தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரைப்படத் துறையில் கமல்ஹாசனின் சேவையைப் பாராட்டி, பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் செவாலியே விருதை அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 1997ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இந்த விருதை பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து பெற்றார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை 3 முறை பெற்றுள்ளவர் கமல்ஹாசன்.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் கமல்.
இவை மட்டுமில்லாமல் சினிமாவின் அனைத்து துறைகளிலும் கமல் தன் முத்திரையை பதித்து வருகிறார்.
இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் கமல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.