தனுஷ்-விஜய்சேதுபதியுடன் மோதல்.; *அடங்கமறு*க்கும் ஜெயம் ரவி

Adangamaru movie clash with Maari2 and Seethakathi on Christmas eveகார்த்திக் தங்வேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அடங்க மறு’.

ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார்.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தணிக்கை குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் முன்னதாக டிசம்பர் 21-ஆம் தேதியே ரிலீஸாகவுள்ளது.

அடங்கமறு ரிலீசாகும் அதே வாரத்தில் தனுஷின் மாரி 2, விஜய்சேதுபதியின் சீதக்காதி, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Adangamaru movie clash with Maari2 and Seethakathi on Christmas eve

Overall Rating : Not available

Latest Post