என் ரூட்டே வேற.; தெலுங்கு நடிகர்கள் வரிசையில் தியேட்டர் தொடங்கும் சிவகார்த்திகேயன்

என் ரூட்டே வேற.; தெலுங்கு நடிகர்கள் வரிசையில் தியேட்டர் தொடங்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சிறந்த பிசினஸ்மேன் என்பவர் *தான் உறங்கும் போதும் கூட சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும்* என யாரோ ஒருவர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.

இந்த சொல்லை மற்றவர்கள் கடைப் பிடிக்கிறார்களா இல்லையோ ஆனால் நம் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஒரு கட்டத்தில் சினிமா கை கொடுக்கவில்லை என்றாலும் அவர்கள் அடுத்த தொழிலை கைப்பற்றி இருப்பது ஹோட்டல் தொழில்.

பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் திருமண மண்டபங்களை கட்டியும் நடத்தி வருகின்றனர்.

ஆனால் தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை பொருத்தவரையில் பலர் தியேட்டர்களை கட்டி அதில் லாபம் பார்த்து வருகின்றனர்.

முக்கியமாக இளம் நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா, மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் தியேட்டர்களை திறந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல ஏசியன் சினிமாஸ் நிறுவனம் சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மல்டிபிளக்ஸ் தியேட்டரை கட்ட முடிவுடுத்துள்ளதாம்.

ஐதராபாத்தில் அல்லு அர்ஜுனின் எஎஎ மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறப்பு விழாவின் போது ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Actor Sivakarthikeyan going to launch AAA cinemas

பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்துள்ள SALMON 3D ரிலீஸ் அப்டேட்

பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்துள்ள SALMON 3D ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைப்பட முன்னணி பாடகர்களில் ஒருவர் விஜய் யேசுதாஸ்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடியுள்ளார்.

மேலும் தமிழில் ‘படைவீரன்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக பாரதிராஜாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகியாக அம்ரிதா நடித்திருந்தார்.

மேலும் தனுஷின் ‘மாரி’ படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்துள்ள மற்றொரு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் யேசுதாஸ் நடித்த ‘சால்மன் 3-டி’ தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட 7 மொழிகளில் தயாராகி உள்ளது.

இப்படத்தை 3டி கிளாஸ் அணிந்து கொண்டு தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோனிதா தோடா நாயகியாக நடிக்க இப்படத்தை ஷலீல் கல்லூர் என்பவர் இயக்கி உள்ளார்.

ராஜீவ் பிள்ளை மற்றும் தன்வி கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராகுல் மேனன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார்.

இந்தியாவில் கேரளா, துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30-முதல் தியேட்டர்களில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

விஜய் யேசுதாஸ்

Vijay Yesudas Salmon 3D movie release date update

3 லட்சம் சதுர அடி… எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ்.; அல்லு அர்ஜுனின் அடுத்த அதிரடி

3 லட்சம் சதுர அடி… எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ்.; அல்லு அர்ஜுனின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’ஏஏஏ சினிமாஸ்’ஸை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் திறந்து வைத்தார்.

அல்லு அர்ஜுன் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து ‘ஏஏஏ சினிமாஸ்’ஸை நிறுவியுள்ளார்.

இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், சுனில் நரங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது தங்களுக்குப் பிடித்த நட்சத்திரமான அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

சுனில் நரங் கூறுகையில்..

”ஏஏஏ சினிமாஸுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். இந்த வளாகத்தின் மொத்த பரப்பளவு மூன்று லட்சம் சதுர அடி.

மூன்றாவது தளத்தில் உணவு விடுதி 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. ஏஏஏ சினிமாஸின் நான்காவது மாடியில் ஐந்து திரைகளுடன் கூடிய திரையரங்கு உள்ளது.

திரை எண் 2 இல் LED திரை உள்ளது. தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ’ஏஏஏ சினிமாஸ்’ மட்டுமே. இதற்கு புரொஜக்‌ஷன் தேவையில்லை.

அல்லு அர்ஜுன்

ஆனால், திரையிடல் மிகவும் தெளிவாக இருப்பதோடு சிறப்பான திரை அனுபவத்தையும் தரும். 67 அடி உயரம் மற்றும் ATMOS ஒலியுடன் கூடிய பார்கோ லேசர் புரொஜெக்ஷனை ஸ்கிரீன்-1 கொண்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மிகப்பெரிய திரை இது. இங்கு ஒலியின் தரம் உலகத்தரம் வாய்ந்தது. லாபி மிகவும் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்” என்றார்.

அல்லு அரவிந்த் கூறுகையில்..

“’ஏஏஏ சினிமாஸ்’ உலகத்தரம் வாய்ந்த அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. சுனில் நரங் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துள்ளார். தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ’ஏஏஏ சினிமாஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு டீம் வொர்க் மற்றும் சுனில் நரங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏஏஏ சினிமாஸை மிக பிரமாண்டமாக அமைத்துள்ளனர். பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்” என்றார்.

அல்லு அர்ஜுன்

Actor Allu Arjun launched AAA Cinemas Grand opening ceremony

என் மகன் சிவா சிரமப்பட்டு நடித்தான்.; திண்டுக்கல் ஐ. லியோனி நெகிழ்ச்சி

என் மகன் சிவா சிரமப்பட்டு நடித்தான்.; திண்டுக்கல் ஐ. லியோனி நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, அமுதவாணன் உள்ளிட்டோ நடித்த திரைப்படம் ‘அழகிய கண்ணே’.

