ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இணைந்த அனிருத் & விஜய் யேசுதாஸ்

ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இணைந்த அனிருத் & விஜய் யேசுதாஸ்

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர்.

இதில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் கீரவாணி (தமிழில் இவரது பெயர் மரகதமணி) இசையமைத்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

எனவே படத்தின் பிரமோஷனுக்காக ஒவ்வொரு மொழியிலும் ஒரு சிறப்புப் பாடலை உருவாக்கியுள்ளது படக்குழு.

இந்த பாடல்களை 5 மொழிகளிலும் பிரபலமான பாடகர்களைப் பாட வைத்துள்ளனர்.

தமிழ் பாடல் – அனிருத் (தமிழ்ப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்)

தெலுங்குப் பாடல் – வேடால ஹேமச்சந்திரா

மலையாளப் பாடல் – விஜய் யேசுதாஸ்

ஹிந்தி பாடல் – அமித் திரிவேதி

கன்னட பாடல் – யாசின் நிசார்

இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர் கீரவானியுடன் 5 மொழிப் பாடகர்களும் உள்ளனர்

நட்பு என தமிழில் பெயர் வைத்துள்ளனர்.

இப்பாடலை ஆகஸ்ட் 1ம் தேதியன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளனர்.

ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாக உள்ளது

Anirudh and Vijay yesudas joins for RRR movie

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *