‘மோதல் கதையானது…’ ஜிவி. பிரகாஷை இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்?

‘மோதல் கதையானது…’ ஜிவி. பிரகாஷை இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

akshmy ramakrishnan gv prakashகடவுள் இருக்கான் குமாரு படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் டிவி நிகழ்ச்சியை கிண்டலடிக்கும் விதமாக ஜிவி பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி நடித்திருந்தனர்.

ரசிகர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய நீங்கள் இப்படி செய்யலாமா?

என் படத்தில் ஒரு நல்ல கேரக்டர் தருகிறேன். உங்களால் நடிக்க முடியுமா என ட்விட்டரில் ஜிவி. பிரகாஷை கேட்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ்… “கதை நன்றாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். பரதேசி, ஆடுகளம், காக்கா முட்டை போன்ற தரமான படங்களில் நான் பணியாற்றி இருக்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மோதல் கருத்துக்கள் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளன.

இன்னும் ஓரிரு தினங்களிலேயே இருவரும் சந்திக்கவிருக்கிறார்காளம்.

அப்போது புதிய கதை குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

எனவே இவர்கள் இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

ஆனால் தற்போது வரை ஆர்.ஜே. பாலாஜி எந்தவித பதிலும் தரவில்லை.

கமல் கேரக்டரில் தனுஷ்… கௌதம்மேனன் புது முடிவு

கமல் கேரக்டரில் தனுஷ்… கௌதம்மேனன் புது முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal gautham menon dhanushகௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.

இதனையடுத்து மீண்டும் ஒரு புராஜெக்டில் இவர்கள் இணையவிருக்கிறார்களாம்.

ஆனால் அது படமல்ல. இண்டர்நெட்டில் வெளியாக உள்ள ஒரு தொடர்.

இதற்கு ராகவன் இஸ் பேக் என்ற பெயரிட்டுள்ளாராம் கௌதம்.

வேட்டையாடு விளையாடு படத்தில் அசிஸ்டென்ட் கமிஷனராக நடித்த கமலின் கேரக்டர் பெயர்தான் இந்த ராகவன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத்தொடரை தனுஷே தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஜிவி.பிரகாஷ்-ஆர்.ஜே. பாலாஜியை திட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்

ஜிவி.பிரகாஷ்-ஆர்.ஜே. பாலாஜியை திட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lakshmi ramakrishnan scold gv prakash and rj balajiஜிவி.பிரகாஷ்-ஆர்.ஜே. பாலாஜி இணைந்து நடித்த, கடவுள் இருக்கான் குமாரு அண்மையில் வெளியானது.

இப்படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியை பேசுவதெல்லாம் உண்மை என்ற பெயரில் காட்சியாக வைத்திருந்தனர்.

இதனைப் பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் அதில் நடித்த, ஜிவி.பிரகாஷ்-ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரை ட்விட்டரில் திட்டி இருந்தார்.

அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

Sad to see people who have power to make a difference use magic of cinema for cheap spoof & mocking others’ sincere efforts @RJ_Balaji

மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளவர்கள் சினிமா மூலம் மற்றவர்களை கிண்டல் செய்வது கவலையாக உள்ளது. @RJ_Balaji

@RJ_Balaji if i mock you saying you played it out and became a hero during #chennaifloods for the sake of publicity, how will you feel?

@RJ_Balaji சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது நீங்கள் விளம்பரத்திற்காக நடித்து ஹீரோவானீர்கள் என்று நான் கிண்டல் செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

I can give a super role for @gvprakash one with substance! in my next…it will do you good & do some good for youth who follow you, ready?

ஜி.வி. பிரகாஷ் உங்களுக்கு என் அடுத்த படத்தில் அருமையான கதாபாத்திரம் தருகிறேன். அது உங்களுக்கும், உங்களை பின்தொடரும் வாலிபர்களுக்கும் நல்லது செய்யும் கதாபாத்திரமாக இருக்கும். நடிக்க ரெடியா?

