‘விடாமுயற்சி’ என்னாச்சு.? வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் அஜித்.; ரசிகர்கள் அப்செட்.!

‘விடாமுயற்சி’ என்னாச்சு.? வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் அஜித்.; ரசிகர்கள் அப்செட்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்திற்குப் பிறகு ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க உள்ளார் அஜித். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மகிழ்திருமேனி இயக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் தன்னுடைய பைக் பயணங்களை முடித்துவிட்டு தற்போது வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் அஜித்.

தற்போது அங்குள்ள ஒரு புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டு பின்னர் திடீரென அவரை நீக்கியது படக்குழு.

அதன் பின்னர் அஜித் பைக் பயணம் மேற்கொண்டார். அஜித் படத்தின் அப்டேட்டை அடிக்கடி கேட்டு கேட்டு ரசிகர்கள் அப்செட்டான நிலையில் தற்போது ‘விடாமுயற்சி’ சூட்டிங் தொடங்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith fans upset with Vidaamuyarchi shooting delay

பிரபாஸுக்கு கமல் வில்லன்.; கமலுக்கு சிம்பு வில்லன்.; பட்டைய கிளப்பும் ஸ்டார்ஸ்.!

பிரபாஸுக்கு கமல் வில்லன்.; கமலுக்கு சிம்பு வில்லன்.; பட்டைய கிளப்பும் ஸ்டார்ஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான மாற்றங்களை நாம் பார்த்து வருகிறோம்.

ஒரு பிரபல ஹீரோ நடிக்கும் படத்தில் மற்றொரு முன்னணி நடிகர் நடிக்க தயங்குவார். இதற்கு முக்கிய காரணம் அவர்களிடையே ஈகோ பிரச்சனை தான.

ஆனால் இதை தற்போது உடைத்திருந்து வருகின்றனர் முன்னணி ஹீரோக்கள்.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அதுபோல விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும் ஒரு ஹீரோவான விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.

கமலின் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க முக்கிய வேடங்களில் சூர்யா, பகத்பாசில் நடித்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சனுக்கு வில்லனாக கமல் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கமல் படத்தில் சிம்பு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மணிரத்னம் இயக்க உள்ள கமலின் 234 வது படத்தில் சிம்பு தான் மெயின் வில்லன் என கூறப்படுகிறது.

மேலும் இது சிம்புவின் 50 ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்…

சிம்புவின் 48வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Simbu plays villain in his 50th movie opposite to Kamal

48 வயதில் கர்ப்பிணியான கவுண்டமணி பட நடிகை ஷர்மிலி.; ரசிகர்கள் வாழ்த்து

48 வயதில் கர்ப்பிணியான கவுண்டமணி பட நடிகை ஷர்மிலி.; ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை ஷர்மிலி. இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கவுண்டமணியுடன் இவர் நடித்த படங்கள் ரசிகர் மத்தியில் பிரபலமானது.

கவுண்டமணியுடன் மட்டும் கிட்டத்தட்ட 27 படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்த போது திருமணம் செய்ய முடிவெடுத்தார். ஆனாலும் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.

கிட்டத்தட்ட 40 வயதில் ஐடி ஊழியர் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் தான் 48 வயதில் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் எடுத்த பேட்டியில் தான் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தனக்கு வாழ்க்கையில் எல்லாமே தாமதமாக நடந்ததாகவும் அதில் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

actress sharmili pregnant at the age of 48

OFFICIAL தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி

OFFICIAL தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ஃபர்ஸ்ட்லுக் ஜூன் 30ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

கேப்டன் மில்லர்

captain miller first look will be released on june 30

‘நா ரெடி’ பாடலுக்கு எதிர்ப்பு.; அடிப்பணிந்த ‘லியோ’ டீம் செய்த மாற்றம்

‘நா ரெடி’ பாடலுக்கு எதிர்ப்பு.; அடிப்பணிந்த ‘லியோ’ டீம் செய்த மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்’லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இப்பாடலில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளதால், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம், இந்தப் பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளித்தார். அதில், ‘போதைப் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் உள்ளது என கூறிருந்தார்.

இந்நிலையில், ’நான் ரெடி’ பாடலில் ‘லியோ’ படக்குழு ஒரு சிறிய மாற்றத்தை செய்துள்ளது.

யூடியூபில் இருக்கும் இப்பாடலில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் இடங்களில் ‘புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் கொல்லும்’ என்ற வாசகம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

லியோ

‘Leo’ movie team necessary action to mute ‘Naa Ready’ song controversies

18 ஆண்டுகளுக்கு பிறகு… ‘7G ரெயின்போ காலனி’ படத்தின் பார்ட் 2 அப்டேட்

18 ஆண்டுகளுக்கு பிறகு… ‘7G ரெயின்போ காலனி’ படத்தின் பார்ட் 2 அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை கலக்கிய திரைப்படங்களில் முக்கியமான ஒன்று ‘7G ரெயின்போ காலனி’.

ஏ எம் ரத்னம் தயாரித்திருந்த இந்த படத்தை செல்வராகவன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இதில் இடம்பெற்ற நா முத்துக்குமார் எழுதிய கண் பேசும் வார்த்தைகள் என்ற பாடல் இன்று வரை பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது.

இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே இதில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

7G Rainbow Colony part 2 updates is here

More Articles
Follows