நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன்; ஹீரோ இவர் இல்லையாம்!

நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன்; ஹீரோ இவர் இல்லையாம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara and vignesh shivanதென்னிந்திய சினிமாவில் நெ. 1 நடிகையாக திகழ்கிறார் நயன்தாரா.

இவர் நடித்த ’அறம்’ படத்தை இவரது மேனேஜர் தயாரித்திருந்தார்.

தற்போது நயன்தாராவே தயாரிப்பாளராக மாறுகிறார்.

அதர்வாவை நாயகனாக வைத்து இதயம் முரளி என்ற படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

இப்படத்தை நயன்தாராவின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

சில மாதங்களுக்கு நயன்தாரா தயாரிப்பில் ஹீரோவாக விக்னேஷ் சிவன் நடிப்பார் என கூறப்பட்டது. அது வேறு ஒரு படமாக உருவாகலாம் எனத் தெரிகிறது.

ஜாய் கிரிஸில்டாவின் திருமண நிச்சயதார்த்த விழாவில் சிவகார்த்திகேயன்

ஜாய் கிரிஸில்டாவின் திருமண நிச்சயதார்த்த விழாவில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sk at joy crizildaa engeagement functionதிரைப்படத்துறையில் விஷால், ஜெயம் ரவி,அதர்வா, ஜி வி பிரகாஷ், நிக்கி கல்ராணி உள்ளிட்ட முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் ஜாய் கிரிஸில்டா.

இவருக்கும் தொழிலதிபர் ஃப்ரடெரிக் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் இந்த திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுஸில் கோலாகலமாக நடைபெற்றது.

இதன் போது நடிகர்கள் சிவகார்த்திகேயன், நக்குல், ‘கயல்’ சந்திரன், திருமதி அஞ்சனா சந்திரன், நடிகைகள் சுஜா வருணீ, அதுல்யா ரவி, இயக்குநர் அட்லீ, பிரியா அட்லீ, எடிட்டர் ரூபன், பின்னணி பாடகி சைந்தவி, வி ஜே ரம்யா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ராஜதந்திரம், ஜில்லா, கீ, உள்குத்து, கதாநாயகன், ரிச்சி, கணிதன், டார்லிங், வான் உள்ளிட்ட பல படங்களுக்கும் இவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

60 ஆண்டு கால சினிமா கொடுக்காததை கமலுக்கு கொடுத்த பிக்பாஸ்

60 ஆண்டு கால சினிமா கொடுக்காததை கமலுக்கு கொடுத்த பிக்பாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan started hosting of Bigg Boss Tamil Season 2கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் – 2 ரியாலிட்டி நிகழ்ச்சி விஜய்டிவியில் தொடங்கி விட்டது.

16 போட்டியாளர்கள் தங்கும் பிக் பாஸ் வீடு பல மாற்றங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்த கமல்ஹாசனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் வந்து இறங்கியதும், தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் காரணத்தை விளக்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் பொது மக்களிடையே கமல்ஹாசன் பேசியதாவது…

சென்ற முறை என்னை (கமல்ஹாசனை) நடிகராக தான் எல்லோருக்கும் தெரியும்.

ஏன் இந்த டிவி நிகழ்ச்சி என்று பலரும் கேட்கிறார்கள். சினிமாவில் பல கேரக்டர்களாக நான் நடித்திருந்தாலும் இங்கு நான் நானாகவே கமல்ஹாசனாகவே வருகிறேன்.

60 ஆண்டுகாலம் சினிமாவில் கிடைக்காதது, ரியாலிட்டி ஷோ மூலம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சினிமாவில் விக்ரமாகவோ, வேலு நாயக்கராவோ, விருமாண்டியாகவோ தெரியலாம்.

ஆனால் ரியாலிட்டி ஷோ மூலமே நான் நானாக வர முடியும். நாம் இணைந்து செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அதற்காகவும் இந்த ஷோவை பயன்படுத்துகிறேன்.

இதை சுயநலம் என்கிறார்கள், நான் பொதுநலம் என்கிறேன் என்றார்.” என்று பேசினார்.

அண்மையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

எனவே தற்போது அவர் ஒரு அரசியல்வாதி என்பதால் அவரின் பேச்சு அதிக கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kamalhassan started hosting of Bigg Boss Tamil Season 2

நந்தா-சானியா தாரா இணைந்துள்ள *புழுதி* விரைவில் ரிலீஸ்

நந்தா-சானியா தாரா இணைந்துள்ள *புழுதி* விரைவில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nandha and Sanyathara staring Puzhudhi movie release date updateகேரளாவைச் சேர்ந்த சானியா தாரா நலம்தானா என்ற படத்தின் மூலம் அறிமுகமானானர்.

இதனையடுத்து ஒருவர் மீது இருவர் சாய்ந்து, பனிவிழும் மலர்வனம், அது வேற இது வேற, ஜீவா, அங்காளி பங்காளி போன்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது அவர் புழுதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதில் நயாகனாக நந்தா நடித்துள்ளார். ஏ.ஏழுமலை இயக்கியுள்ளார்.

ராஜேஷ் இசையமைக்க, உமர் எழிலன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

செவன் ஹில்ஸ் சினிமா தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Nandha and Sanyathara staring Puzhudhi movie release date update

puzhudhi aka puzhuthi

8 வழிச்சாலை அமைத்தால் 8 பேரை கொல்வேன் என பேசிய மன்சூர்அலிகான் கைது

8 வழிச்சாலை அமைத்தால் 8 பேரை கொல்வேன் என பேசிய மன்சூர்அலிகான் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor Ali Khan Arrested For Threatening remarks on Salem Chennai Expresswayசேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு சென்றார்.

அங்கு பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…

நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன்.

கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி.

எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது.

மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன்.

எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்றார்.

சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக மன்சூர் அலிகான் மீது சேலம் தீவட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்த சேலம் போலீஸார், மன்சூர் அலிகானை அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

Mansoor Ali Khan Arrested For Threatening remarks on Salem-Chennai Expressway

தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியை நாடு; விஜய் ரசிகர்கள் போஸ்டர்

தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியை நாடு; விஜய் ரசிகர்கள் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy Vijay fans started celebration for his birth dayவருகிற ஜீன் 22-ந்தேதி நடிகர் விஜய் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனையொட்டி கடந்த 100 நாட்களாகவே ட்விட்டரில் அவரின் பிறந்தநாள் ஹேஷ் டேக்குகளை டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

மேலும் அவரின் பிறந்தநாள் அன்று பல உதவி திட்டங்களை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இவையில்லாமல் நிறைய தியேட்டர்களில் விஜய்யின் ஹிட்டான படங்கள் திரையிடப்பட உள்ளது.

இந்நிலையில் மதுரை ரசிகர்கள் விதவிதமான போஸ்டர்கள் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதில் சில போஸ்டர்களில்… “தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை மாற்றிடுவார்”, வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே… தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியை நாடு… என்ற வாசகங்கள் கொண்ட பல போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

Thalapathy Vijay fans started celebration for their heros birth day

vijay fans poster

More Articles
Follows