தளபதி ரூட்டுக்கு வா தல..; அழைக்கும் அஜித் ரசிகர்கள்

ajith sivaசிவா இயக்கிய வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களில் அஜித் நடித்தார்.

இதில் வேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே இயக்குனருடன் விவேகம் படத்திற்காக கைகோர்த்தார்.

தற்போது தன் அடுத்த பட வாய்ப்பையும் சிவாவுக்கே அஜித் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் விவேகம் படத்திற்கு நெகட்டிவ்வாக விமர்சனங்கள் கிடைத்திருந்தது.

எனவே மீண்டும் சிவா உடன் இணைய வேண்டாம் என அஜித் ரசிகர்கள் கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.

ஏஆர் முருகதாஸ் மற்றும் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

ஆனால் அவர்களது இயக்கத்தில் தொடர்ந்து நடிக்காமல் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்துவிட்டு பின்னர்தான் அவர்களின் இயக்கத்தில் நடிக்கிறார்.

அது ஒரு வித்தியாசமான உணர்வையும் எதிர்பார்ப்பையும் தரும்.

ஆனால் நீங்கள் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ஒரே மாதிரியான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறீர்கள்.

எனவே கொஞ்சம் ரூட்ட மாத்து தல என அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ரசிகர்கள் சொல்வதை கேட்பாரா தல? இல்லை எப்போதும் போல் என் படத்தை பிடித்திருந்தால் பாருங்கள் என்பாரா?

Overall Rating : Not available

Related News

அண்மைக்காலமாக அஜித் நடித்த வீரம், வேதாளம்,…
...Read More
விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை…
...Read More

Latest Post