ரஜினியுடன் மோதலை தவிர்க்கும் அஜய் தேவ்கான்; விஜய் ரியாக்ஷன்.?

ரஜினியுடன் மோதலை தவிர்க்கும் அஜய் தேவ்கான்; விஜய் ரியாக்ஷன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajay devaganசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்தியளவில் பெரும் செல்வாக்கு உள்ளது.

எனவே இந்த கோலிவுட் ‘காந்த்’தின் படங்கள் வெளியாகும் நாளில், பாலிவுட் கான்கள் அவர்கள் படத்தை வெளியிட மாட்டார்கள்.

இந்நிலையில் அடுத்த வருடம் 2017 தீபாவளிக்கு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதே நாளில் வெளியாகவிருந்த பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கானின் ‘கோல்மால்4’ படத்தை வேறு ஒரு தேதிக்கு மாற்றியிருக்கிறார்களாம்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படமும் 2017 தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

அஜய் தேவ்கான் விலகிவிட்டார். விஜய் விலகுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்தில் அஜய்தேவ்கான் நடித்து இயக்கி தயாரித்த சிவாய படம் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

‘கபாலி’ நஷ்டம்; ரஜினியிடம் பணம் கேட்க சொன்ன தாணு.?

‘கபாலி’ நஷ்டம்; ரஜினியிடம் பணம் கேட்க சொன்ன தாணு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini producer thanuகே.எஸ். ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்தின் தோல்வியால் ரஜினி மற்றும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோருக்கு ஏற்பட்ட பிரிச்சினை நாம் அறிந்ததே.

இந்நிலையில் இவ்வருடம் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் என கூறப்படும் கபாலியும் சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் ரூ 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் தாணுவிடம் முறையிட்டுள்ளனர்.

படத்தை வாங்கி வெளியிட்ட ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திடம் இருந்து, தனக்கு பணம் வரவுள்ளதால், அது கிடைத்த உடன் தெரிவிக்கிறேன் என்று கூறினாராம் தாணு.

ஆனால் அதற்குள், நஷ்டம் ஏற்பட்டால் எப்போதும் ரஜினியிடம் கேட்கும் நீங்கள் இப்போது என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.?

ரஜினியிடம் சென்று நஷ்டஈட்டை கேளுங்கள் என தாணு தெரிவித்து விட்டதாக செய்திகள் வெளியாகிவிட்டது.

கபாலீஸ்வரா… இனி இது தொடர்பாக என்னென்ன வதந்திகள் உலா வரப்போகிறதோ.?

நடிகர் சங்கத்திலிருந்து சரத்-ராதாரவி நீக்கம்; ராதிகாவிடம் ரஜினி பேச்சு

நடிகர் சங்கத்திலிருந்து சரத்-ராதாரவி நீக்கம்; ராதிகாவிடம் ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini radhika sarathkumar radharaviகடந்த ஞாயிறன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார, ராதாரவி ஆகியோர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

இதனால் நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளை பற்றி விமர்சித்தார் ராதிகா.

எங்களை நீக்க அவர்களால் முடியாது.

புதிய நிர்வாகிகள் பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என விஷால், கார்த்தி மீது சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சரத்குமார் மற்றும் ராதாரவி நீக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் தன்னிடம் வருத்தம் தெரிவித்தாக ராதிகா தெரிவித்துள்ளார்.

டாப் ஹீரோ-வில்லன்களின் புகழ் பாடும் ஜெயம் ரவி-இமான்-அனிருத்

டாப் ஹீரோ-வில்லன்களின் புகழ் பாடும் ஜெயம் ரவி-இமான்-அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bogan movieலட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள படம் போகன்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.

டமாலு டமாலு… டூமிலு டூமிலு என்று தொடங்கும் இப்பாடலை ரோகேஷ் எழுதியுள்ளார்.

இப்பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவை சற்றுமுன் இணையத்தில் வெளியிட்டனர்.

இதில் தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோ மற்றும் வில்லன்களின் புகழ்பெற்ற டயலாக்குகளை இணைத்து பாடியிருக்கிறார் அனிருத்.

எம்.ஜிஆர். நம்பியார் முதல் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்களின் பிரபல வசனங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.

அந்த பாடலின் வீடியோ இதோ…

 

 

இளையதளபதி உடன் இணைந்து வரும் சந்தானம்

இளையதளபதி உடன் இணைந்து வரும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay santhanamவிஜய்யுடன் சில படங்களில் இணைந்து நடித்தவர் சந்தானம்.

தற்போது சந்தானம் ஹீரோவாகி விட்டதால், காமெடி மட்டும் செய்யும் வேடங்களை தவிர்த்து வருகிறார்.

இனி விஜய்யுடன் இணைவாரா? சந்தானம் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் விஜய் படத்தில் இணையாமல் இருந்தாலும், விஜய் படம் ரிலீஸ் ஆகும் நாளில் தன் படத்தை வெளியிட இருக்கிறார் சந்தானம்.

அடுத்த ஆண்டு 2017ல் பொங்கல் தினத்தில் விஜய்யின் பைரவா வெளியாகவுள்ளது.

இதே நாளில் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படமும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வைபவி ஷிந்திலியா, நாகேஷின் பேரன் நாகேஷ் பிஜேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதே நாளில் விஷாலின் கத்தி சண்டை படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மத்தவங்க நடிப்பாங்க… நீங்க அப்படியில்லையே தனுஷ்’ – கேவி. ஆனந்த்

‘மத்தவங்க நடிப்பாங்க… நீங்க அப்படியில்லையே தனுஷ்’ – கேவி. ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush kv anandகே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கவண்.

இப்படத்தின் சூட்டிங்கின் போது, நாயகி மடோனாவின் நடிப்பை பார்த்து வியந்தேன் என தெரிவித்திருந்தார் கே.வி. ஆனந்த்.

பெரும்பாலும் நான் யாரையும் பாராட்டுவது இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு தனுஷ் தன்னுடைய கமெண்டில், உங்கள் படத்தில் நடிக்கும்போது நானும் அதை உணர்ந்தேன் என குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு பதிலளித்து கேவி ஆனந்த் கூறியதாவது…

“மத்த நடிகர்கள் நடிப்பாங்க. எனவே பாராட்டை எதிர்பார்ப்பாங்க.

ஆனால் நீங்க அந்த கேரக்டராக வாழ்வீர்கள். எனவே, வாயடைத்து நிற்பேன்” என தெரிவித்துள்ளார்.

கேவி. ஆனந்த் இயக்கிய ‘அனேகன்’ படத்தில் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

anand k v ‏@anavenkat
@dhanushkraja Others act in films…need compliments to enhance their act. But you LIVED it…made me speechless

More Articles
Follows