சர்ச்சைக்குள்ளான லட்சுமி குறும்பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா

சர்ச்சைக்குள்ளான லட்சுமி குறும்பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lakshmi short film fame Sharjan directing Nayanthara for KJR Studiosலட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கியவர் சர்ஜன். இதில் லட்சுமி படம் பெண்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது.

தற்போது எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற படத்தை இயக்கி வருகிறார் சர்ஜன்.

இப்படங்களை தொடர்ந்து நயன்தாரா நடித்து வரும் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தை அறம் படத்தை தயாரித்த கே.ஜே.ஆர்., ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இது இந்நிறுவனம் தயாரிக்கும் 3வது படமாகும்.

கடந்த சில மாதங்களாக திரைக்கதை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் இப்போது அது முடிந்து படப்பிடிப்பும் நேற்று முதல் ஆரம்பமானது.

Lakshmi short film fame Sharjan directing Nayanthara for KJR Studios

டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு கோர்ட் எச்சரிக்கை

டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு கோர்ட் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala posterரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் கடந்த ஜீன் 7-ந்தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

இப்படம் வெற்றிக்கரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இப்படத்தின் ரிலீசின்போது டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இதனிடையில் காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர்.

8 தோட்டாக்கள் கூட்டணியின் அடுத்த படம் ஜிவி

8 தோட்டாக்கள் கூட்டணியின் அடுத்த படம் ஜிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jiiviகடந்த ஆண்டு சின்ன பட்ஜெட்டில் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்த படம் 8 தோட்டாக்கள்.

தற்போது இதே டீம் இணைந்து ஜிவி என்ற படத்தை உருவாக்குகிறது.

8 தோட்டாக்களை தயாரித்த பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் தயாரிக்கிறார். அதில் நடித்த வெற்றி இதிலும் ஹீரோவாக நடிக்கிறார்.

அஸ்வினி, மோனிகா என்ற இரு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் கருணாகரன், மைம்கோபி, ரோகினி, ரமா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பாபு தமிழ், கதை வசனம் எழுதுகிறார், வி.ஜே.கோபிநாத் இயக்குகிறார். பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார்.

இப்படம் பற்றி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:

விஞ்ஞானத்திற்கும், மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை.

சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது என்றார். இதன் படப்பிடிப்புகள் நேற்று துவங்கியது. இரண்டு கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

கமல்ஹாசனுடன் இணையும் தாடி பாலாஜி-பவர் ஸ்டார் சீனிவாசன்

கமல்ஹாசனுடன் இணையும் தாடி பாலாஜி-பவர் ஸ்டார் சீனிவாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா, அரசியல் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும், டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் கமல்ஹாசன்.

விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை ஜீன் 17ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இதன் முதல்பாகத்தை கமலே தொகுத்து வழங்கியிருந்தார். அதில் ஓவியா, நமீதா, ஸ்நேகன், பிந்து மாதவி, ஆரவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் ஆரவ் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தாடி பாலாஜி கலந்துக் கொள்ளவுள்ளாராம். மேலும் பவர் ஸ்டார் சீனிவாசனும் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

xZNMfVSf

ff3acc39b211cf8593a15a3cfd3e026b_400x400

விமல்-ஓவியா ஜோடிக்கு அலுங்குறேன் குலுங்குறேன் பாடலாசிரியரின் வரிகள்

விமல்-ஓவியா ஜோடிக்கு அலுங்குறேன் குலுங்குறேன் பாடலாசிரியரின் வரிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Alunguraen Kulunguraen fame lyricist Amudhavan wrote song in Kalavani 2களவாணி 2 படத்துக்கான எதிர்பார்ப்பு என்பது சரியான அளவில் பதிவாகி இருக்கிறது. இந்த களவாணியின் முதல் பாகம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது.

மிக முக்கியமாக அதே ஜோடி விமல், ஓவியா மீண்டும் இந்த பாகத்திலும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது.

சமீபத்தில் இந்த ஜோடி நடித்த ‘ஒட்டாரம் பண்ணாத’ என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது.

யூடியூபில் 2.5 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு, சாதனை புரிந்த “அலுங்குறேன் குலுங்குறேன்” பாடலை எழுதிய மணி அமுதவன் இந்த பாடலை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்த பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்க திட்டமிட்டனர்.

கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கியமான அம்சமாக இது இருக்கும்.

இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது.

எப்போதும் உத்வேகத்துடன் படத்தை முடிப்பதில் கவனத்தோடு இருக்கும் இயக்குனர் சற்குணம், மிக கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். அதன் பலன் தான் களவாணி 2 ரசிகர்களின் இதயங்களை கூடிய விரைவில் திருட இருக்கிறது.

ஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள்.

ஆயினும் நடிகர் சூரி இந்த படத்தில் நடிக்கவில்லை, ஆர்ஜே விக்னேஷ் நாயகன் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார்.

Alunguraen Kulunguraen fame lyricist Amudhavan wrote song in Kalavani 2

ரசிகர்கள்தான் என் டயலாக்கை பன்ச் டயலாக்காக மாற்றுகின்றனர்.. : விஜய் சேதுபதி

ரசிகர்கள்தான் என் டயலாக்கை பன்ச் டயலாக்காக மாற்றுகின்றனர்.. : விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiவிஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம்.ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி.சிவா, காரகட்ட பிரசாத், சி.வி.குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி, பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் டட்லீ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத் தொகுப்பாளர் சாபு ஜோசப், கலை இயக்குநர் மோகன், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், பாடலாசிரியர் லலிதானந்த், நடன இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி படத்தின் இசைத் தகட்டை வெளியிட, படக் குழுவினரும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

விழாவின் தொடக்கத்தில் ‘லோலிக்ரியா..’ எனத் தொடங்கும் பாடலுக்கு சிறுவர்களும், சிறுமிகளும் மேடையில் நடனமாடினர். பின்னர் படத்தின் டிரைலர் மற்றும் நான்கு பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன.

விழாவினை தொகுத்து வழங்கிய நடிகர் மா.கா.பா.ஆனந்த் மற்றும் நடிகை பிரியங்கா என இருவரும் படக் குழுவினரை மேடையில் ஏற்றி, ‘ஜுங்கா’வில் பணியாற்றிய அனுபவங்களை கேள்வியாக கேட்க, அதில் பணியாற்றியவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “ஜுங்கா’ என்றால் என்ன என்பதற்கு விளக்கவுரையாக படத்தில் ஒரு காட்சியை வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி விரிவாக சொல்ல முடியாது.

இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது. இந்த டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. ஆனால், சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில்தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் பிற விசயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் பஞ்ச் டயலாக் இருக்கா.. இல்லையா..? என்று என்னிடம் கேட்பதைவிட ரசிகர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஏனெனில் அதை ரசிகர்கள்தான் படத்திலிருந்து தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை வெறும் வசனமாக நினைத்துதான் பேசுகிறோம்.

படத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன் லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்த சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக் கூடிய திறமையை நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார் யோகி…” என்றார்.

More Articles
Follows