சினிமா லைட்மேன்களுக்கு உதவ ஏஆர். ரஹ்மான் திட்டம்.; அரசும் நடிகர்களும் உதவ FEFSI கோரிக்கை

சினிமா லைட்மேன்களுக்கு உதவ ஏஆர். ரஹ்மான் திட்டம்.; அரசும் நடிகர்களும் உதவ FEFSI கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சார்பில் அனைவருக்கும் வணக்கம்..!

திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆபத்தான, சிரமமான நிலையிலேயே இருந்துள்ளது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படத் தயாரிப்பாளிடமும், சின்னத்திரை தயாரிப்பாளர்களிடமும் கலந்து பேசியோ, வற்புறுத்தியோ, வேண்டுகோள் விடுத்தோ எங்கள் சம்பளத்தை ஓரளவு உயர்த்திவருகிறோம்.

திரைப்படத் துறையில் சாதாரண தொழிலாளர்கள் சம்பளம் இன்று ரூ. 1000/- தொடுவதற்கு 100 ஆண்டுகள் கடக்க வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுதிரைப்படத் துறைக்கு செய்யும் உதவிகள் மேலோட்டமாகவே நின்று விடுகிறது. அஸ்திவாரமான தொழிலாளர்களை சென்று அடைவதில்லை.

இதுவரை திரைப்படத்துறையில் பணிபுரியும்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்களை காப்பாற்ற எந்த வழியும் இல்லை.

ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரியும்போது இறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஒரு உதவி கிடைக்கிறது. ஆனால் சிரமப்பட்டு திரைப்படம் தாயாரிக்கின்ற சிறு தயாரிப்பாளர்களின் படங்களில் பணிபுரியும்போது விபத்து ஏற்பட்டால் அவர்களை காப்பாற்ற எந்த நாதியுமில்லை.

எனவே திரைப்படத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற நிதியாண்டு பட்ஜெட்டில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள் வழங்குகின்ற திட்டத்தை அறிவிக்குமாறு தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாக இசையமைப்பாளர் திரு. A.R.ரகுமான் அவர்கள் ஒரு நற்பணியை துவக்குகின்றார். திரைப்படத் துறையில் ஒரு அங்கமான லைட்மேன்கள் பணிபுரியும்போது விபத்து நேர்ந்தால் அவர்களுக்கு உதவ ஒரு நிதியாதாரத்தை (CORPUS FUND) ஏற்படுத்த உள்ளார்.

இதற்காக வருகின்ற மார்ச் 19ஆம் தேதி நேரு உள்ளரங்கில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதில் திரட்டப்படுகின்ற நிதியை பணிபுரியும் லைட்மேன்கள் விபத்தில் இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு உதவ, இந்த நிதியை பயன்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார். தானாக முன்வந்து இந்த உதவியை செய்கின்ற அவருக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் எங்கள் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிதி லைட்மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டும் ஆகும். இது போன்றே அனைத்து தொழிலாளர்களுக்கும் உதவுகின்ற திட்டத்தை சம்மேளனம் செய்யுமானால் நான் உடனிருந்து ஒத்துழைப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.

இது, A.R.ரகுமான் அவர்களை முன் உதாரணமாக கொண்டு திரைப்படத்துறையில் உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இது போன்றே தொழிலாளர்களுக்கு உதவ முன் வரவேண்டும் என பணிவன்புடன் கோரிக்கை வைக்கின்றோம்.

திரைப்படத் துறையில் உள்ள அனைவரும் அவர்களின் சம்பாத்தியத்தில் 1 % சதவிகித்தை நன்கொடையாக வழங்கினால் திரைப்படத்துறையில் அனைத்து தொழிலாளர்களும் காப்பாற்றப்படுவார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம். அது போன்றே தமிழக அரசும் திரைப்பட டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டிற்கு ஒரு ரூபாய் என பிடித்தம் செய்து ஒரு நிதியாதாரத்தை உருவாக்கி 60 வயது கடந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு மாத ஓய்வு ஊதியம் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு மறைந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்ட வழங்கிய பையனூர் இடத்தில் திரைப்பட அரங்குகள் கட்டப்பட்டுவருகின்றன மேலும் கலைஞர் நகரம் என்று பெயரிடப்பட்ட முகப்பு நுழைவாசலையும், கலைஞர் திருவுருவச்சிலையையும் அமைத்து வருகின்றோம்.