If #sollvadhellamunmai was manipulative and staged, will it cross 1000 episodes? I am completing 1000 myself:) audience are not fools…

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி சரியில்லை என்றால் 1000 எபிசோடை தாண்டி இருக்குமா? நானே 1000 எபிசோடுகளை முடிக்கிறேன். மக்கள் முட்டாள்கள் அல்ல.

இவ்வாறு பல ட்வீட்டுகளை போட்டு இருவரையும் திட்டி தீர்த்துள்ளார்.

கீர்த்தி மறுக்க, விக்ரமுக்கு ஜோடியானார் சாய் பல்லவி

கீர்த்தி மறுக்க, விக்ரமுக்கு ஜோடியானார் சாய் பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram keerthy suresh saai pallaviஇருமுகன் படத்தை தொடர்ந்து சிம்புவின் வாலு பட இயக்குனர் விஜயசந்தர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம்.

கரிகாலன் படத்திற்காக கொடுத்திருந்த கால்ஷீட்டில் இப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் விக்ரம்.

வருகிற டிசம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

இதில் விக்ரமுடன் சூரி, யோகிபாபு, சமுத்திரக்கனி, சம்பத் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர்.

வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் நடிப்பார் என கூறப்படுகிறது.

இதில் நாயகியாக நடிக்க, கீர்த்தி சுரேஷிடம் பேசினார்களாம்.

ஆனால் அவர் கால்ஷீட் இல்லை என மறுத்து விட்டாராம்.

எனவே ‘பிரேமம் படப்புகழ் மலர் டீச்சர்’ சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதில் வடசென்னை வாசியாக விக்ரம் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் பாராட்டியதால் செம ‘கிக்’கில் ஜிவி.பிரகாஷ்

விஜய் பாராட்டியதால் செம ‘கிக்’கில் ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay gv prakashஎம். ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்த ‘கடவுள் இருக்குறான் குமாரு’ (KIK) படம் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

முதல்நாளில் மட்டும் ரூ. 2.60 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த வார இறுதியில் சென்னையில் உள்ள 18 திரையரங்க வளாகங்களில் 223 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.80,39,240 வசூலாகியுள்ளதாம்.

இது ‘த்ரிஷா இல்லைனா’ நயன்தாரா’ படத்திற்கு பின்னர் ஜி.வி. பிரகாஷ் கேரியரில் அதிக வசூல் செய்துள்ள படம் என கூறப்படுகிறது.

இதனிடையில் ஜி.வி.பிரகாஷை போனில் தொடர்பு கொண்டு விஜய் வாழ்த்தினாராம்.

படத்தின் வசூலும், விஜய்யின் வாழ்த்தும் கிடைத்துள்ளதால் செம கிக்கில் இருக்கிறாராம் ஜி.வி. பிரகாஷ்.

‘லிங்கா-தலைவா’ படப்புகழ் வேந்தர் மூவிஸ் மதன் கைது

‘லிங்கா-தலைவா’ படப்புகழ் வேந்தர் மூவிஸ் மதன் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vendhar movies madhan

எஸ்ஆர்எம் நிறுவனர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் மதன்.

இவர் பச்சமுத்து மீது கொண்ட அன்பின் காரணமாக வேந்தர் மூவிஸ் என்ற சினிமா நிறுவனத்தை தொடங்கி படங்களை விநியோகித்தும், தயாரித்தும் வந்தார்.

ரஜினியின் லிங்கா, விஜய்யின் தலைவா உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் உரிமையை இவர் பெற்று இருந்தார்.

இதனிடையில் கங்கையில் ஜீவசமாதி அடைய போவதாக கடந்த மே மாதம் 28ஆம் தேதி மாயமானார்.

இவரின் இரண்டு மனைவிகள் இது தொடர்பாக புகார் கொடுத்தனர்.

மேலும் எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டியில் இவர் பண மோசடி செய்ததாக கூறப்பட்டு வந்தது.

தற்போது மணிப்பூர் மாநிலத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விரைவில் இவர் சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளார் என்றும் பல தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்றுமுன் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி.

More Articles
Follows