அஜித் படத்தில் கூட்டணி; மீண்டும் இணையும் பிரபுதேவா-நயன்தாரா

அஜித் படத்தில் கூட்டணி; மீண்டும் இணையும் பிரபுதேவா-நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhu deva and nayantharaநடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என வலம் வருபவர் பிரபுதேவா.

சில காலங்களுக்கு இயக்குனராக இருந்தவர் தற்போது நடிகராக பிஸியாகி விட்டார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் அஜித் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

விரைவில் விஸ்வாசம் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதனையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த இரு படங்களை முடித்துவிட்டு பிரபுதேவா இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிது.

இதில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

வில்லு படத்தில் நயன்தாராவை இயக்கியபோது பிரபுதேவா உடன் காதல் கைகூடியது.

அதன்பின்னர் திருமணம் வரை சென்று இந்த ஜோடிகள் திருமணம் செய்யாமல் பிரிந்துவிட்டனர்.

தற்போது இந்த படத்திற்காக இவர்கள் இணைவார்கள் என கூறப்படுகிறது.

நயன்தாராவின் கால்ஷீட் தேதிகளைக் கவனித்து வருபவர், தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷ்.

அவர்தான் நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தைத் தயாரித்திருந்தார்.

தற்போது இந்த மூவர் இணையும் படத்தையும் அவரே தயாரிப்பார் என சொல்லப்படுகிறது.

சிம்புவை விட்டு பிரிந்த பின் சிம்பு உடன் இணைந்து பணிபுரிந்தார் நயன். எனவே பிரபுதேவாவுடன் இணைவதிலும் எந்த சிக்கலும் இருக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரொபஷன் வேறு, பர்ஷனல் வேறு என்பதே நயன்தாராவின் ரூட்டாம்.

மனதைப் பிழியும் குரங்கணி காட்டுத் தீ.; கமலின் வணக்கமும் அனுதாபமும்!

மனதைப் பிழியும் குரங்கணி காட்டுத் தீ.; கமலின் வணக்கமும் அனுதாபமும்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan reaction to Kurangani hills fire accidentதேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு 2 நாட்களாக பரவி வருகிறது.

அதனை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடூபட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.

மொத்தம் 40 மாணவ, மாணவிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீவிபத்தில் சிக்கியவர்கள் சென்னை மாணவிகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஐடி ஊழியர்கள் சிலரும் இந்த தீ விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

காட்டுத் தீயில் சிக்கிய 21 மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது.

இந்த தீ விபத்தில் இதுவரை 9 பேர் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அவர்களது சடலங்களை ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

Kurangani forest fire and its victims is heart rending. Those with burn injuries should heal fast. I wish them all the best for recovery and rehabilitation. To those bereived families my deepest sympathy.

Kamalhassan reaction to Kurangani hills fire accident

ரஜினியை அடுத்து சூர்யாவை இயக்கும் ரஞ்சித்..?

ரஜினியை அடுத்து சூர்யாவை இயக்கும் ரஞ்சித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Rajinis Kaala movie Ranjith may direct Suriyaஅட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் என இரு படங்களை இயக்கினார் ரஞ்சித்.

மெட்ராஸ் படத்தில் கார்த்தி நடித்திருந்தார். எனவே இவரின் முயற்சியால் சூர்யாவை இயக்கும் வாய்ப்பை பெற்றார் ரஞ்சித்.

ஆனால் அவரே எதிர்பாராத வண்ணம் ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

ரஜினி பட வாய்ப்பை மறுக்க வேண்டாம் என சூர்யாவே விட்டுக் கொடுத்தார்.

கபாலி வெற்றியைத் தொடர்ந்து ரஜினியின் காலா படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் ரஞ்சித்.

காலா படம் அடுத்த மாதம் ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.

எனவே அடுத்து சூர்யா படத்தை இயக்குவார் ரஞ்சித் என சொல்லப்படுகிறது.

After Rajinis Kaala movie Ranjith may direct Suriya

பாபி சிம்ஹா-பார்வதி நாயர் இணையும் வெப் சீரிஸ்

பாபி சிம்ஹா-பார்வதி நாயர் இணையும் வெப் சீரிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bobby Simba and Parvathy Nair joins for Web Series

சினிமா ரசிகர்களின் ரசனை காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகிறது.

தற்போது வெப்சீரிஸ் கலாச்சாரம் பெருகி வருகிறது.

யூ-டியூப், அமேசான், நெட்ஃப்லிக்ஸ் என எல்லா வீடியோ வலைதளங்களின் தொடர்களையும் தமிழ் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு ஏற்ப சினிமா உலகினரும் வெப்சிரீஸ் பக்கம் தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர்.

‘ப்ரீத்’ என்ற இந்தித் தொடரில் மாதவன் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி சிம்ஹா.

நாயகியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இத்தொடரை ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத, `சவாரி’ படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்குகிறார்.

Bobby Simba and Parvathy Nair joins for Web Series

விக்ரம் மகன் துருவ் உடன் டூயட் பாடும் கௌதமி மகள்

விக்ரம் மகன் துருவ் உடன் டூயட் பாடும் கௌதமி மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhruv and subhu lakshmiதெலுங்கில் ஹிட்டடித்த `அர்ஜுன் ரெட்டி’ படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

வர்மா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார்.

தனக்கு தேசிய விருதை பெற்று தந்த பாலாதான் இப்படத்தை இயக்க வேண்டும் என நினைத்த விக்ரம் தன் மகனை அவரிடம் ஒப்படைத்துவிட்டார்.

இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் நாயகி தேர்வு சில மாதங்களாக நடந்து வந்தது.

சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கவுதமியின் மகள் சுபுலட்சுமி இதில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

நாடோடிகளை தொடர்ந்து சுந்தர பாண்டியனுக்கும் 2ஆம் பாகம் எடுக்கும் சசிகுமார்

நாடோடிகளை தொடர்ந்து சுந்தர பாண்டியனுக்கும் 2ஆம் பாகம் எடுக்கும் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Nadodigal 2 Sasikumar going to act in Sundarapandian 2கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதை தமிழ் திரையுலகினர் வாடிக்கையாக்கி விட்டனர்.

இதுநாள் வரை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இந்த பயணத்தில் சேராமல் இருந்து வந்தார்.

அவரின் சமீபத்திய படங்களான பலே வெள்ளையத்தேவா, கிடாரி உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை.

எனவே அவரும் தன் பழைய ஹிட் படங்களின் 2ஆம் பாகத்தை எடுக்க தயாராகிவிட்டார்.

தற்போது நாடோடிகள் 2 என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் இவருடன் சமுத்திரக்கனி, அஞ்சலி, அதுல்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் சூட்டிங் தற்போது நடைபெற்று வரும் வேளையில் சுந்தர பாண்டியன் படத்தின் 2ஆம் பாகத்தையும் எடுக்க தயாராகிவிட்டார்.

இப்படத்தை முதல் பாக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவிருக்கிறார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

After Nadodigal 2 Sasikumar going to act in Sundarapandian 2

More Articles
Follows