இத்திருவுருவச்சிலை மற்றும் முகப்பு வாசலை திறந்து வைக்குமாறும், தாங்கள் தந்தை திரைப்பட துறையினருக்கு குடியிருப்புகள் கட்ட வழங்கிய இடத்தில் குடியிருப்புகள் கட்ட உதவி செய்யுமாறும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி…!

26-02-2023

ஆர்.கே.செல்வமணி, தலைவர்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்

AR Rahman plans to help fefsi workers

கடத்தப்பட்ட பெண்களின் மனச்சிதைவை ‘இன் கார்’ சொல்லும்.. – ரித்திகா சிங்

கடத்தப்பட்ட பெண்களின் மனச்சிதைவை ‘இன் கார்’ சொல்லும்.. – ரித்திகா சிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில் ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் “இன் கார்”.

மார்ச் 3ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இயக்குனர் மற்றும் நடிகை பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகை ரித்திகா சிங் பேசியதாவது…

“இன் கார்” படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்லுகிறாள், என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும்.

இந்தப்படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை “இன் கார்” படம் ஏற்படுத்தியது. இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஹர்ஷ் வர்தனுக்க்கு நன்றி. இந்தப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள் நன்றி.

நடிகர்கள் :
ரித்திகா சிங்
சந்தீப் கோயத்
மனிஷ் ஜான்ஜோலியா
ஞான பிரகாஷ்

தொழில்நுட்ப குழு :

தயாரிப்பு நிறுவனம் : Inbox Pictures
தயாரிப்பு : அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி
எழுத்து இயக்கம் : ஹர்ஷ் வர்தன்
ஒளிப்பதிவு : மிதுன் கங்கோபாத்யாய்
எடிட்டர்: மாணிக் திவார்
சண்டைப்பயிற்சி : சுனில் ரோட்ரிக்ஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (AIM )

‘In Car’ tells about the trauma of kidnapped women.. – Ritika Singh

ரித்திகா சிங் நடித்த ‘இன் கார்’ படத்தை வெளியிடும் ஸ்டூடியோ க்ரீன்

ரித்திகா சிங் நடித்த ‘இன் கார்’ படத்தை வெளியிடும் ஸ்டூடியோ க்ரீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.

கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார்.

மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது…

“இன் கார்” படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், பல துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர்.

என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் பலரும் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாமே செய்திகளில் தினமும் இது போன்ற விஷயங்களைக் கடந்து போகிறோம்.

இது ஏன் நடக்கிறது. இதை செய்பவர்கள் மிக இயல்பான வாழ்க்கை வாழும் மனிதர்கள், அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, நம்மைப்போல் தான் அவர்களும். எது அவர்களை இது போன்ற குற்றங்களைச் செய்ய வைக்கிறது. கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண் என்னென்ன சித்ரவதைக்கு ஆளாகிறாள் அந்த நொடி எத்தனை மன ரீதியான பிரச்சனைகளைத் தரும், இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதே “இன் கார்”.

இது அனைவருக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

Studio green releases Ritika Singh’s in car

அப்பாவி இளைஞனை ஆபாச படத்தில் நடிக்க வைத்த பெண் இயக்குனர் கைது

அப்பாவி இளைஞனை ஆபாச படத்தில் நடிக்க வைத்த பெண் இயக்குனர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மி தீப்தா (37), சில 18+ வெப் தொடர்களை இயக்கியுள்ளார். இளம் நடிகர் அளித்த புகாரைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

26 வயது இளைஞர் அளித்த புகாரில், “நடிகர்களுக்கான விளம்பரத்தைப் பார்த்து, படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு லக்ஷ்மி தீப்தாவை அணுகினேன்.

