அஜித் படத்தில் அக்‌ஷராஹாசனின் கேரக்டர்

அஜித் படத்தில் அக்‌ஷராஹாசனின் கேரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Akshara Haasanசிவா இயக்கும் தல 57 படத்தில் அஜித்துடன் காஜல் மற்றும் அக்‌ஷராஹாசன் இருவரும் நடித்து வருகின்றனர்.

இப்படக்குழு தற்போது பல்கேரியா நாட்டில் முகாமிட்டுள்ளது.

இதில் அஜித்தின் மகளாக அக்‌ஷரா நடிப்பதாகவும் இல்லை இல்லை அவர்தான் அஜித்தை பழிவாங்கும் வில்லி என இரு மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையில் படப்பிடிப்பின் நடுவே, தான் விரைவில் இயக்கவிருக்கும் கதையை பற்றி அஜித்திடம் சொன்னாராம் அக்‌ஷரா.

அட அருமையா இருக்கே என பாராட்டினாராம் அஜித்.

Akshara Haasan character in ajiths AK57

எம்ஜிஆர்-என்டிஆர் உடன் கனெக்ஷன் ஆகும் சூர்யா

எம்ஜிஆர்-என்டிஆர் உடன் கனெக்ஷன் ஆகும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MGR NTRஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் எஸ்3.

இதனை சிங்கம்3 என்றும் சி3 என்றும் சொல்லலாம்.

இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படம் குறித்து சூர்யா செய்தியாளர்களிடம் பேசுகையில்…

நேருக்கு நேர் படம் மூலம் என் சினிமா வாழ்க்கையை துவங்கினேன்.

கிட்டதட்ட 19 வருடங்கள் ஆகிவிட்டது.

அப்போது அதிரடி ஆக்ஷன் கதைகளில் எல்லாம் நான் நடிப்பேன் என நினைக்கவில்லை.

ஒரு நடிகரும் ஒரு இயக்குநரும் நிறைய படங்களில் இணைந்து பணியாற்றுவது இல்லை.

பாலசந்தர், பாரதிராஜா காலத்தில்தான் அதுபோல் இருந்தது.

நான் டைரக்டர் ஹரியின் இயக்கத்தில் 5 படங்களில் நடித்து விட்டேன்.

இப்படக்கதை விசாகப்பட்டினத்தில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ராமாராவும் அப்போது முதல்வர்களாக இருந்தார்கள்.

அப்போது ஒரு முக்கிய பிரச்சினை சம்பந்தப்பட்ட விஷயம் ஆந்திராவில் நடந்தது.

அச்சமயம் தமிழக போலீஸ் குழு ஆந்திர போலீசாருக்கு உதவ அங்கு சென்றது.

இதை பின்னனியாக கொண்டு இப்படத்தை எடுத்துள்ளோம்” என்றார்.

60 நாட்களில் இரண்டு படம்; தனுஷின் அதிரடி முடிவு

60 நாட்களில் இரண்டு படம்; தனுஷின் அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush artகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

இந்த டிசைனிலேயே படத்தின் ரிலீஸ் தேதியையும் தெரிவித்திருந்தனர்.

இப்படம் காதலர் தின விருந்தாக பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகிறது.

இதனையடுத்து தனுஷ் நடித்து, தயாரித்து இயக்கி வரும் பவர் பாண்டி படத்தின் புதிய டிசைனை வெளியிட்டுள்ளனர்.

ராஜ்கிரண், பிரசன்னா மற்றும் சாயாசிங் நடிக்கும் இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி (தமிழ் புத்தாண்டு தினம்) வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 60 நாட்கள் இடைவெளியில் தனுஷின் இரண்டு படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

power pandi

தனுஷ் படத்தில் மீண்டு(ம்) வரும் திவ்யதர்ஷினி (டிடி)

தனுஷ் படத்தில் மீண்டு(ம்) வரும் திவ்யதர்ஷினி (டிடி)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush vijay tv ddமுன்னனி நடிகரான தனுஷ் தற்போது முதன்முறையாக பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி தயாரித்து வருகிறார்.

இதில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதில் முக்கிய வேடத்தில் தனுஷ் நடிக்க அவருடன் மடோனா செபாஸ்டியனும் நடித்து வருகிறார்.

ஷான் ரோல்டன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் இரண்டு பாடல்களை செல்வராகவன் எழுதியிருக்கிறாராம்.

இந்நிலையில் இதில் விஜய் டிவி புகழ் டிடி என்ற திவ்யதர்ஷினியும் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த டிடி, தற்போது மீண்டு தனுஷ் உடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன்-நயன்தாராவின் படத்தலைப்பு குறித்த தகவல்

சிவகார்த்திகேயன்-நயன்தாராவின் படத்தலைப்பு குறித்த தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan nayantharaரெமோ படத்தை தொடர்ந்து மீண்டும் 24ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி, ரோகினி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் தொடக்கம் முதல் ரிலீஸ் தேதி வரை அனைத்தையும் அறிவித்து ஒவ்வொன்றாக திட்டமிட்டு செய்து வருகிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

இப்படத்தை அடுத்த வருடம் 2017ல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை 2017 ஏப்ரல் 14ஆம் தேதி (தமிழ் புத்தாண்டு) தினத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.

‘அதுக்கும் மேல செஞ்சீட்டிங்க பாஸ்…’ பரதனை பாராட்டிய பைரவா

‘அதுக்கும் மேல செஞ்சீட்டிங்க பாஸ்…’ பரதனை பாராட்டிய பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa teamஅழகிய தமிழ் மகன் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், அப்பட இயக்குநர் பரதனுக்கு மீண்டும் பைரவா வாய்ப்பை வழங்கினார் விஜய்.

விஜய்யின் இந்த முடிவுக்கு நிறைய பேர் வருத்தம் தெரிவித்தனர்.

ஆனால் விஜய் பாஸிட்டிவ்வாக நினைத்தார்.

தற்போது விஜய் நினைத்தது போலவே, படம் நன்றாக வந்துள்ளதாம்.

எனவே பரதனை அழைத்து, ” சொன்னதை விட அதுக்கும் மேலே செஞ்சிட்டீங்க பாஸ்.. நிச்சயம் உழைப்பிற்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்” என பாராட்டினாராம் விஜய்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

More Articles
Follows