கதையை விட கார்த்திக்கை நம்பினேன்.. அடங்க மறு வெற்றி விழாவில் ஜெயம் ரவி பேச்சு

கதையை விட கார்த்திக்கை நம்பினேன்.. அடங்க மறு வெற்றி விழாவில் ஜெயம் ரவி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam raviஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடங்க மறு’.

ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்த படம் பல போட்டிகளையும் தாண்டி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ரவி இந்த அளவு மகிழ்ச்சியாக இருந்து நானும், அப்பாவும் பார்த்ததில்லை என்றார்.

அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம் என்பதும் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். அடங்க மறுவுடன் வெளியான மற்ற படங்களும் வெற்றி பெறனும் என எந்த பொறாமையும் இல்லாமல் இருந்த இந்த குழுவினரின் மனசு தான் இந்த பெரிய வெற்றிக்கு காரணம் என்றார் வசனகர்த்தா விஜி.

இந்த படத்தில் பேசப்பட்ட விஷயங்கள் மிக ஆழமானவை, மிக முக்கியமானவை. நாட்டில் இன்று பேச வேண்டிய மிக முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறது, அது மக்களை மிகச்சிறப்பாக சென்றடைந்திருக்கிறது என்றார் நடிகர் அழகம் பெருமாள்.

நான் எந்த படத்துக்கும் இதுவரை தியேட்டர் விசிட் போனதில்லை. இந்த படத்துக்கு இயக்குனரும், ஹீரோவும் அழைத்ததால் நானும் விசிட் போயிருந்தேன்.

மதுரையில் மிகப்பெரிய கூட்டத்தில் போலீஸிடம் அடி வாங்கினேன். ஒரு படத்தின் உண்மையான வெற்றி எங்கு தெரியும் என்றால் தியேட்டரில் தான் தெரியும். அதை நான் என் கண்ணாலேயே பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.

இந்த கதையை இயக்குனர் கார்த்திக் 7 வருஷம் முன்பே என்னிடம் சொன்னார். அப்போது சொன்ன கதையை இந்த காலத்துக்கும் ஏற்றவாறு கொடுப்பது ஒரு கலை.

அதை சிறப்பாக செய்திருந்தார் கார்த்திக். ஒரு நல்ல படம் நல்ல நோக்கத்தோடு வந்தால் அதை எல்லோரும் கொண்டாடுவார்கள் என்பது இந்த படத்தின் மூலம் மீண்டும் உறுதியாகி இருக்கிறது என்றார் படத்தொகுப்பாளர் ரூபன்.

முதல் படத்திலேயே என்னை வெற்றிப்பட தயாரிப்பாளராக மாற்றிய ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இது அடுத்தடுத்து சிறந்த படங்களை கொடுக்க எங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்திருக்கிறது. அடுத்த படத்தின் கதை இந்த படத்தை விட 10 மடங்கு மிகப்பெரிய படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.

இந்த படம் ஒரு குழு முயற்சி. இந்த கதை மீது என்னை விட அதிக நம்பிக்கை வைத்தது சுஜாதா மேடம் தான். ஜெயம் ரவி எனக்கு இப்போதும் ஒரு நல்ல குருவாக இருக்கிறார்.

என்னை வழிநடத்துகிறார். என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவார். அடுத்து ஒரு பெரிய படத்தை திட்டமிட்டு வருகிறோம், அதை சரியான நேரத்தில் அறிவிப்போம். என்னை விட அதிகம் உழைத்தது உதவி இயக்குனர்களாக இருந்த என் நண்பர்கள் தான். தியேட்டர் விசிட் போனபோது நிறைய பெண்கள் மிகவும் படத்தோடு ஒன்றி பேசினார்கள், இது தான் படத்தின் உண்மையான வெற்றி என்றார் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்.

தனி ஒருவன் வெற்றி பெற்றபோது பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டானது.

அடங்க மறு படத்தின் விமர்சனங்களை படித்த போது அது இன்னும் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. கதை என்ன இருந்தாலும் அதை கொடுக்கும் விதம் மிக முக்கியம்.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான அனைத்து பாராட்டுக்களும் கார்த்திக்கை தான் சாரும். இந்த படத்தின் வெற்றி மூலம் கார்த்திக் மற்றும் சுஜாதா அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ் சினிமாவில் வரவேற்கிறோம்.

