நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Market Raja MBBSஎல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரபி பிலிம்ஸ் மோகன், நவம்பர் 29ஆம் தேதி படத்தை வெளியிடவிருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிரந்து கொள்கிறேன். தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, இயக்குநர் சரண் வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை உருவாக்கியிருப்பதைப் பார்த்து மகிழச்சியடைகிறேன். உண்மையில் சொல்லப்போனால், தற்கால ரசிகர்களின் ரசனைக்கேற்ற பொழுதுபோக்குப் படத்தை தனது பாணியிலிருந்து விலகாமல், மேம்பட்ட வடிவில் கொடுத்திருக்கிறார். படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை ரசிகர்கள் இப்படத்தை வெகுவாக ரசிப்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

அப்பழுக்கற்ற நடிப்பை இப்படத்தில் வழங்கியிருக்கும் ஆரவ், சில சமயங்களில் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் நடிப்பில் புதிய பரிணாமங்களைத் தொட்டிருக்கிறார். தனித்துவம் வாய்ந்த உடல் மொழி, மேனரிசம், ஆகியவற்றுடன் இரண்டு வகையான வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆரவ். சில சமயங்களில் இரண்டு வகையான பாத்திரங்களையும் ஒரே நாளில் படமாக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோதுகூட பெரு முயற்சி செய்து, பரிபூரணமாக அவற்றைச் செய்தது குறிப்படத்தக்கது என்றார்

ராதிகா சரத்குமார், ரோகிணி, நாசர், நிகிஷா படேல், ஆதித்யா, தேவதர்ஷினி, பாகுபலி புகழ் பிரபாகர், முனீஷ்காந்த், சாயாஜி ஷிண்டே, பிரதீப் ராவத், சாம்ஸ் மற்றும் சில முக்கிய நடிக நடிகையரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். சைமன் கே.கிங் இசை ஏற்கெனவே பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் ஒளிப்பதிவை கே.வி.குகன் கவனிக்க, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்திருக்கிறார். சரண் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கிறார்.

மனம் மலரும், புத்துணர்வு பயணக்குறிப்புகளை பகிர்ந்து கொண்ட ஆஷிமா நாவல் !

மனம் மலரும், புத்துணர்வு பயணக்குறிப்புகளை பகிர்ந்து கொண்ட ஆஷிமா நாவல் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ashima narwalபயணங்கள் எப்போதும் வாழ்வின் அர்த்தத்தையும், ஆழத்தை கற்றுத்தரும். வாழ்வில் இனிமையான நினைவுகளை, புதுமையான அனுபவங்களை எப்போதும் அளிப்பது பயணங்களே!
பயணம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும். ஆன்மாவை மீட்டெடுக்கும். அப்படியான ஒரு பயணத்தை இயற்கை எழில் கொஞ்சும் நகரான கோவாவின் கடற்கரைகளில் மேற்கொண்டுள்ளார் ஆஷிமா நாவல்

அப்பயணம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டது….

மனதை ஒருமுகப்படுத்த, உடலை புத்துணர்வூட்ட ஒரு சிறு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டேன். கடற்கரை பயணம் என்பது ஆன்மாவின் தியானம் என்றார்கள். பயணம் எப்போதும் புதிதாய் கற்றுக்கொள்ள, ஆன்மாவை புதிப்பித்துகொள்ள ஒரு அற்புத வாய்ப்பு. பயணங்கள் எப்போதும் உற்சாமூட்டுபவை.

இயற்கையின் எழிலில் கலந்து மனதை ஒருமுகப்படுத்திகொள்வதற்கும், புதிய எண்ணங்கள் மலர்வதற்கும் என்னைப் போன்ற நடிகர் நடிகைகளுக்கு பயணங்களே அற்புத வாய்ப்பு. புதிய வகைள் கற்கும் சாகசங்கள் நிறைந்த, உற்சாகம் தரும் புத்தம் புது நடனகலைகள் கற்க, ஓய்வில் உடலை புதுப்பித்துக்கொள்வதற்கே இப்பயணம்.

என் அம்மா எனது வாழ்வின் தோழி இப்பயணத்தில் என்னுடன் இணைந்திருந்தார். நாங்கள் பல புதிய இடங்களை கண்டடைந்தோம். பல புது மனிதர்களை சந்தித்தோம். கடல் உணவுகள் பலவற்றை சுவைத்தோம். ஓய்வில் தியானம், கடற்கரையில் நீச்சல், புதிய நடன வகைகளை முயற்சித்தல் என இப்பயணம் இனிமையான அனுபவம். இயற்கை எழில் கொஞ்சும் நீல நிறக் கடல், பொன்நிற வெய்யில், பசுமை போர்த்திய மர நிழல் ஆகியவற்றோடு நான், அண்டத்தில் ஒருத்தியாய் கலந்து விட்ட உணர்வை அது தந்தது. அல்லது அப்படியாக நான் உணர்ந்தேன். கடவுள் தந்த வரமாய் அன்பின் வடிவாய் என் தாய் என்னுடனேயே இருந்தார். இப்பயணத்தில் நாங்கள் டாட்டுவையும் முயற்சித்தோம்.

