ஒரு நாளைக்கு ரூ. 80 லட்சம் செலவிடும் ‘புஷ்பா 2’ படக்குழு.; அப்படி என்ன எடுக்குறாங்க.?

ஒரு நாளைக்கு ரூ. 80 லட்சம் செலவிடும் ‘புஷ்பா 2’ படக்குழு.; அப்படி என்ன எடுக்குறாங்க.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்.

இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

‘புஷ்பா 2’ படத்தின் சண்டைக்காட்சிகளுக்கான படப்பிடிப்பின் ஒரு நாள் செலவு ரூ.80 லட்சம் வரை படக்குழு செலவிட்டு வருகிறது என கூறப்படுகிறது.

‘Pushpaa 2’ crew spends up to Rs 80 lakh on a day’s shooting for stunts

ரசிகர்களை மீண்டும் வேட்டையாடி பாக்ஸ் ஆபீசில் விளையாடும் கமல்ஹாசன்

ரசிகர்களை மீண்டும் வேட்டையாடி பாக்ஸ் ஆபீசில் விளையாடும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு.’

இதில் கமலுடன் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

அப்போதே இத்திரைப்படம் பெரும் வசூலைக் குவித்து மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது இந்த படம் டிஜிட்டல் செய்யப்பட்டு கடந்த வாரம் ஜூன் 23ஆம் தேதி ரீ – ரிலீஸ் ஆனது.

தற்போது ரிலீசாகி ஒரு வாரம் ஆன நிலையிலும் அரங்கு நிறைந்த காட்சியாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

#VettaiyaaduVilaiyaadu இன்று ஜூலை 1 இரவு மற்றும் நாளை இரவு பிவிஆர் ஹவுஸ்புல், சனி ஞாயிறு எஸ்கேப் மற்றும் பலாசோ காட்சிகள் ஹவுஸ்புல் ஆனதால் எஸ்கேப் திரையரங்கில் நாளையும் நாளை மறுநாளும் எக்ஸ்ட்ரா இரவு காட்சிக்கு தற்போது டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளதாம்.

மேலும் சென்னை, கோவை மற்றும் திருச்சியிலும் இன்று மதியம் & ஈவினிங் காட்சிக்கு ஆன்லைனில் டிக்கெட் 90% விற்று தீர்ந்து ரீ-ரிலீஸ் வரலாற்றில் புதிய சாதனையை படைத்து வருகிறார் போலீஸ் ராகவன்.

வேட்டையாடு விளையாடு

Vettaiyaadu Vilaiyaadu making records even in rerelease

அண்ணாமலையாரை தரிசித்த மொய்தீன் பாய்.; தி.மலையில் திரண்ட ரஜினி ரசிக(பக்த)ர்கள்

அண்ணாமலையாரை தரிசித்த மொய்தீன் பாய்.; தி.மலையில் திரண்ட ரஜினி ரசிக(பக்த)ர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

ரஜினிகாந்த்

தற்போது கடந்த ஓரிரு தினங்களாக திருவண்ணாமலை பகுதியில் நடந்து வருகிறது. அங்கு ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசனம் செய்தார் ரஜினிகாந்த். அப்போது அவரைக் காண பக்தர்களும் ரசிகர்களும் பெருமளவில் திரண்டனர்.

மேலும் ரஜினியுடன் பக்தர்கள் செஃல்பி எடுத்துக் கொண்டனர்.

ரஜினிகாந்த்

ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரிபக்க இதில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதையின் நாயகர்கள் நடிக்க மற்றொரு கெஸ்ட் ரோலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த்

Rajinikanth dharshan at Thiruvannamalai temple

உதயநிதி நடித்த ‘மாமன்னன்’ வெற்றியை கொண்டாடிய படக்குழு

உதயநிதி நடித்த ‘மாமன்னன்’ வெற்றியை கொண்டாடிய படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மாமன்னன்

இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதில், உதயநிதி, ஏ.ஆர்.ரகுமான், மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மாமன்னன்

crew celebrated the success of maamannan by cutting a cake

மரியாதை என்பது சுதந்திரம்… தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம விருந்து

மரியாதை என்பது சுதந்திரம்… தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை வெளியிடவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியது.

தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர். மரியாதை என்பது சுதந்திரம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேப்டன் மில்லர்

dhanush’s captain miller first look poster released

ஜூலை 2-யில் சிவகார்த்திகேயன் பட டிரைலர் ரிலீஸ்; வீடியோ வெளியிட்டு அறிவித்தது படக்குழு

ஜூலை 2-யில் சிவகார்த்திகேயன் பட டிரைலர் ரிலீஸ்; வீடியோ வெளியிட்டு அறிவித்தது படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

‘மாவீரன்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை ஜூலை 2-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனை படக்குழு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Sivakarthikeyan’s maaveeran movie trailer release date announcement

More Articles
Follows