கடும் குளிரிலும் ஈரம் சொட்ட சொட்ட நடித்த கஷ்மீரா – ரமணன் புருஷோத்தமா

கடும் குளிரிலும் ஈரம் சொட்ட சொட்ட நடித்த கஷ்மீரா – ரமணன் புருஷோத்தமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் பாபி சிம்ஹா தயாரித்து நடித்துள்ள படம் ‘வசந்த முல்லை’.

பிப்ரவரி 10ஆம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளரை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது இயக்குநர் ரமணன் புருஷோத்தமா பேசுகையில்….

” முகநூல் மூலமாக சிம்ஹா என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு அவரை சந்தித்தேன். ஏதாவது கதைகளை வைத்திருக்கிறீர்களா? நாம் இணைந்து பணியாற்றலாமா? என கேட்டார். அன்று அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான், இன்று எனக்கு கிடைத்திருக்கும் இந்த முதல் மேடை.

இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் பணிகளை தொடங்குவதற்கு ரேஷ்மி சிம்ஹா, ராம் தல்லூரி, ரஜினி தல்லூரி ஆகியோர் அளித்த நம்பிக்கையான வாக்குறுதியும் ஒரு காரணம்.

‘வசந்த முல்லை’ எனும் படத்தின் திரைக்கதையின் போக்கில் ஒரு திருப்புமுனைக்குப் பிறகு, இந்த கதை ஒரே இரவில் நடைபெறும். மலை பாங்கான பகுதி… இருட்டு… தொடர் மழை.. இந்த பின்னணியில் நடிகர், நடிகைகளின் ஒத்துழைப்பு வியப்பை அளித்தது.

அதிலும் குறிப்பாக நாயகி கஷ்மீரா பர்தேசி, அந்த குளிரில், ஒவ்வொரு காட்சியிலும் ஈரம் சொட்ட சொட்ட நனைந்து நடிக்க வேண்டியதிருந்தது. முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை அளித்த நாயகி கஷ்மீரா பர்தேசிக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தின் உயிர்நாடி இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசை தான்.

அவருக்கும் திரில்லர் ஜானரில் இசையமைப்பது முதல் முறை என்பதால், அனுபவித்து ஆத்மார்த்தமான உழைப்பை வழங்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், கலை இயக்குநர், படத் தொகுப்பாளர், சண்டை பயிற்சி, ஆடை வடிவமைப்பாளர், ‌விளம்பர வடிவமைப்பு, பாடலாசிரியர், ஒலி வடிவமைப்பாளர், கூடுதல் திரைக்கதையாசிரியர் பொன்னிவளவன், மக்கள் தொடர்பாளர் என ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.

பிடித்த விசயங்களை நேர்த்தியான படைப்பாக உருவாக்கி இருக்கிறோம். பிப்ரவரி 10 ஆம் தேதியன்று ‘வசந்த முல்லை’ வெளியாகிறது. கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

வசந்த முல்லை

director Ramanan Purushothama speech at vasantha mullai trailer launch

வெற்றிக்காக காத்திருக்கும் போது நம் மீது நம்பிக்கை வைப்பவர்கள் குறைவு – ரேஷ்மி சிம்ஹா

வெற்றிக்காக காத்திருக்கும் போது நம் மீது நம்பிக்கை வைப்பவர்கள் குறைவு – ரேஷ்மி சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் பாபி சிம்ஹா தயாரித்து நடித்துள்ள படம் ‘வசந்த முல்லை’.

பிப்ரவரி 10ஆம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளரை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது சிம்ஹா மனைவயும் தயாரிப்பாளரும் நடிகையுமான ரேஷ்மி சிம்ஹா பேசுகையில்…

” நீண்ட நாட்கள் கழித்து பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘வசந்த முல்லை’ படத்தின் கதையை சிம்ஹாவும், இயக்குநர் ரமணனும் சொல்லும்போது மிகவும் பிடித்திருந்தது.

வெற்றி பெற்றிருக்கும் போது, ஏராளமான வாய்ப்புகளும், நிறைய நண்பர்களும் உடனிருப்பார்கள். ஆனால் வெற்றிக்காகக் காத்திருக்கும் போது, நம் மீது நம்பிக்கை வைத்து பயணிப்பவர்கள் குறைவு.

