யோகி பாபுவை நாயகனாக்கி படம் இயக்கும் ஜெயம் ரவி

யோகி பாபுவை நாயகனாக்கி படம் இயக்கும் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu and jayam raviஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்க மறு படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் சினிமாவில் நாயகனாக நடிக்கும் முன் 2001-ல் வெளியான கமலின் ஆளவந்தான் படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தாராம்.

தற்போது சில படங்களில் நடித்துவிட்டாலும் இயக்குனராகவும் ஆசை இதுவரை நிறைவேறவில்லை.

எனவே விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சில ஆண்டுகள் கழித்து எல்லா தரப்பினரும் ரசிக்கும் ஒரு படத்தை இயக்க ஆசையாம்.

அது முழுக்க காமெடி படம் என்பதால் அதில் யோகி பாபுவை நாயகனாக்க உள்ளாராம்.

வினோத் இயக்கும் தல 59 படத்தில் 3 நாயகிகள்.; அஜித்தின் ஜோடி யார்..?

வினோத் இயக்கும் தல 59 படத்தில் 3 நாயகிகள்.; அஜித்தின் ஜோடி யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithஅஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் அடுத்த வருடம் 2019 ஜனவரி 10ல் வெளியாகவுள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித்.

இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

இது பிங்க் இந்தி படத்தின் ரீமேக் படமாக உருவாகிறது.

இதில் 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

ஒருவர் நஸ்ரியா, மற்றொரு வேடத்தில் பிரியதர்‌ஷன் மகள் கல்யாணி நடிக்கிறார் என கூறப்படுகிறது.

3வது நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவிருக்கிறாராம்.

இதில் 3 நாயகிகள் இருந்தாலும் அஜித்துக்கு யாரும் ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..!

சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

marina puratchi2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘மெரினா புரட்சி’ திரைப்படத்திற்கு 80 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை.

காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.

மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று கோரியிருக்கிறோம். மாண்புமிகு நீதியரசர் அவர்கள் எதிர்த்தரப்பான தணிக்கைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியிருக்கிறது.சிங்கப்பூர் அரசின் தணிக்கை பிரிவான Info communications Media Devolpment Authorities மெரினா புரட்சி திரைப்படத்திற்கு NC 16 என்ற பிரிவின் கீழ் ” தமிழகளின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் உண்மைகளை சொல்லும் படம் என்று குறிப்பிட்டிருக்கிறாரகள்.

உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் இதயங்களுக்கு மெரினா புரட்சியை கொண்டு சேர்க்கும் நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் போராட்டத்திற்கு சிங்கப்பூர் அரசின் தணிக்கை சான்று மேலும் வலு சேர்த்திருக்கிறது.

‘கனா’ படத்தில் சத்யராஜுடன் நடித்ததில் பெருமை – நடிகர் சத்யா N J

‘கனா’ படத்தில் சத்யராஜுடன் நடித்ததில் பெருமை – நடிகர் சத்யா N J

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NJ sathya‘கனா’ படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு அருண்ராஜ் மூலம் தான் கிடைத்தது. நானும் அவரும் கிரிக்கெட் விளையாடும்போதே நல்ல நண்பர்கள். அவர் வேக பந்து வீச்சாளர், நான் விக்கெட் கீப்பர். அப்போதிருந்தே எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.

நான் சினிமாவிற்கு வந்ததின் லட்சியம் விஜய்க்கு காஸ்டியூம் டிசைன் பண்ண வேண்டும் என்று தான். அது நிறைவேறிவிட்டது. இதுவரை 35 படங்களில் பணியாற்றிவிட்டேன். ஆனால் சம்பாதிக்கவில்லை. சினிமாவில் நிறைய படத்தில் நடிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், நிறைய சாதிக்கணும். அதுமட்டுமல்லாமல், எனக்கு CCL-ல் விளையாட வேண்டும். அதில் விளையாட வேண்டுமானால் குறைந்தது 7 படங்களிலாவது நடித்திருக்க வேண்டும். இப்போது அதற்கான அனுமதியை வாங்கிவிட்டேன். அதற்காக தான் நான் சினிமாவில் நடிக்க வந்ததே. அந்த ஆசையை அருண்ராஜிடம் கூறியபோது, என்னை ஒத்திகைக்கு வர சொன்னார். பிறகு, ‘கனா’ வில் நடிக்க தேர்வு செய்தார்.

