ஸ்ரீதேவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஏஆர்.ரஹ்மான்

ஸ்ரீதேவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஏஆர்.ரஹ்மான்

sri devi Mom press meetபிரபல நடிகை ஸ்ரீதேவி, கதையின் நாயகியாக நடித்துள்ள படம் “மாம்”.

ரவி உதயவார் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரே இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடவுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை இப்படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது ஸ்ரீதேவி பேசுகையில்…

எனக்கு வாழ்வளித்த தமிழ் சினிமாவை என்றும் மறக்க மாட்டேன். இந்த 50 வருடங்களில் கிட்டதட்ட 300 படங்களில் நடித்துவிட்டேன்.

ஆனால் ஏஆர். ரஹ்மான் இசையில் நான் நடிக்கவில்லை. என்னுடைய இந்த நீண்ட நாள் ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

இசையமைக்க ஒப்புக் கொண்ட ஏஆர். ரஹ்மானுக்கு நன்றி” என பேசினார்.

AR Rahman fullfilled SriDevis desire by composing music for Mom movie

mom press meet stills

‘இமானுக்கு சம்பளமே கொடுக்க கூடாது…’ – இயக்குநர் ஆர்.கே. செல்வமணி

‘இமானுக்கு சம்பளமே கொடுக்க கூடாது…’ – இயக்குநர் ஆர்.கே. செல்வமணி

ggsr imman with heroinesஅம்மா கிரியேஷன்ஸ் T.சிவாவின் வெள்ளி விழா வருட திரைப்படம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.

இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் அதர்வா முரளி, சூரி, ரெஜினா கசன்றா, அதீதி போஹன்கர், இசையமைப்பாளர் டி.இமான், இயக்குநர் ஓடம் இளவரசு, பிக்பிரிண்ட் கார்த்தி, 2எம்.பி ரகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் FEFSI தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசியது…

இப்படத்துக்கு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற மிகச்சிறப்பான தலைப்பு தமிழில் உள்ளது அதை GGSR என்று ஆங்கிலத்தில் அழைப்பது தவறாகும்.

வரிவிதிப்புக்காக தமிழில் பெயர் வைக்கக்கூடாது. தமிழ் மேல் பற்றோடு நாம் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும்.தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

தயாரிப்பாளர் சிவா இசையமைப்பாளர் இமானுக்கு சம்பளமே கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்திருந்தால் திருப்பி வாங்கி விடுங்கள். இப்படி நான்கு கதாநாயகிகளோடு சேர்ந்து அவர் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது.

எனக்கு முதல் படம் கிடைக்க காரணமாக இருந்தவர் அம்மா க்ரியேஷன் சிவா தான். அவர் தான் தயாரிப்பாளர் ராவூதரிடம் பேசி எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தார்.

அந்த படத்தை இடையில் வேறொரு இயக்குநரிடம் போனது. அந்த சமயத்திலும் தயாரிப்பாளர் ராவூத்தரிடம் பேசி மீண்டும் எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தவர் சிவா அவருக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்றார் ஆர்.கே.செல்வமணி.

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே இயக்குநர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிட்டு விழா நடந்தது.

இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்துக்கு இசையமைக்கும் சத்யா ராஜ், ரம்யா கிருஷ்ணன், சிவா, கயல் சந்திரன், ரெஜினா சசன்றா, நிவேதா பெத்துராஜ்,சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

GGSR Producer should not give salary to Imman says RK Selvamani

ggsr audio launch

அந்தரங்கம் லீக்கானால் பகிரங்கம்தான்; எக்ஸ் வீடியோஸ் இயக்குனர் சஜோசுந்தர்

அந்தரங்கம் லீக்கானால் பகிரங்கம்தான்; எக்ஸ் வீடியோஸ் இயக்குனர் சஜோசுந்தர்

x video tamil movie spot

மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்க வேண்டும் அதற்காகவே “எக்ஸ் வீடியோஸ்” என  பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது. என்கிறார் படத்தின் இயக்குனர் சஜோ சுந்தர்.

“பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை,” என்கிறார் இயக்குநர்.

“இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை.

அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளி உலகத்துக்கு வந்தே தீரும் இதுவே படம் தரும் எச்சரிக்கை.’’

