வேகம் எடுக்கும் அஜித்தின் விவேகம்

வேகம் எடுக்கும் அஜித்தின் விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivegamசிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷாராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விவேகம்.

இப்படக்குழுவினர் கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் காட்சிகளை படமாக்கிவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.

எனவே, விரைவில் இதன் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது.

விவேகம் குழுவின் வியாழன் சென்டிமெண்ட்டை முன்னிட்டு இதன் டப்பிங் பணிகளை இன்று தொடங்கியுள்ளனர்.

ஆனாலும் சில காட்சிகள் மீதமிருப்பதால் சென்னையில் படமாக்கவிருக்கிறார்களாம்.

இப்படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதால் இன்னும் விறுவிறுப்பாக பணிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்களாம்.

சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Ajith Vivegam movie post production work updates

செக்ஸியான பெண்கள் பட்டியலில் ரஜினி-விஜய் பட ஹீரோயின்ஸ்

செக்ஸியான பெண்கள் பட்டியலில் ரஜினி-விஜய் பட ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

deepika priyanka hotஉலகின் செக்ஸியான 100 பெண்கள் யார்? என்ற பட்டியலை ஆண்டுதோறும் ஒரு பிரபல பத்திரிகை (மேக்ஸிம்) வெளியிட்டு வருகிறது.

தற்போது இந்தாண்டுக்கான உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய நடிகைகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

தீபிகா படுகோனே 10வது இடத்திலும் பிரியங்கா சோப்ரா 32 இடத்திலும் உள்ளனர்.

இதில் ரஜினியுடன் கோச்சடையான் படத்திலும் தீபிகாவும், விஜய்யுடன் தமிழன் படத்திலும் பிரியங்கா சோப்ராவும் நடித்திருந்தனர்.

மேலும் இவர்கள் இருவரும் அண்மையில் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Deepika and Priyanka Chopra feature In Maxims List Of Sexiest Women 2017

அஜித் வில்லன் விவேக் ஓபராயின் சிறுபிள்ளைத்தனம்

அஜித் வில்லன் விவேக் ஓபராயின் சிறுபிள்ளைத்தனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith villain Vivek Oberoiசிவா இயக்கும் விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும்போது…

’சாக்லேட் அதிகம் சாப்பிடக்கூடாது. உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்’ என என் மனைவி அடிக்கடி கண்டிப்பாள்.

ஆனாலும் என்னை அறியாமல் குழந்தையைப்போல சாக்லேட்களை திருடி சாப்பிடுகிறேன்.

என் குழந்தைகளுக்கான சாக்லேட்டுகளையும் திருடுகிறேன்.

எனக்கு சாக்லேட் ரொம்ப பிடித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Ajith villain Vivek Oberoi behaves like kids

80களின் ஹீரோ-ஹீரோயின் சந்திப்பில் ரஜினி கலந்து கொள்வாரா?

80களின் ஹீரோ-ஹீரோயின் சந்திப்பில் ரஜினி கலந்து கொள்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth with ever green 80s herosநடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், சிரஞ்சீவி, மோகன், அர்ஜீன், சுமன் மற்றும் சரிதா, ராதிகா, அம்பிகா, ராதா, நதியா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் 1980களில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வருடம் வருடம் ஒரு குறிப்பிட்ட தேதியில் சந்தித்து தங்களது நட்பை புதுப்பித்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இவ்வருட சந்திப்பை இந்தாண்டு சீனாவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இச்சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளது. ஆனால் இதில் யார், யார் கலந்துகொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

காலா சூட்டிங்கில் ரஜினிகாந்த் பிஸியாக இருப்பதால், அவர் கலந்துகொள்ள வாய்ப்பு மிக குறைவு என சொல்லப்படுகிறது.

Will Rajini participate in Ever Green 80s actors meeting in China

rajinikanth with ever green 80 heroines

விஜய்-அஜித்-விஜய் சேதுபதிக்காக காத்திருக்கும் ரவிஅரசு

விஜய்-அஜித்-விஜய் சேதுபதிக்காக காத்திருக்கும் ரவிஅரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ravi arasu waiting for Vijay Ajith and Vijay Sethupathiஅதர்வா நடித்த ஈட்டி படத்தை தொடர்ந்து ஜிவி. பிரகாஷ் நடிக்கும் ஐங்கரன் படத்தை இயக்கி வருகிறார் ரவி அரசு.

இதில் என்ஜினியரிங் மாணவராக நடித்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.

காமன் மேன் நிறுவனம் சார்பாக கணேஷ் தயாரிக்க, மஹிமா நம்பியார் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய்சேதுபதியை சந்தித்த இயக்குனர் ரவி அரசு அவரிடம் நான்கு ஒன்லைனர்களை சொல்லியிருக்கிறாராம்.

மேலும் அஜித், விஜய் ஆகிய டாப் ஹீரோக்களுக்கும் என்னிடம் கதை உள்ளது என சொல்லி வருகிறார் இந்த ஈட்டி இயக்குநர்.

Director Ravi arasu waiting for Vijay Ajith and Vijay Sethupathi

ayngaran pooja director ravi arasu

ரஜினியின் கடைசி படம் ‘காலா’..? அடுத்த திட்டம் என்ன.?

ரஜினியின் கடைசி படம் ‘காலா’..? அடுத்த திட்டம் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kaalaஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் அடுத்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து, பா. ரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இதன் சூட்டிங் தற்போது மும்பையில் நடந்து வருகிறது.

தனுஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இது ரஜினிகாந்தின் 164வது படம் என இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் தெரிவித்து இருந்தார்.

இதுவே ரஜினிகாந்த் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இப்படத்தை முடித்துவிட்டு அரசியலில் தீவிர கவனம் செலுத்த போகிறாராம் சூப்பர் ஸ்டார்.

வருகிற 2021ஆம் ஆண்டு தேர்தலை குறி வைத்து அவரது நடவடிக்கைகள் இருக்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

ரஜினிக்கு ஆதரவாக ஆனந்த்ராஜ், ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் களம் இறங்குவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

Whether Rajinis 164th movie Kaala will be his last movie?

More Articles
Follows