தனுஷுக்கு ஜோடியாக நடிப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்

தனுஷுக்கு ஜோடியாக நடிப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Aishwarya Rajeshதனுஷ் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகிவரும் படம் வடசென்னை.

வெற்றி மாறன் இயக்கி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திலிருந்து அமலாபால் விலகியதையடுத்து, ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

தனுஷ் உடன் ஜோடியாக நடிப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளதாவது…

நான் நினைத்தே பார்க்காத வாய்ப்பு வடசென்னை படத்தில் கிடைத்துள்ளது.

இப்பட வாயப்பு கிடைக்க காக்கா முட்டை படம்தான் காரணம்.

அந்த படம் மூலம் சிறந்த நல்ல நடிகை என்ற பெயரை பெற்ற நான், தற்போதுதான் தனுஷ் போன்ற முன்னணி நடிகருக்கு ஜோடியாக சேரும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.” என்றார்.

Aishwarya Rajesh reaction to romance with Dhanush in Vada Chennai

விவேகம் டீசரில் அஜித் பன்ச் டயலாக்… ஸ்பெஷல் தகவல்கள்

விவேகம் டீசரில் அஜித் பன்ச் டயலாக்… ஸ்பெஷல் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivegamசிவா இயக்கி வரும் விவேகம் படத்தின் டீசர் அஜித் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது.

இதனை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த டீசர் குறித்த தகவல்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளன.

இந்த டீசர் மொத்தம் 56 நொடிகள் ஓடக்கூடியதாம்.

இதற்கு முன்பு வெளியான வேதாளம் டீசரில் அஜித் மட்டுமே இடம் பெற்றிருந்தார்.

அதுபோல், இதிலும் அஜித் மட்டுமே இடம் பெறுவார் என்றும் அதில் நாயகிகள் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் இருக்கமாட்டார்கள் என தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த டிசரின் முதல் 30 நொடிகள் தெறிக்க விடும் அனிருத்தின் தீம் மியூசிக் மற்றும் அதன் பின்னர் 16 நொடிகளுக்கு பின்னணி இசையுடன் அஜித்தின் பன்ச் டயலாக் இடம் பெற்றுள்ளதாம்.

இறுதியான 10 நொடிகளுக்கு டைட்டில் கார்டு மற்றும் டெக்னீஷியன்கள் பெயர்கள் இடம் பெறும் என தெரிய வந்துள்ளது.

Ajith movie Vivegam teaser hot updates

சிவகார்த்திகேயனின் ஆசையை நிறைவேற்றிய நயன்தாரா

சிவகார்த்திகேயனின் ஆசையை நிறைவேற்றிய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velaikkaranமோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்நேகா, பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக்கை வருகிற மே1 ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இப்படத்தின் சூட்டிங் போது, தன்னுடைய கனவு நிறைவேறியுள்ளதாக நயன்தாராவிடம் சொன்னாராம் சிவகார்த்திகேயன்.

அதாவது சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பின்னர், நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.

தற்போது அந்த ஆசை நிறைவேறிவிட்டதாக ஓபனாகவே கூறியுள்ளார் வேலைக்காரன்.

தனுஷ் படத்தில் அமலாபாலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ்

தனுஷ் படத்தில் அமலாபாலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vada chennaiவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்து வரும் படம் வடசென்னை.

இப்படம் உருவாகும்போதே 3 பாகங்களாக உருவாகவுள்ளதை பார்த்தோம்.

சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அமலாபால் இதில் இருந்து விலகிவிட்டாராம்.

கால்ஷீட் பிரச்சினையால் அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த கேரக்டரில் நடிக்கிறாராம்.

மகள் ஸ்ருதியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் கமல்

மகள் ஸ்ருதியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal shruthiசபாஷ் நாயுடு படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கு சமயத்தில் கமலுக்கு சிறு விபத்து ஏற்பட்டது.

அதனையடுத்து சில மாதங்கள் ஓய்வில் இருந்தார்.

இதனால் சபாஷ் நாயுடு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது கமல், தயாராக இருக்கும்போது மற்ற கலைஞர்களின் கால்ஷீட்டுக்கள் கிடைக்காமல் இருக்கிறது.

அதிலும் முக்கியமாக இவரது மகள் ஸ்ருதிஹாசனின் கால்ஷீட் கமலுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

அவரின் கால்ஷீட் கிடைத்தவுடன் சூட்டிங்கை தொடங்கி ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் சூட்டிங்கை நிறைவு செய்யவிருக்கிறாராம் இந்த அப்பா.

Kamalhassan waiting for Shruthis Call sheet

‘8 தோட்டாக்கள்’ எம்எஸ் பாஸ்கரை ரஜினி எப்படி பாராட்டினார்.?

‘8 தோட்டாக்கள்’ எம்எஸ் பாஸ்கரை ரஜினி எப்படி பாராட்டினார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

8-Thottakkalஸ்ரீகணேஷ் இயக்கத்தில் எம். எஸ். பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘8 தோட்டாக்கள்’.

இவருடன் நாசர், வெற்றி, அபர்ணா பாலமுரளி, ஆகியோரும் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

எனவே, படத்தின் இயக்குனருக்கு எம்எஸ் பாஸ்கர் தங்க செயின் பரிசளித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தை ரஜினிகாந்தும் பார்த்து தன் பாராட்டுக்களை இருவருக்கும் தெரிவித்துள்ளார்.

“பாஸ்கர்.. என்ன ஒரு நடிப்பு. பிச்சுட்டீங்க பாஸ்கர். உங்க நடிப்பு எப்பவுமே சூப்பர். இதில் ரொம்ப பிரமாதம்.

இதனையடுத்து இயக்குநர் ஸ்ரீகணேஷுக்கும் பாராட்டை தெரிவித்துள்ளார்.

நிறைய பேர் பாராட்டிய உடன் படத்தை பார்க்க தோன்றியது. எல்லாம் பாராட்டுக்கும் தகுதியான படம் இது.

நிறைய நல்ல படங்களை இயக்கி, வெற்றி பெற வாழ்த்துகள்” என்றாராம் சூப்பர் ஸ்டார்.

Rajinikanth Praises 8 Thottakkal MS Bhaskar and Director SriGanesh

More Articles
Follows