இது சைபர் யுகம், கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது.

அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான்.

அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் எக்ஸ் வீடியோஸ்.”

இவர் இயக்குநர் ஹரியின் உதவி இயக்குநர். நடிகர் பிரகாஷ் ராஜ், பொம்மரில்லு பாஸ்கர் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார் சஜோ சுந்தர்.

இப்படத்தை கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எஸ்.பிரகாஷ் தயாரித்துள்ளார்.

“ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இப்படம் உருவாகியிருக்கிறது.’’

என்கிற இயக்குநரிடம் அதற்காக இப்படியா ஆபாசமாகத் தலைப்பு வைப்பது?? என்றபோது,

“இது இளைஞர்களுக்கான படம் அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம்”.

“படத்தின் தலைப்பைக் கண்டு தவறாக கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஏனெனில் இது இந்த உலகில் ரகசியம் என்று எதுவுமில்லை என எச்சரிக்கும் படமே…”

“கதையின் இயல்பு தன்மைக்காக முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது”.

சென்னை,பெங்களூர்,மும்பை போன்ற இடங்களில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது.

தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு வின்சென்ட் அமல்ராஜ், இசை மெட்ரோ புகழ் ஜோஹன், படத்தொகுப்பு ஆனந்தலிங்க குமார், கலை இயக்கம் கே.கதிர்.

ஜூலையில் இந்த எக்ஸ் வீடியோவை பெரிய திரையில் காணலாம்.

Director Sajo Sundar titled his tamil movie X Vidoes

x videos shooting stills

அரவிந்த்சாமி-செல்வா இணையும் வணங்காமுடி

அரவிந்த்சாமி-செல்வா இணையும் வணங்காமுடி

Arvind swamy with Director Selva‘சதுரங்க வேட்டை 2’ படத்தை தொடர்ந்து செல்வா இயக்கும் படத்தில் நடிக்கிறார் அரவிந்த்சாமி.

இதில் ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, கணேஷ் வெங்கட்ராம், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இமான் இசையமைத்து வருகிறார்.

மேஜிக் பாக்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு வணங்காமுடி எனப் பெயரிட்டுள்ளனர்.

ரஜினி மகள் விவாகரத்து வழக்கு; சௌந்தர்யா கோர்ட்டில் ஆஜர்

ரஜினி மகள் விவாகரத்து வழக்கு; சௌந்தர்யா கோர்ட்டில் ஆஜர்

soundarya with ashwinரஜினியின் இளைய மகளும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வின் ராம்குமாரை விவாகரத்து செய்வது குறித்து கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த விசாரணை இன்று நீதிமன்றத்தில் வருவதை அடுத்து அவர் குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவரது கணவர் அஸ்வின் ராம்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இன்றைய விசாரணைக்கு பின்னர் விவாகரத்து குறித்த தீர்ப்பை நீதிமன்றம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற இந்த தம்பதிற்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘என்னை சந்திக்க வருபவர்களிடம் அரசியல்தான் பேசினேன்…’ ரஜினி

‘என்னை சந்திக்க வருபவர்களிடம் அரசியல்தான் பேசினேன்…’ ரஜினி

Rajinikanthதமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி பேசியதுமே பல்வேறு விவாதங்கள் கிளம்பிவிட்டன.

இதனிடையே காலா சூட்டிங்கில் கலந்து கொண்டு ரஜினி சென்னை வந்ததும், அவரை தினசரி ஏதாவது ஒரு பிரபலம் சந்தித்து வருகிறார்.

தமிழருவி மணியன், அர்ஜூன் சம்பத் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் காலா சூட்டிங்கில் கலந்துக் கொள்ள மும்பை செல்லவிருந்தார் ரஜினி.

அப்போது சென்னை விமான நிலையத்திற்கு அவர் வர, அரசியல் பிரவேசம் மற்றும் ரசிகர்கள் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

“நான் அரசியலுக்கு வந்தால் உங்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன்.

என் நண்பர்களுடன் என்னை சந்திக்க வருபவர்களுடன் நான் அரசியல் குறித்து பேசியதை மறுக்கவில்லை.

அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறேன். ஆனால், முடிவு செய்யவில்லை.

செப்டம்பர் அல்லது அக்டோபரில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்.” என்றார்.

More Articles
Follows