அந்த வகையில் தயாரிப்பாளர் ராம், எங்கள் மீது நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கை இன்று வரை குறையவில்லை. சிம்ஹா மீதும், எங்கள் நிறுவனம் மீதும், இயக்குநர் மீதும் அபார நம்பிக்கையை வைத்திருந்தார். கொரோனா தொற்று காரணமாக இந்த படைப்பு தயாராவதில் கால தாமதமானது.

இதன் போது எங்கள் குழுவினரிடையே ஏற்பட்ட கோபம், அன்பு, காதல், சண்டை என அனைத்தையும் எதிர்கொண்டோம். தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். பொதுவாக 35 நாட்கள் வரை படப்பிடிப்பில் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். அதன் பிறகு வணிக ரீதியான நட்பை தொடர்வோம்.

ஆனால் இந்த ‘வசந்த முல்லை’ திரைப்படம் முழுமையடைய மூன்றரை ஆண்டுகளானது. அதனால் இந்த படக் குழுவினருடைய நட்பு பிரத்யேகமானது. இந்த நாளுக்காக காத்திருந்தோம். காலதாமதமாக வெளியானாலும் சரியான தருணத்தில் இப்படம் ரசிகர்களை சென்றடைகிறது.

படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஆர்யாவிடம் கேட்டபோது, மறுக்காமல் உடனே ஒப்புக்கொண்டார். இதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு மீண்டும் மக்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்து படங்களுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தருணத்தில் புதுவித பாணியில் தயாராகி இருக்கும் ‘வசந்த முல்லை’ திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

வசந்த முல்லை

reshmi simha speech at vasantha mullai trailer launch

ஹாலிவுட் லெவல்ல இருக்கு.; ‘வசந்த முல்லை’ கதையை கேட்டு தயாரிக்க சொன்ன ‘வாரிசு’

ஹாலிவுட் லெவல்ல இருக்கு.; ‘வசந்த முல்லை’ கதையை கேட்டு தயாரிக்க சொன்ன ‘வாரிசு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘வசந்த முல்லை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மொழி முன்னோட்டத்தை ‘சூப்பர் ஸ்டார்’ சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும், தமிழ் மொழி முன்னோட்டத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ‘வசந்த முல்லை’.

இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்திருக்கிறார். நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ‘நேரம்’, ‘பிரேமம்’ படப் புகழ் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ரா‘ஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹாவும், எஸ். ஆர். டி. எண்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராம் தல்லூரியும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதன்போது தயாரிப்பாளர்கள் ரேஷ்மி சிம்ஹா, ராம் தல்லூரி, இயக்குநர் ரமணன் புருஷோத்தமா, இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன், கூடுதல் திரைக்கதை வசனம் எழுதிய பொன்னிவளவன், நடிகர்கள் மணிகண்ட பிரபு, சரத் ரவி மற்றும் படத்தின் நாயகன் சிம்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ராம் தல்லூரி பேசுகையில்….

” ரவி தேஜா உடனான படப்பிடிப்பில் தான் சிம்ஹாவை முதலில் சந்தித்தேன். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற திறமையாளர் என்ற கர்வம் சிறிதும் இல்லாமல், மிக எளிமையாக படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றினார். அவரை சந்தித்த உடனேயே, உங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். சில மாதங்கள் கழித்து, என்னை தொடர்பு கொண்டு, ‘கதை ஒன்று இருக்கிறது. கேளுங்கள்’ என்றார்.

அடுத்த நாள் ஹைதராபாத்தில் ஹோட்டல் ஒன்றில் சந்திப்பு நடந்தது. அதன் போது இயக்குநர், சிம்ஹா, நான், என்னுடைய மகன் ஆகியோர் இருந்தோம். இயக்குநர் கதையை விவரித்துக் கொண்டே இருந்தார். இந்த கதையை கேட்ட முதல் பார்வையாளரான என்னுடைய மகன், கதையைக் கேட்டு விட்டு,’ இது ஆங்கில படம் போல் உலக தரத்தில் இருக்கிறது’ என்றார். ஏனெனில் இது புதுவித ஜானரிலான திரைப்படம். இது போன்ற கதை சொல்லும் உத்தி இதற்கு முன் எந்தத் திரைப்படத்திலும் வரவில்லை. அந்தத் தருணத்திலேயே நான் ‘வசந்த முல்லை’ படத்தைத் தயாரிக்க தீர்மானித்து விட்டேன். இது கமர்சியலா..? கமர்சியல் இல்லாததா..? என்ற எல்லையை கடந்து, இது புது வித ஜானரில் உருவாகி இருக்கும் திரைப்படம். இது ரசிகர்களை கவரும்.

