அஜித்துடன் இணையும் கமல் மகள் அக்‌ஷராஹாசன்

அஜித்துடன் இணையும் கமல் மகள் அக்‌ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akshara Haasan and ajith for AK57சிவா இயக்கும் அஜித்தின் ‘ஏகே 57’ படம் விரைவில் பல்கேரியா நாட்டில் தொடங்கப்படவுள்ளது.

இதில் ஹீரோவாகவும் வில்லனாகவும் அஜித் நடிக்கவிருக்கிறார் என்பதை முன்பே தெரிவித்திருந்தோம்.

தற்போது இப்படத்தின் முக்கிய கேரக்டரில் கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.

இவர்களுடன் காஜல் அகர்வால், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

கபாலி ரிசர்வேசன்… ஸ்தம்பித்து நின்ற இணையத்தளம்..!

கபாலி ரிசர்வேசன்… ஸ்தம்பித்து நின்ற இணையத்தளம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali rajini laughகபாலி முதல் நாள் முதல் காட்சி… இதுவே பெரும்பாலோரின் பேச்சாக இருந்து வருகிறது.

கபாலி முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்குமா? என எங்கும் ஒலிக்கும் குரல்களை கேட்க முடிகிறது.

இந்நிலையில் இப்படத்தில் வெளிநாட்டு ப்ரீமியர் புக்கிங் நேற்று தொடங்கி விட்டது.

தொடங்கிய அடுத்த நிமிடம் அனைத்து காட்சிகளும் புக்காகி விட்டது.

இவையில்லாமல் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இத்தகவல் வெளியான உடன் பலரும் அந்த இணைய தளத்தில் குவிய அடுத்த நொடியே அந்த தளமே முடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

முன்பதிவிலேயே ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து அரங்குகளிலும் முன்பதிவு தொடங்கிவிட்டால் கபாலி முன்பதிலும் சாதனை படைக்கும் என கோலிவுட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

‘ரஜினிதான் ஹீரோ; என் மகன் அல்ல…’ படவிழாவில் நாசர் பேச்சு.

‘ரஜினிதான் ஹீரோ; என் மகன் அல்ல…’ படவிழாவில் நாசர் பேச்சு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwaryaஅருமைச்சந்திரன் தயாரிப்பில், தனபால் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பறந்து செல்ல வா.

இதில் நாசரின் மகன் லுத்ஃபுதீன் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல் கெங், சதீஷ், கருணாகரன், ஆர் ஜே பாலாஜி, ஜோ மல்லூரி, மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காதல் பட புகழ் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நாசர் பேசியதாவது…

“என்னிடம் சொல்லாமலே என் மகன் லுத்ஃபுதீன் சைவம் படத்தின் ஆடிசனில் கலந்து கொண்டார்.

எந்தவொரு பயிற்சியில் இல்லாமல் நடிக்க கூடாது என திட்டினேன்.

பிறகு பயிற்சி எடுத்துக் கொண்டு இப்படத்தில் நடித்துள்ளார். இப்போது எனக்கு பேச கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது.

என் மகன் படவிழா என்றாலும் நான் மற்ற கலைஞர்களை போல் தான் அவனையும் பார்க்கிறேன்.

என் மகன் கதாநாயகன் என நினைக்கவில்லை. இயக்குனர் அவனை கதைநாயகன் என்றார்.

நானும் அதைதான் சொல்கிறேன். அவன் கதையின் நாயகன்தான்.

நாயகன் என்றால் அவருக்காக கதை இருக்கும். இப்போது உலகமே ஒரு தமிழ் (கபாலி) படத்தை எதிர்பார்க்கிறது. அவர்தான் தான் நாயகன்” என்று பேசினார்.

9 வயது சாதன்யாவுக்கு குறும்படம் இயக்கி சாதனை புரிய ஆசையாம்.!

9 வயது சாதன்யாவுக்கு குறும்படம் இயக்கி சாதனை புரிய ஆசையாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sadhana babyபேபி படத்தில் நடித்து முத்திரை பதித்தவர் பேபி சாதனா.

4ஆம் வகுப்பு படிக்கும் இந்த குழந்தை நட்சத்திரற்கு தற்போது 9 வயது ஆகிறது.

இவரின் வயதை விட அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்து வருகிறார்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் சிறுவயது கயல் ஆனந்தியாக நடித்தார்.

தற்போது நிசப்தம், காத்தாடி, வீரசிவாஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஒரு குறும்படத்திற்கு கதை எழுதி வருகிறார். அப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட இருக்கிறாராம்.

அதுபோல் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோருடன் நடிக்க ஆசை இருக்கிறது என்கிறார்.

மேலும் பிரபல இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ் ஆகியோர் இயக்கத்தில் நடிக்கவும் இவருக்கு ஆசை இருக்கிறதாம்.

சாதன்யா சிறுவயதிலேயே சாதனை பல படைக்க வாழ்த்துவோம்.

கபாலி ரிலீஸ்: ‘தெறி’க்கவிட ரெடியாகும் விஜய் ரசிகர்கள்

கபாலி ரிலீஸ்: ‘தெறி’க்கவிட ரெடியாகும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay stillsகபாலி ரிலீஸிற்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் இப்படம் பற்றிய செய்திகள் திரையுலகை திக்குமுக்காட செய்து வருகிறது.

இப்படத்தை தயாரித்த கலைப்புலி தாணு விஜய் நடித்த தெறி படத்தையும் தயாரித்திருந்தார்.

தெறி கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது.

வருகிற ஜீலை 22ஆம் தேதியன்று (கபாலி ரிலீஸ்) தெறியின் 100வது நாள் முழுமையடைகிறது.
எனவே இதனை கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஒரே நாளில் ரஜினி படத்தையும் விஜய் படத்தையும் அவரவர் ரசிகர்கள் கொண்டாடவுள்ள நிலையில் கோலிவுட் தாங்குமா? என்பதுதான் தெரியவில்லை.

கபாலியில் மூன்று மொழி பேசி அசத்தும் ரஜினிகாந்த்

கபாலியில் மூன்று மொழி பேசி அசத்தும் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini stills in kabaliகபாலி ரிலீஸை எதிர்நோக்கி வருடங்கள், மாதங்கள், வாரங்கள் என ஒவ்வொன்றாய் கரைந்து தற்போது நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

இப்படம் தொடர்பாக ஒவ்வொரு சுவாரஸ்ய தகவல்கள் கசிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிகாந்த், மூன்று மொழி பேசி நடித்திருக்கிறாராம்.

தமிழ், மலாய் மற்றும் சீன மொழி பேசி நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் மலாய் வில்லன், சீன வில்லன் உள்ளிட்ட கலைஞர்கள் நடித்திருப்பதால் அவர்களுடன் மோதும் காட்சிகளில் இம்மொழிகளை பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது.

More Articles
Follows