நான் கதையை நம்பியதை விட கார்த்திக்கை நம்பினேன். எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கி விடுவார். இந்த மொத்த குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் நாயகன் ஜெயம் ரவி.

இந்த சந்திப்பில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, முண்டாசுப்பட்டி ராமதாஸ், கலை இயக்குனர் இளையராஜா, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய், ஆடை வடிவமைப்பாளர் கவிதா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

எஸ்.ஜானகி பாடிய ஒன் உசிரு காத்துல.. ; நெகிழும் பண்ணாடி படக்குழு

எஸ்.ஜானகி பாடிய ஒன் உசிரு காத்துல.. ; நெகிழும் பண்ணாடி படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

s janakiஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் வழங்கும் ரமேஸ்பிரியாகணேசன், ரேவதிபழநிவேலன் தயாரிப்பில் “பண்ணாடி” என்கிற படம் உருவாகிறது.

மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாக உள்ள “பண்ணாடி” படத்தின் இரண்டு பாடல்கள் எஸ்.ஜானகி அம்மா பாடியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் க.ரமேஸ்பிரியாகணேசன் இது பற்றிக் கூறும்போது,

அந்தப் பாடல் இப்போது லிரிகல் வீடியோவாக வெளியாகி ஹிட் களை அள்ளி வருகிறது.

அப்பாடல் “ஒன் உசிரு காத்துல காத்தாடியா பறக்குறேன். ஒன் முகத்த முகத்த வியந்து பார்க்குறேன்.

என் உசுர உனக்கு எழுதிக் கொடுக்குறேன்” என்று நாயகன் பாட நாயகியோ” நீ பேசும் பேச்சுல புதுசா நான் பொறக்குறேன், என் மனசு முழுக்க ஒன்னை நெனக்கிறேன் ,அந்த நெனப்பில் ஒறஞ்சி உறங்க மறுக்கிறேன்” என்று பாடுகிறாள்.

இதில் ஆண் குரலுக்கு இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் பாட பெண்குரலுக்கு எஸ்.ஜானகி பாடியுள்ளார். இப்பாடலை இயக்குநர் டி.ஆர்.பழனிவேலன் எழுதியுள்ளார்.

“இந்தப்படம் முழுக்க முழுக்க கிராமப்புற மக்கள் அவர்களது வாழ்வியலை அடிப்படைவாகக் கொண்டது.

நேர்மை ,உண்மை, பாசம், காதல், பண்பு கலாச்சாரம் ,விவசாயம், இவை அனைத்தும்”பண்ணாடி” குடும்பத்தில் வாழ்ந்த முன்னோடிகளின் வாழ்வியல்தான் கதை.

இப்போதைய சூழலில் அக்குடும்பத்தில் வந்த நாயகன் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் எவ்வாறு நம் கலாச்சாரத்திற்கு ஏற்ப எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.

இந்த படத்தின் சிறப்பம்சமே எஸ்.ஜானகி அம்மா பாடல் தான் ஜானகி அம்மாவை சந்திக்க வாய்ப்பு சேகர் மூலமாக கிடைத்தது. இரண்டு பாடல்களும் மிக அற்புதமாக வந்துள்ளன.

“பண்ணாடி” படத்தில் ரிஷி ரித்விக், சுப்ரஜா, வேல ராமமூர்த்தி, ஆர் வி உதயகுமார். மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க உள்ளனர்.

இப்படத்தை நானும் டைரக்டர் டி.ஆர்.பழநிவேலன் இருவரும் இணைந்து தயாரிக்கிறோம். படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிட உள்ளோம்.” என்கிறார்.

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி டி.ஆர். பழனிவேலன் இயக்கி வருகிறார். பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார்.

படத்தொகுப்பு – ஜான் ஆப்ரகாம்

சண்டைப்பயிற்சி – KNIFE நரேன்

தயாரிப்பு – க. ரமேஸ்பிரியாகணேசன், ரேவதி பழநிவேலன்.