ஆனால், நிஜத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கும், படத்தில் நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் மற்றும் பெரும் சவாலாக இருந்தது. நான் ‘டிராவிட்’ மாதிரி தான் ஒவ்வொரு ‘ரன்’னாகத்தான் எடுப்பேன். திடீர்னு சிக்ஸர் அடிக்க சொல்வார்கள். அந்த காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு தான் நடித்தேன். அதேபோல, சத்யராஜுடன் பல காட்சிகளில் நடித்திருப்பேன். அவருடன் நடிப்பதற்கு பயமாக இருந்தது. அவர் ஒற்றை வாய்ப்பில் நடிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர். ஆகையால், நேரம் கடத்தாமல், முடிந்த அளவுக்கு இரண்டாவது வாய்ப்பு வராமல் நடித்தேன். ஏற்கனவே, எனக்கு சில படங்கள் நடித்த அனுபவம் இருந்ததால் இப்படத்தில் அது உதவியாக இருந்தது.

அப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், ஒரு காட்சியில் நான் சில செய்கைகளை செய்து வசனம் பேச வேண்டும். அதன்பிறகு, அவர் பேச வேண்டும் என்பது போல அந்த காட்சி இருக்கும். அதற்கு அவர் நீங்கள் இரண்டு செய்கைகளை மட்டுமே செய்துவிட்டு வசனம் பேசுங்கள். அப்போது நான் பேசுவதற்கு நேரம் சரியாக இருக்கும் என்று யோசனை கூறினார். ஆகையால், காலதாமதமாகாமல் விரைவாக காட்சிகளை படமாக்க முடிந்தது. பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் என்னிடம் அவர் பழகியது எனக்கு பெருமையாக இருந்தது.

படம் பார்த்ததும், சசிகுமார், சமுத்திரகனி, விக்னேஷ் சிவன், DD, தம்பி ராமையா ஆகியோர் என்னைப் பாராட்டினார். சிம்பு என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘டேய் சூப்பரா பண்ணியிருக்கடா’ என்று பாராட்டினார். அவர் எவ்வளவு பெரிய ஆள். எங்காவது விழாவில் பார்த்து ‘கனா’வில் உனது நடிப்பு நன்றாக இருந்தது என்று கூறியிருக்கலாம். அலைபேசியில் அழைத்து பேச வேண்டிய அவசியம் அவருகில்லை. அவரின் பாராட்டு அளவில்லாத மகிழ்ச்சியளித்தது. இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியிருக்கிறது. இன்னும் 3 படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன். விரைவில் அதற்கான படப்பிடிப்பு நடக்கும்.

நடிப்பு என்பது எப்போதும் நிரந்தரம் கிடையாது. எப்போது மேலே வருவோம், எப்போது கீழே செல்வோம் என்பது தெரியாது. ஆகையால், என்னுடைய தொழிலையும், நடிப்பையும் இணைந்தே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

சினிமாவில் இப்போதுதான் நான் பிறந்திருக்கிறேன். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும். எல்லோரும் முதல் ஐந்து படங்களுக்கு ஒரே கதாபாத்திரம் கொடுத்துவிட்டு தான் தோற்றத்தை மாற்றுவார்கள். ஆனால், எனக்கு நான் நடித்த அனைத்து படங்களிலும் வெவ்வேறான கதாபாத்திரம் தான். இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதாபாத்திரம். இதற்கு பிறகு வரக்கூடிய படங்கள் நகரத்தில் வசிக்கக்கூடிய கதாபாத்திரமாக இருக்கும். இதுபோல, சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

சிவகார்த்திகேயன் எனக்கு நல்ல நண்பர். தேவி திரையரங்கத்தில் அனைவரும் சேர்ந்து படம் பார்த்தோம். அவருடன் இருக்கும் நேரம் ஒவ்வொருவரும் மாறி மாறி வசனங்கள் பேசி கிண்டல் அடித்து சிரித்துக் கொண்டே இருப்போம். இந்த கதாபாத்திரம் பேசக்கூடிய அளவு இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். அவருக்கும் எனது நன்றி.

சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்

சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundar rajaநடிகர் சௌந்தரராஜா வித்தியாசமான நடிகர்களில் ஒருவர். கதைநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்துவார். சுந்தரபாண்டியனில் தன் பயணத்தை தொடங்கிய சௌந்தர ராஜா சமீபத்திய தமிழ் ஹிட் படங்களின் மூலம் சிறப்பான வளர்ச்சியை எட்டி இருக்கிறார்.

கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம், இரண்டு படங்களிலும் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ராஜபாண்டி எம்.எல்.ஏ. வாக கெத்தான வெத்து வில்லன் கதாபாத்திரத்தில் சௌந்தர ராஜாவின் நடிப்பைப்பார்த்து ரசிகர்களும் சினிமா நண்பர்களும் பெரிதும் பாராட்டுகின்றனர்.

சிங்கங்களை எதிர்த்து நின்று கெத்தாக சீறியதோடு மட்டுமின்றி ரசிகர்களை சிரிக்கவும் வைத்ததில் நிஜமாகவே மகிழ்ச்சி என்கிறார், சௌந்தரராஜா.

கனா என் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டது இணை தயாரிப்பாளர் கலையரசு

கனா என் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டது இணை தயாரிப்பாளர் கலையரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanaa movie stillsசினிமாவில் “இன்ஸ்பிரேஷன்ஸ்” என்பதே ஒரு தனி ஜானர். அந்த விஷயங்களை கொண்டிருக்கும் எந்த ஒரு படமும் மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் என நான் சொல்வேன். எங்கள் தயாரிப்பான “கனா” எல்லோராலும் பாராட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. வணிக வெற்றியை விட, தியேட்டர்களில் தங்கள் படங்களை ரசிகர்கள் முழுமையாக அனுபவிப்பதை பார்ப்பது தான் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். ரசிகர்களின் பல்ஸை அருண்ராஜா காமராஜ் கச்சிதமாக தெரிந்து வைத்திருக்கிறார். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு என் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டன” என்கிறார் இணை தயாரிப்பாளர் கலையரசு.

அவர் தற்போது அனுபவிக்கும் ஒரு எதிர்பாராத ஆச்சரியம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அவத் கூறும்போது, “ஒரு திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடும்போது, வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக கருதப்படும். ஆனால் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சிறப்பு திரையிடலுக்காக எங்களை அணுகுவதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும், ரசிகர்களின் வாய்வழி செய்தி மூலம் மிகப்பெரிய விளம்பரமாகி, திரையரங்குகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இன்னும் நல்ல தரமான பொழுதுபோக்கு படங்களை வழங்க இது ஊக்கமாக இருக்கிறது” என்றார்.

மேலும், மொத்த குழுவுக்கும் நன்றி தெரிவித்து பேசும்போது, “ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் ஒரு பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்பதை கனா மறுபடியும் நிரூபித்திருக்கிறது. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக இருக்கிறதுது. ‘கனா’ மூலம் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார். அறிமுக திரைப்படம் என்றாலும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் தர்ஷன். மேலும் அவருடைய காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதை பார்க்க இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யராஜ் சார் பற்றி நான் வேறு என்ன சொல்ல முடியும்? தன் மாயாஜால நடிப்பால் படத்தின் முதுகெலும்பாக இருந்து படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறார். கனாவில் தன் இசையால் ரசிகர்களிம் கவனத்தை ஆரம்பம் முதலே ஈர்த்திருந்தார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் அனுபவத்தை வழங்கிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் மிக வேகமாக படத்தை தொகுத்த ரூபன் ஆகியோரை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இந்த திரைப்படத்தை சிறப்பாக உருவாக்க நிபந்தனையற்ற ஈடுபாட்டுடன் அவர்கள் கொடுத்த உழைப்பு தான் இப்போது அழகான படத்தை கொடுத்திருக்கிறது” என்றார்.

More Articles
Follows