இந்த படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது திண்டுக்கல் ஐ. லியோனி பேசியதாவது…

கே எஸ் ரவிக்குமார் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான் , என் குடும்பத்தின் சார்பாக நான் அவருக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

இந்தப் படக்குழு அனைவருமே மிக எளிமையானவர்கள். விஜய் சேதுபதிக்கு எனது மிகப்பெரிய நன்றி, நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார், படக்குழு அனைவருக்கும் நன்றி, என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்தான்.

பல முயற்சிகள் செய்தான் அவன் உழைப்பிற்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும், படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

Dindigul Leony emotional speech about his son Sivakumar

நடிகர்கள்
லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன் மற்றும் விஜய் சேதுபதி.

தொழில் நுட்ப குழு

தயாரிப்பு – Esthell Entertainer
வழங்குபவர் – Kannan Ravi Group
இயக்கம் – R.விஜயகுமார்
இசை – ரகு நந்தன்
ஒளிப்பதிவு – அசோக் குமார்
படத்தொகுப்பு – சங்கத்தமிழன்

‘லியோ’ சிவக்குமார் சங்கடத்தை தீர்த்த சஞ்சிதா ஷெட்டி

‘லியோ’ சிவக்குமார் சங்கடத்தை தீர்த்த சஞ்சிதா ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, அமுதவாணன் உள்ளிட்டோ நடித்துள்ள படம் ‘அழகிய கண்ணே’.

இந்த படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நாயகன் லியோ சிவக்குமார் பேசியதாவது…

இந்த மேடை எனக்குக் கனவு. சினிமாவில் வருவது எனக்கு மிகப்பெரிய கனவு அதற்கு எனக்குச் சுதந்திரம் அளித்ததற்கு, என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன்.

சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன், சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கை பயணம் இருந்தது.

எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த கே எஸ் ரவிக்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி, என்னை இந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி.

இந்தப் படத்திற்குக் கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக்கொண்டார். சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.

எனக்கு நடிப்பில் நிறையை உதவிகள் செய்துள்ளார், இந்த படம் எனக்கு முதல் படி அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.

Leo Sivakumar speech about Sanchita and Azhagiya Kanne

‘மாமனிதன்’ சூட்டிங்கிலேயே சிவா ஹீரோ மெட்டீரியல்ன்னு சொன்னார் சீனு – விஜயகுமார்

‘மாமனிதன்’ சூட்டிங்கிலேயே சிவா ஹீரோ மெட்டீரியல்ன்னு சொன்னார் சீனு – விஜயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, அமுதவாணன் உள்ளிட்டோ நடித்துள்ள படம் ‘அழகிய கண்ணே’.

இந்த படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இயக்குநர் R விஜயகுமார் பேசியதாவது…

இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளர். அவரின் உடன் பிறந்த தம்பி நான், அவருடன் 4 படங்களில் வேலை பார்த்துள்ளேன். அந்த அனுபவத்தில் ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டுமென்கிற நோக்கில், இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன்.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அவர்களின் தீவிர ரசிகன் நான், அவர் என்னை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. கோவிட் காலத்தில் இந்தக்கதையை கடும் இன்னல்களுக்கிடையில் உருவாக்கினேன்.

மாமனிதன் படத்தில் சிவா ஒரு கதாப்பாத்திரம் செய்தார்.

அப்போது அண்ணன் (சீனு ராமசாமி) இவன் ஒரு ஹீரோ மெட்டீரியல், என்றார். அதை மனதில் வைத்து அவரை ஹிரோவாக்கினேன். இந்தப் படம் உருவாக முக்கிய காரணம் லியோனி அண்ணன், அவர்தான் தயாரிப்பாளரிடம் என்னை அனுப்பினார். சிவா இப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார்.

அவர் தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை பிடிப்பார். இப்படம் மதுரையில் ஆரம்பித்து சென்னை நோக்கி நகரும் ஒரு கதை. உதவி இயக்குநரின் வாழ்வைச் சொல்லும் கதை. பல நாயகிகள் இந்தக் கதையைக் கேட்டு தயங்கினார்கள் ஆனால் சஞ்சிதா ஷெட்டி கேட்டவுடன் நடிக்கிறேன் சார் என்றார். அவருக்கு நன்றி. அவருக்கு இந்தப்படம் ஒரு திருப்பமாக இருக்கும். Esthell Entertainer மற்றும் படத்தை வெளியிடும் Kannan Ravi Group நிறுவனத்திற்கு நன்றி. பிரபு சாலமன் சார் பிரபு சாலமானகவே நடித்துள்ளார் அவர் அலுவலகத்தையும் படப்பிடிப்பிற்கு தந்தார். அவருக்கு என் நன்றிகள். நட்புக்காக முதல் முறையாக விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியாகவே நடித்துள்ளார் அவருக்கு என் பெரிய நன்றி. சமூக நீதி பேசும் அழகான படம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

My brother Seenu found Siva as hero material at Maamanithan set

More Articles
Follows