கடவுள் வந்தால் என்ன நடக்கும்..? கடவுள்2 படத்தில் காட்டும் வேலு பிரபாகரன்

கடவுள் வந்தால் என்ன நடக்கும்..? கடவுள்2 படத்தில் காட்டும் வேலு பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velu prabakaranதமிழ் சினிமாவில் சர்ச்சையான இயக்குனர்களில் ஒருவர் வேலு பிரபாகரன்.

இவர் ‘நாளைய மனிதன்’, ‘அதிசய மனிதன்’, ‘ராஜாளி’, ‘கடவுள்’ போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

அதே சமயம், நடிகையின் டைரி என்ற பெயரில் கவர்ச்சியான படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது ‘கடவுள் 2’ பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார் வேலு பிரபாகரன்.

இப்படம் பற்றி அவர் கூறுகையில்…

‘‘சிவன், விஷ்ணு கடவுள்கள் பல்வேறு அவதாரங்கள் எடுத்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

புத்தர், ஏசு, நபிகள் நாயகம் இறைவன் அவதாரங்களாக பார்க்கப்படுகின்றனர்.

அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப எடுக்கப்பட்ட கடவுள் அவதாரங்கள் மூலமாக அன்பு, ஒழுக்கம் போன்ற வாழ்வின் நெறிமுறைகள் போதிக்கப்பட்டன.

தற்போதுள்ள காலகட்டத்தில் இறைவன் மீண்டும் ஒரு அவதாரம் எடுத்தால் என்ன அவதாரமாக இருப்பார் என்று தோன்றியது.

அது ஒரு திரைப்பட இயக்குனரின் அவதாரமாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதே இப்படத்தின் கதை கரு.

இதில் முக்கிய கேரக்டர்களில் சத்யராஜ், சீமான் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் – சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்

ஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் – சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anbarivகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிக்கரமாக ஒடிக்கொண்டிருக்கும் ‘கே ஜி எஃப் ’என்ற படத்தில் இவர்களது உழைப்பை பாராட்டதவர்களேயில்லை. இந்த படத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கும் இவர்களை அண்மையில் சந்தித்து உரையாடினோம்.

கே ஜி எஃப் வெற்றியில் உங்களின் பங்களிப்பு குறித்து…?

முதலில் அனைவருக்கும் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொருவரும் தங்களின் கனவுகளையும், இலட்சியங்களையும் அடைய எங்களின் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.

கே ஜி எஃப் படத்தின் கதையை இயக்குநர் எங்களிடம் விவரித்த போது, வித்தியாசமான கதை களம் என்ற ஒரு விசயம் எங்களை கவர்ந்தது. அதன் பிறகு தயாரிப்பாளர், ஹீரோ யஷ் சார், இயக்குநர் பிரசாந்த் நீல், கேமராமேன் புவன் என அனைவரும் அளித்த ஒத்துழைப்பால் தான் இந்த வெற்றியை எட்ட முடிந்தது. இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக கிட்டத்தட்ட முப்பத்தைந்து நாள் முதல் நாற்பது நாள் வரை படபிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஒட்டுமொத்த படக்குழுவினரும் உற்சாகம் அளித்துக் கொண்டேயிருந்தனர்.

திரைக்கதையில் ஆக்சன் காட்சிகள் வரும் போது இயக்குநர் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் எங்களின் பொறுப்பு மேலும் கூடியது. அதற்கேற்ற வகையில் நன்றாக திட்டமிட்டு, பணியாற்றினோம். ஒரு ஆக்சன் காட்சியை படமாக்கும் போது முதலில் நடிகர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொண்டோம். பிறகு கேமரா கோணங்களையும், அதற்கு தேவையான விசயங்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றினோம். அதனால் தான் எங்களால் திட்டமிட்ட நாள்களுக்குள் அதாவது முப்பத்தைந்து நாள்களுக்குள் ஆக்சன் காட்சிகளை படமாக்க முடிந்தது.

இந்த கதை பீரியட் ஃபிலிம் என்பதால் ஆக்சன் காட்சிகளுக்காக ஏதேனும் ரெஃபரென்ஸ் எடுத்தீர்களா?

