தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
25 ஆண்டுகளுக்கு முன்னர் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏஆர். ரஹ்மான்.
இந்தியளவில் பல விருதுகளை வென்றுள்ள ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தின் இரண்டு ஆஸ்கர் விருதுகளை இந்தியாவிற்கு பெற்றுத் தந்தார்.
இந்நிலையில் இவரது 25 ஆண்டு வெள்ளிவிழா இசை பயணத்தை கௌரவிக்க ஆந்திரா அரசு முடிவுசெய்துள்ளது.
அதன்படி காக்கிநாடாவில் வெள்ளி விழா நடத்த, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக, 2 கோடி ரூபாய் செலவில் மேடை அமைக்கப்பட உள்ளதாம். இந்நிகழ்ச்சி அக்டோபர் 28 அல்லது டிசம்பர் 23ல் நடைபெறும் என கூறப்படுகிறது.
இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் 3 மணி நேரம் இசை கச்சேரி ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவருடன் 50 இசை கலைஞர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
இதற்காக ஆன்லைனில் சில போட்டிகளையும் நடத்தவிருக்கிறார்களாம்.
Andhra Govt plans Silver Jubilee celebration for AR Rahman