்துள்ளது.

இந்த மூன்றாவது சீசனில் தர்ஷன் என்பவர் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சி முடிந்தபின் இவரின் காதலி சனம் ஷெட்டியுடனான பிரச்சினையில் சிக்கினார்.

இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் தற்போது மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறாராம் தர்ஷன்.

தாய்க்குப் பின் தாரம் என்ற இந்த ஆல்பத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஆயிஷா என்பவர் நடித்துள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ப்ளேஷ் கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.

இதன் டீசர் நாளை ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியாகிறது.

தாய்க்குப் பின் தாரம் என்ற பெயரில் 1956ல் எம்ஜிஆர் நடித்த படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

thaaikku pin thaaram

bigg boss tharshan

பாண்டியன் ஸ்டோர்ஸ்: சித்ராவுக்கு நிச்சயதார்த்தம்.; ஹேமாவுக்கு வளைகாப்பு

பாண்டியன் ஸ்டோர்ஸ்: சித்ராவுக்கு நிச்சயதார்த்தம்.; ஹேமாவுக்கு வளைகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனியார் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும்போதே சித்ராவுக்கு ரசிகர்கள் அதிகம். தன் புன்னகையால் ரசிகர்களை ஈர்த்தவர் அவர்.

அதன் பின்னர் சரவணன் மீனாட்சி, சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்தார் சித்ரா.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கேரக்டரில் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளார்.

இந்த நிலையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தன் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது போட்டோ ஷூட் என முதலில் பலர் நினைத்தாலும் பின்னர் தான் அவருக்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெரிய வ்நதுள்ளது.

விரைவில் சித்ராவின் திருமணம் நடைபெற வுள்ளது.

அதே போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள மீனா என்ற கேரக்டரும் படு பிரபலம்.

இந்த கேரக்டரில் நடித்திருப்பவர் நடிகை ஹேமா. இவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதைப்படி கர்ப்பமாக இருக்கும் ஹேமா, நிஜத்திலும் தான் கர்ப்பம் தரித்திருக்கிறாராம்.

ஹேமாவுக்கு வளைகாப்பு முடிந்திருப்பதால் இவர் சில காலம் சூட்டிங்கில் கலந்துக் கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது.

pandian stores hema valaikappu

pandian stores chitra engagement

More Articles
Follows