வந்தார்… அஞ்சலி செலுத்தினார்… பல்கேரியா பறந்தார் அஜித்

வந்தார்… அஞ்சலி செலுத்தினார்… பல்கேரியா பறந்தார் அஜித்

ajith at chennai airportஜெயலலிதாவுக்கு இறுதியஞ்சலி செலுத்துவதற்காக பல்கேரியா நாட்டில் இருந்து படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை வந்தார் அஜித்.

கிட்டதட்ட 16 மணி நேர பயணம் செய்து வந்து இறங்கியதும், அம்மா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று மூத்த பத்திரிகையாளர் சோ அவர்களுக்கும் நேரில் அஞ்சலி செலுத்தினார்

இந்நிலையில் நேற்று மீண்டும் சென்னையிலிருந்து பல்கேரியா பறந்தார் அஜித்.

சென்னை டூ பல்கேரியா சென்று வர மொத்தம் 12,500 கிமீ தூரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Again ajith fly to bulgaria for ak 57 shooting

த்ரிஷாவுடன் டூயட் பாடும் ‘பிரேமம்’ நிவின்பாலி

த்ரிஷாவுடன் டூயட் பாடும் ‘பிரேமம்’ நிவின்பாலி

trisha nivin paulyத்ரிஷா நடிக்கவந்து கிட்டதட்ட 14 ஆண்டுகளை கடந்துவிட்டார்.

இன்றும் அதே இளமையுடன் முன்னணி நாயகர்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என த்ரிஷா நடித்து வந்தாலும், இதுவரை நேரடி மலையாளப் படங்களில் நடிக்கவில்லை.

தற்போது முதன்முறையாக மலையாள சினிமாவில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இதில் பிரேமம் புகழ் ஹீரோ நிவின் பாலியுடன் டுடூயட் பாடுகிறார்.

ஷியாம்பிரசாத் இயக்கவுள்ள இந்த படம் விரைவில் தொடங்க உள்ளது.

இது த்ரிஷாவின் 60வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுக்காக சிவகார்த்திகேயன்-ஆர்யா செய்த காரியம்

ஜெயலலிதாவுக்காக சிவகார்த்திகேயன்-ஆர்யா செய்த காரியம்

arya sivakarthikeyanகடந்த டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது.

அடுத்த நாள் சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அம்மாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரின் பிரிவை தாங்க முடியாத மக்கள் இன்னும் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அம்மா புகைப்படத்தை வைத்துள்ளனர்.

இவர்களைப்போல் த்ரிஷா, பிரேம்ஜி அமரன். சாந்தனு பாக்யராஜ் மற்றும் வெங்கட்பிரபு உள்ளிட்டோரும் அம்மா படத்தை வைத்துள்ளனர்.

விஜய்-சூர்யாவை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் சிம்பு

விஜய்-சூர்யாவை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் சிம்பு

rajini vijay suriya simbuஐட்யூன்ஸ் இண்டியா என்ற மியூசிக் நிறுவனம் இந்தாண்டில் வெளியான தமிழ் படங்களின் பாடல்களில் எது முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதை தெரிவித்துள்ளது.

இதில் இருமுகன் மற்றும் ரெமோ பாடல்கள் ஐந்து, ஆறு இடங்களில் உள்ளது.

நான்காவது இடத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த விஜய்யின் தெறி பாடல்கள் உள்ளது.

3வது இடத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் சூர்யா நடித்த 24 படப்பாடல்கள் உள்ளன.

இரண்டாவது இடத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் சிம்பு அச்சம் என்பது மடமையடா பாடல்கள் உள்ளது.

முதல் இடத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் ரஜினி நடித்த கபாலி படப்பாடல்கள் உள்ளது.

(Info via @blogeswari )

ரஜினி-அஜித் இடத்தை கைப்பற்றிய அர்விந்த்சாமி

ரஜினி-அஜித் இடத்தை கைப்பற்றிய அர்விந்த்சாமி

arvind swamyவிஜய் நடித்த ‘ப்ரண்ட்ஸ்’, ‘காவலன்’ ஆகிய படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் சித்திக்.

இவர் இயக்கத்தில் மம்மூட்டி-நயன்தாரா நடித்து வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதன் தமிழ் ரீமேக்கில் ரஜினி அல்லது அஜித் நடிக்க வேண்டும் என சித்திக் விரும்பினார்.

ஆனால் தற்போது அதில் அர்விந்த் சாமி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவையில்லாமல் தனது அடுத்தடுத்த படங்களை உறுதி செய்து வருகிறார் அர்விந்த்சாமி.

தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் அதே வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.

துருவா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் நாளை மறுநாள் (டிச. 9) அன்று ரிலீஸ் ஆகிறது.

இவையில்லாமல் போகன், சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களும் உள்ளன.

மேலும் இயக்குனர் செல்வா இயக்கவுள்ள ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறாராம் அர்விந்த் சாமி.

சுசீந்திரன்-சமுத்திரக்கனி படங்களில் விக்ராந்த்

சுசீந்திரன்-சமுத்திரக்கனி படங்களில் விக்ராந்த்

Vikranth in suseendran and Samuthirakani moviesஹீரோவாக நடித்து வந்த விக்ராந்த் கெத்து படத்தில் வில்லனாக நடித்தார்.

அதன்பின்னரும் அவருக்கு சரியாக வாய்ப்புகள் வரவில்லை.

தற்போது டிஆர் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘கவண்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, சுசீந்திரன் இயக்கவுள்ள ‘வெண்ணிலா கபடி குழு படத்தின்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

மேலும் சமுத்திரக்கனி இயக்கவுள்ள தொண்டன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

ஆம்புலன்ஸ் ஆப்ரேட்டர்களை பற்றிய கதை இது.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.

Vikranth in suseendran and Samuthirakani movies

More Articles
Follows