லட்சுமி என்னை ஆபாச காட்சியில் நடிக்க வற்புறுத்தியதால் மறுத்துவிட்டேன். அவர் என்னை 5 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று எச்சரித்தார்.

வெப் சீரிஸ் ஒளிபரப்பினால் எனது குடும்ப வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் தடை விதிக்க வேண்டும் என்றார் .
Female director arrested for forcing young man to act in 18 plus web series

நான் சொல்லி கேட்கல.. ‘வாத்தி’ தனுஷ் சொல்லி என் பையன் கேட்கிறான்.. – சாரா

நான் சொல்லி கேட்கல.. ‘வாத்தி’ தனுஷ் சொல்லி என் பையன் கேட்கிறான்.. – சாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாக ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது.

இந்த நிலையில் முதன்முறையாக ‘சார்’ என்ற படம் மூலம் நேரடியாக தெலுங்கில் அடி எடுத்து வைத்துள்ளார் தனுஷ். தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இந்தப்படம் வெளியானது.

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வாத்தி

இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று பல இடங்களில் தற்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது..

இந்தநிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பத்திரிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் உள்ளிட்ட வாத்தி படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, உதவி திரைக்கதை ஆசிரியர் சதீஷ், ஒளிப்பதிவாளர் யுவராஜ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் சாரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாத்தி

இந்த நிகழ்வில் நடிகர் சாரா பேசும்போது…

“இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அதனால் என்னை கழட்டி விட்டுடாதீங்க என இயக்குனரை கேட்டுக்கொள்கிறேன்.

வீட்டில் என் பையனை நான் படிக்க சொன்னால் படிக்க மாட்டான். ஆனால் வாத்தி படத்தில் தனுஷ் மாணவர்களை படிக்க சொல்லி உற்சாகப்படுத்துவதை பார்த்துவிட்டு தனுஷ் அங்கிள் சொல்வதால் படிக்கிறேன் என்று கூறுகிறான். அந்த அளவிற்கு வாத்தி படம் அனைவரையும் சென்று சேர்ந்துள்ளது” என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் யுவராஜ் பேசும்போது…

வாத்தி படம் வெளியானதில் இருந்து எந்த ஊருக்கு சென்றாலும் திருவிழா மாதிரி இருக்கிறது. இப்போதும் பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த நேரத்தில் என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

வாத்தி

my son listens ‘Vaathi’ Dhanush words says shara

‘வாத்தி’ வசூலை எண்ணிட்டிருக்கார் வம்சி அதான் இங்கு வரல.. – வெங்கி அட்லூரி

‘வாத்தி’ வசூலை எண்ணிட்டிருக்கார் வம்சி அதான் இங்கு வரல.. – வெங்கி அட்லூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘வாத்தி’ படம் வெற்றி பெற்றதை அடுத்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த விழாவில் இப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசும்போது…

“இந்தப்படத்தின் கதையை நம்பி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வம்சி மற்றும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த தனுஷ் இருவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இப்போது வரை 8 நாட்களில் 75 கோடி நிகர தொகையாக இந்த படம் வசூலித்துள்ளது. பத்திரிகை விமர்சனங்கள் மற்றும் படம் பார்த்தவர்களின் வாய்மொழி பாராட்டுக்கள் என இந்த படத்திற்கு பாசிட்டிவான விளம்பரம் கிடைத்துள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் வம்சி இந்த படத்தின் வசூலை எண்ணிக் கொண்டிருப்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை..

இந்த படத்தை தமிழில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிட்ட லலித்குமார் சாரை இன்னும் பார்க்கவே முடியவில்லை. வாத்தி என்னுடைய கனவு திரைப்படம். இந்தப்படத்தில் தனுஷுடன் பணியாற்றும்போது அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு இன்னும் நல்ல டெக்னிசியனாக மாறியுள்ளேன்” என்று கூறினார்.

வாத்தி

director Venky Atluri speech at vaathi success meet

More Articles
Follows