இல்லை. முழுக்க முழுக்க எங்களுடைய இமேஜினேசன் தான். கதை நிகழும் காலகட்டத்தையொட்டிய பல படங்களின் ஆக்சன் காட்சிகள் Rawவாகத்தான் இருந்தது. அதனை தற்போது காட்சிப்படுத்த இயலாது. அதனால் இயக்குநர் கொடுத்த சுதந்திரத்தையும், நாங்கள் இருவரும் எங்களுக்குள் விவாதித்தும், திரைக்கதையின் தேவையை மனதில் வைத்துத் தான் ஆக்சன் காட்சிகளை உருவாக்கினோம். அதே போல் ஆக்சன் காட்சிகள் Mass ஆக இருக்கவேண்டும் என்று இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதிலும் தென்னிந்திய ரசிகர்களின் விருப்பதையும் மனதில் வைத்து தான் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்தோம்.

பொதுவாக ஆக்சன் காட்சிகளில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருக்குமே.. இந்த படத்தில் எப்படி?

இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் குறைவு. கேமராமேனின் அயராத உழைப்பால் தான் இதனை சாத்தியப்படுத்த முடிந்தது. இந்த விசயத்தில் ஹீரோ யஷ்ஷின் ஈடுபாடு அபாரம். தான் ஒரு ஹீரோ என்பதையே மறந்து, எங்களிடம் ஆக்சன் காட்சியில் எப்படி இருக்கவேண்டும்? என்ன செய்யவேண்டும்? என்பதை கேட்டு கேட்டு நடிப்பார். 90 சதவீதத்திற்கும் மேல் அவரே தான் ஆக்சன் காட்சிகளில் நடித்தார்.

இந்த படத்தில் சவாலாக அமைந்த ஆக்சன் சீன்..?

சுரங்கத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சியில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் . முதலில் இவர்கள் அந்த இடத்தைப் பற்றிய பயத்தை போக்கினோம். அத்துடன் அவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த விசயத்தில் முழு அக்கறை எடுத்துக் கொண்டோம். இதற்கும் தயாரிப்பாளருக்கு தான் நன்றி சொல்லவேண்டும். அதே போல் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட ஆக்சன் சீனில் போதிய வெளிச்சம் இல்லை என்றாலும் ஒளிப்பதிவாளர் மிகவும் சிரமத்திற்கு இடையே குறைவாக லைட்டிங் செய்து அதனை பிரமிப்பாக திரையில் காண்பித்தார்.

அடுத்து என்ன படங்களில் பணியாற்றுகிறீர்கள்?

கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பணியாற்றுகிறேன். மாநகரம் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் பணியாற்றுகிறேன். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்திலும் வேலை செய்யவிருக்கிறேன்.

தொடர்ந்து சண்டை பயிற்சி இயக்குநர்களாகவே இருக்கவிருக்கிறீர்களா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் உள்ளதா?

சென்னையில் ஆக்சன் அகாடமி ஒன்றை தொடங்கவிருக்கிறோம். அதாவது ஆக்சனுக்கான ஸ்டூடியோ அது. இங்கு வந்து ஆக்சனுக்காக உருவாக்கிய சண்டை காட்சிகளை ஒத்திகை பார்க்கலாம். இதன் மூலம் படபிடிப்பின் போது ஏற்படும் காலவிரயம் தவிர்க்கப்படும். முன்கூட்டியே திட்டமிட்டு சண்டை காட்சிகளை அமைப்பதால், அதனை புதுமையாகவும் செயல்படுத்துவதற்கு உதவும்.