காற்றில் ஈரத்தில் கலந்திருக்கும் உப்பு, நம் உடலிலும் முடியிலும் கலந்திருக்கும். அது பரந்து விரிந்திருக்கும் நீல நிற கடலின் ஒரு துளியாகவே கருதினேன்.

பலரது பாராட்டையும் பெற்ற விஜய் ஆண்டனியின் “கொலைகாரன்” படத்தில் தாரணி மற்றும் ஆராதனாவாக கலக்கிய ஆஷிமா விரைவில் வெளியாகவுள்ள “ராஜபீமா” படத்தில் ஆரவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவரது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்.

வானம் கொட்டட்டும் படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை வெளியீடு

வானம் கொட்டட்டும் படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaanam Kottattumஇயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன்,
சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குகிறார். இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார்.

சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் போன்றவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல் பாடல், இரண்டாவது பாடல், டீஸர், டிரைலர் & இசை வெளியீடு ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். இறுதி கட்ட பணிகள் முடிந்து 2020 ஜனவரியில் இப்படம் வெளியிடப்படும்.

‘வலிமை’ பட சூட்டிங் தாமதத்திற்கு அஜித்தான் காரணம்; என்ன தல..?

‘வலிமை’ பட சூட்டிங் தாமதத்திற்கு அஜித்தான் காரணம்; என்ன தல..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith making delay to start shooting for Valimaiஅஜித் நடிக்கவுள்ள ‘வலிமை’ படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க பாலிவுட் புரொடியூசர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

மங்காத்தா முதல் நேர் கொண்ட பார்வை படம் வரை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த அஜித் இந்த படத்திற்காக கறுப்பு நிற தலைமுடிக்கு மாறவிருக்கிறாராம்.

இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் அஜித் நடிக்கவுள்ளதால் படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து வருகிறாராம்.

அவர் தயாராகி வந்தவுடன் வருகிற நவம்பர் 24ல் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

விரைவில் படத்தில் பணியாற்றவுள்ள நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகலாம்.

Ajith making delay to start shooting for Valimai

300 கோடி வசூலில் பிகில்.; தயாரிப்பாளர் சொல்லல ரசிகர்கள் சொல்றாங்க!

300 கோடி வசூலில் பிகில்.; தயாரிப்பாளர் சொல்லல ரசிகர்கள் சொல்றாங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans trending that Bigil collected Rs 300 croresஅட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, யோகிபாபு, கதிர், இந்துஜா, அமிர்தா, வர்ஷா பொல்லம்மா, டேனியல் பாலாஜி, ஜாக்கி செராப், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் பிகில்.

ஏஜிஎஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக். 27ல் வெளியானது.

தெறி, மெர்சல் பட கூட்டணி என்பதால் இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் படத்தின் பட்ஜெட்டும் ரூ. 180 கோடி என்பதால் பிரம்மாண்ட வரவேற்பை விஜய் ரசிகர்கள் கொடுத்தனர்.

ஆனால் படத்திற்கு முதல் நாளே கலவையான விமர்சனங்களே வந்தன.

இந்த நிலையில் படம் வெளியாகி 2 வாரங்களை கடந்துள்ள நிலையில் இந்த படம் ரூ. 300 கோடியை வசூலித்துவிட்டதாக ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் மற்ற சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

ஒரு படத்தின் வசூலை தயாரிப்பாளர்களால் மட்டுமே சரியாக சொல்ல முடியும். ஆனால் தயாரிப்பு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்பதுதான் இங்கே செம காமெடி.

பிகில் படம் வரும்போது அது பற்றிய எல்லா தகவல்களையும் உடனுக்குடன் வெளியிட்டவர் அர்ச்சனா கல்பாத்தி. அவரே வசூல் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Vijay fans trending that Bigil collected Rs 300 crores

கமல்ஹாசன் 60 விழாவில் கலந்துக் கொள்ள அஜித் ஆர்வம்.?

கமல்ஹாசன் 60 விழாவில் கலந்துக் கொள்ள அஜித் ஆர்வம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Thala Ajith participate in Kamalhassan 60 eventவருகிற நவம்பர் 17ஆம் தேதி திரையுலகில் 60 ஆண்டுகளை கடந்துள்ள கமல்ஹாசளை கௌரவிக்கும் பொருட்டு கமல் 60 நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கமலை வாழ்த்த இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் கமலின் பாடல்கள் இசைக்கப்படும் எனத் தெரிகிறது.

இதில் ரஜினி உள்ளிட்ட இந்திய திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

கமல் 60 அழைப்பிதழில் ரஜினி, இளையராஜா, விஜய், அஜித் படங்கள் உபயோகப்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தான் நடித்த பட பிரமோசன்களில் கூட கலந்து கொள்ளாத நடிகர் அஜித் இந்த விழாவில் கலந்து கொள்வார் என தகவல்கள் வந்துள்ளன.

ம்ம்… இந்த தகவல் உண்மையாகுமா? என பார்ப்போம்.

Will Thala Ajith participate in Kamalhassan 60 event

More Articles
Follows