தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ & அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படமும் ஒரே நாளில் ஜனவரி 19ல் வெளியாகிறது.
எனவே இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் மோதலை தொடங்கியுள்ளனர்.
இந்திலையில் ‘பேட்ட’ படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 1 கோடி பார்வைகளைக் கடந்தது.
ஆனால், நேற்று (டிசம்பர் 30) வெளியிடப்பட்ட ‘விஸ்வாசம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான 9 மணி நேரத்துக்குள்ளாகவே 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
இதனை சத்யஜோதி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
தென்னிந்திய மொழி படங்களின் ட்ரெய்லர்களில் குறைவான நேரத்தில், 1 கோடி பார்வைகளை கடந்த முதல் படம் ‘விஸ்வாசம்’ என்ற இமாலய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.
மேலும், ‘விஸ்வாசம்’ படத்தின் ட்ரெய்லருக்கு 1 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.