ரேஷ்மி சிம்ஹாவின் கடும் உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. இந்த திரைப்படத்தை உருவாக்கிய அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு நாட்கள் குறைவு என்றாலும், இந்த திரைப்படம் மூன்றரை ஆண்டு கால உழைப்பில் உருவாகி இருக்கிறது. சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர்கள் ஆர்யா மற்றும் ரக்ஷித் ஷெட்டிக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

வசந்த முல்லை

producer Ram Talluri speech at vasantha mullai trailer launch

‘லியோ’ படத்தில் ‘கைதி’ & ‘விக்ரம்’ பட லீட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

‘லியோ’ படத்தில் ‘கைதி’ & ‘விக்ரம்’ பட லீட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் – லோகேஷ் இணையும் புதிய படத்திற்கு லியோ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த் சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

‘லியோ’ பட பூஜை வீடியோவில் நடிகர் மரியம் ஜார்ஜ் இடம்பெற்றிருந்தார்.

இவர் லோகேஷ் இயக்கிய ‘கைதி’ படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்து கலக்கியிருந்தார்.

மேலும் கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தல் ஏஜென்ட் டீனாவாக அதிரடி காட்டிய வசந்தியும் நடிக்கிறார்.

சமீபத்தில் காஷ்மீர் சென்ற ‘லியோ’ படக்குழுவில் இடம்பிடித்திருந்தார் வசந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj gives the lead of ‘Kaithi’ & ‘Vikram’ in ‘Leo’

மீண்டும் விஜய்யுடன் கூட்டணி.; ‘வாரிசு’ தயாரிப்பாளர்கள் அதிரடி அறிவிப்பு

மீண்டும் விஜய்யுடன் கூட்டணி.; ‘வாரிசு’ தயாரிப்பாளர்கள் அதிரடி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார்.

‘கீத கோவிந்தம்’ படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசுராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை இணைகிறார்.

இது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிளாக் பஸ்டர் வெற்றியான ‘கீத கோவிந்தம்’ படத்திற்கு பிறகு விஜய் மற்றும் பரசுராம் இரண்டாவது முறையாக இணைகின்றனர். இந்த புராஜெக்ட் புதிய மற்றும் தனித்துவமான கதையாக இருக்கும்.

ஸ்டார் தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இந்த புதிய படத்தைத் தயாரிக்க உள்ளனர். விஜய்யுடன் இணையும் இந்த படம் எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட இருக்கிறது.

நடிகர்கள், படக்குழுவினர் விவரங்கள் மற்றும் படம் குறித்தான அடுத்தடுத்த புரோமோஷனல் விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை தெலுங்கில் பிரபலமான தில் ராஜூ மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.

Sri Venkateswara creations @SVC_Official announces their upcoming project with THE #VijayDeverakonda @TheDeverakonda & @ParasuramPetla. ???

More details soon. https://t.co/jhHO8nG7KU

Team up with Vijay again.; ‘Varisu’ makers announced

ஷாக்கிங் புகைப்படங்களை வெளியிட்ட தெய்வ திருமகள் சாரா அர்ஜூன்

ஷாக்கிங் புகைப்படங்களை வெளியிட்ட தெய்வ திருமகள் சாரா அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் ‘தெய்வ திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா. ‘சைவம்’ மற்றும் ‘சில்லு கருப்பட்டி’ படத்திற்காக விருதுகளை வென்றார்.

சாராவுக்கு இப்போது 17 வயதாகிறது, இதற்கிடையில், நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

படத்தில் சாரா சிகரெட் புகைக்கிறார் அவரது தோற்றமும் மோசமான வழிகளில் விழுந்துவிட்டதைக் குறிக்கிறது. இருப்பினும் ரசிகர்கள் விரக்தியடையத் தேவையில்லை, ஒரு புதிய தமிழ் திரைப்படமான ‘Quotation Gang’ படத்தில் நடிக்கிறார். அதிலிருந்து இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘Deiva Thirumagal’ actress Sara Arjun shocks fans with latest photos

More Articles
Follows