ஆரம்பத்தில் நட்பு; ஆகஸ்டில் அஜித்துடன் மோதும் ராணா

ஆரம்பத்தில் நட்பு; ஆகஸ்டில் அஜித்துடன் மோதும் ராணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Rana daggubatiஇயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் நடித்த படம் ஆரம்பம்.

இப்படம் கடந்த 2013ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆனது.

இதில் அஜித்தின் நண்பராக நடித்திருந்தார் ராண

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி அஜித் நடித்துள்ள விவேகம் படம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

விவேகம் படம் வருவதால் நிறைய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தான் நடித்துள்ள நான் ஆணையிட்டால் படத்தை களத்தில் இறக்குகிறார் ராணா.

தேஜா இயக்கியுள் இப்படத்தில் காஜல் அகர்வால், கேத்ரீன் தெரசா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஒருநாள் தள்ளி ரிலீஸ் ஆகிறது.

இந்த இரு படங்களும் தமிழில் வெளியாகும் நேரத்தில் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith and Rana daggubati movie clash on August 2017

ஓவியாவை ஓரங்கட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிந்துமாதவி

ஓவியாவை ஓரங்கட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிந்துமாதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Bindhu Madhavi Bigg Bossகமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்ச்சி கடந்த 35 நாட்களாக விஜய் டிவில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சி தொடங்கும்போது 14 போட்டியாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றனர். ஆனால் நடிகை நமீதா 15வது போட்டியாளராக கலந்து கொண்டார்.

தற்போது ஆர்த்தி, பரணி, கஞ்சா கருப்பு, நமீதா உள்ளிட்ட 6 பேர்கள் வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில், நடிகை பிந்துமாதவி பல்லக்கில் வந்து இறங்கி, இதில் கலந்துக் கொண்டுள்ளார்.

அவர் பிக்பாஸ் வீட்டில் நுழையும்போது, தப்பு பன்னீட்டீங்களே என்று கூறினார் வையாபுரி.

ஆமா தப்பு பன்னீட்டனோ? எனக் கேட்டவாறே நுழைந்தார் பிந்துமாதவி.

இதை பார்த்து வரும் ரசிகர்களிடையே ஓவியாவிக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது.

அவரை ஓரங்கட்டவே பிந்துமாதவியை களம் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓவியாவைப் போன்றே பிந்து மாதவிக்கும் சமூக வலைத்தளங்களில் புரட்சிப்படை ஆரம்பிக்கப்பட்டு அதுவும் வைரலாகி வருகிறது.

அப்படியே விவசாயத்துக்கும் இதுபோன்ற புரட்சிப்படை ஆரம்பிக்கப்பட்டால் ரொம்ப புண்ணியமா போகும். செய்வீர்களா..?

Actress Bindhu Madhavi enters in Bigg Boss show after 35 days

அஜித் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய சென்சார்

அஜித் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivegam postersஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படம் தொடர்பான பேட்டிகளில் இது இண்டர்நேஷ்னல் படம் என இயக்குனர் சிவா கூறியதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இப்படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என கூறப்படும் நிலையில் இன்று சென்சாருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. (அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை)

காலை முதலே இச்செய்திக்காக காத்திருந்த அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

யு சான்றிதழ் கிடைக்கவேண்டுமென நினைத்தோம். அதன்படி கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

Ajiths Vivegam movie censored with U certificate

ரஜினியுடன் நடிக்கலாம்; ஆனால் அரசியல் செய்யமுடியாது… கமல்

ரஜினியுடன் நடிக்கலாம்; ஆனால் அரசியல் செய்யமுடியாது… கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth kamalhassanஅண்மைகாலமாக கமல்ஹாசனின் அறிக்கைகள் தமிழக அரசியலின் ஆழம் பார்த்துள்ளது எனலாம்.

எனவே, இதுபற்றிய கேள்விகளுக்கும், கமலுக்கு பதிலடி கொடுப்பதுமே தமிழக அமைச்சர்களின் வேளையாக போய்விட்டது.

இந்நிலையில் கமலின் சமீபத்திய பேட்டியில்… நீங்களும் ரஜினியும் சேர்ந்து அரசியல் களத்தில் இறங்கினால் பெரும் புரட்சி ஏற்படும் என்கிறார்களே? இணைந்து செயல்படுவீர்களா? எனக் கேட்டனர்.

“அவர்கள் சொல்வார்கள். இது நட்சத்திர தேர்தல் அல்ல. அவருடன் சேர்ந்து நடிப்பது வேறு. சேர்ந்து கட்சியை நடத்துவது வேறு.” என்றார்.

I can act with Rajini but cant do politics with him says Kamal

விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள்

விக்ரம் வேதா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rana_venkateshவிஜய்பேதுபதி மற்றும் மாதவன் நடித்து வெளியான படம் விக்ரம் வேதா.

இப்படத்தை ரஜினி முதல் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

புஷ்கர் – காயத்ரி இணைந்து இயக்கத்தில் இப்படம் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இதனை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாம்.

தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கடேஷ் மற்றும் ராணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Venkatesh Rana may act in Vikram Vedha Telugu remake

கூட்டத்தில் ஒருத்தன் போன்ற படங்களில் நடிக்க ஆசை.. ப்ரியா ஆனந்த்

கூட்டத்தில் ஒருத்தன் போன்ற படங்களில் நடிக்க ஆசை.. ப்ரியா ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kootathil Oruthan Priya Anand thanks letterவணக்கம் சென்னை, வைராஜா வை, எதிர் நீச்சல் புகழ் பிரியா ஆனந்த் அவர்கள் நடிப்பில் “Dream Warrior Pictures” தயாரிப்பில் தற்போது வெளிவந்து இருக்கும் “கூட்டத்தில் ஒருத்தன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் T.S ஞானவேல் மற்றும் நடிகர் அஷோக் செல்வன் உடன் பணியாற்றியதால் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றும், இதற்கு காரணமான பத்திரிகை இணையதள பண்பலை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இது போன்ற சமூக கருத்துக்களை மக்களுக்கு சொல்லும் படங்களில் நடிக்க தயாராக உள்ளேன் என பிரியா ஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

Kootathil Oruthan Priya Anand thanks letter

priya anand photos

More Articles
Follows