இங்கு ஒத்திகை மட்டுமில்லாமல் ஆக்சன் காட்சியில் எப்படி நடிக்கலாம். அதற்கான தொழில்நுட்பத்தையும் கற்பிக்கவிருக்கிறோம். அத்துடன் பாதுகாப்பாக சண்டை காட்சிகளில் நடிப்பது எப்படி என்பதையும் சொல்லிக் கொடுக்கவிருக்கிறோம். சண்டை கலைஞர்கள், சண்டை பயிற்சி இயக்குநர்கள், நடிகர்கள், ஆக்சன் காட்சியில் பணியாற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் என பலருக்கும் இந்த அகாடமி பயனுள்ளதாக இருக்கும். workshop நடத்தவிருக்கிறோம். ஒரு துறையில் சிறந்து விளங்கும் வெளிநாட்டு கலைஞர்களை அழைத்து வந்து இங்கு ஆர்வமாக இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கவிருக்கிறோம். உதாரணத்திற்கு ஸ்கேட்டிங் ஃபைட், சைக்கிளிங் ஃபைட். இந்தியாவைத் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, கொரியா, சீனா போன்ற நாடுகளில் எல்லாம் இது போன்ற ஆக்சன் அகாடமிகள் இருக்கின்றன. இந்தியாவிலும் இதனை தொடங்கவேண்டும் என்று எண்ணி, 2019 ஆம் ஆண்டில் சென்னையில் உருவாக்குகிறோம்.

============
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பாடல்கள் உதவியது ஒரு காலம், இசை உதவியது ஒரு காலம். படத் தொகுப்பு, ஒளிப்பதிவு உதவியது ஒரு காலம். தற்போது ஒரு படத்தின் வெற்றிக்கு சண்டை பயிற்சி இயக்குநர்களும் உதவுகிறார்கள் என்பது கே ஜி எஃப்பின் வெற்றி மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியில் கடுமையான உழைத்த அன்பறிவ் போன்றவர்களின் புதுமையான சிந்தனைக்கு திரையுலகமும், ரசிகர்களும் கைகொடுத்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது மட்டும் உறுதி.

விஜய் பெயரை தவறாக பரப்புவர்களுக்கு எச்சரிக்கை

விஜய் பெயரை தவறாக பரப்புவர்களுக்கு எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy vijayநமது தளபதி விஜய் அவர்களின் முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக பணிபுரிந்தவர் தற்போது ￰வேறு சில காரணங்களால் அப்பணியில், நமது தளபதி விஜய் அவர்களுடன் இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.

மேலும், அவர், நமது மக்கள் இயக்கதில் யாதொரு பொருப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை !

இருப்பினும், தளபதி விஜய் அவர்கள் பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்த கருத்தை, தளபதி விஜய் அவர்களின் கருத்தை போல் ஊடகங்களில் வெளியிடுவதை நமது மதிப்புமிகு தளபதி விஜய் அவர்கள் ஏற்க்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

அதோடு, நமது தளபதி விஜய் அவர்கள் எந்த காலக்கட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பீட்டு பேசியதில்லை ! அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் நமது தளபதி விஜய் அவர்கள் அதிகாரம் அளிக்கவில்லை என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆகவே, தளபதி விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துக்களை யாரும் நம்பவேண்டாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

மண் மனம் மாறாத *நெடுநல்வாடை* டீசரை வெளியிட்ட 3 பிரபலங்கள்

மண் மனம் மாறாத *நெடுநல்வாடை* டீசரை வெளியிட்ட 3 பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nedunalvaadai movie teaser release news updatesபி ஸ்டார் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க பூ ராமு இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர், மைம் கோபி, அஜய் நட்ராஜ், ஐந்துகோவிலான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் `நெடுநல்வாடை’.

செல்வகண்ணன் இயக்கியிருக்கும் இந்த படம் மண் மனம் மாறாத காதல், சென்டிமெண்ட் கதையாக உருவாகியுள்ளது.

ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையமைக்க, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு பணிகளையும், விஜய் தென்னரசு கலை பணிகளையும் கவனித்துள்ளனர்.

இந்த பட டீசரை தங்களது வித்தியாசமான படைப்பால் தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்களிடமும் மிகுந்த பாராட்டை பெற்ற மேற்கு தொடர்ச்சி மலை இயக்குநர் லெனின் பாரதி, ராட்சசன் பட இயக்குர் ராம்குமார், 96 படத்தின் இயக்குநர் பிரேம் ஆகிய மூவரும் வெளியிட்டனர்.

தற்போது நெடுநல்வாடை டீசர் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

Nedunalvaadai movie teaser release news updates

More Articles
Follows