வெற்றிமாறன் படத்தை முடித்துவிட்டு ‘அடங்கமறு’ இயக்குனருடன் இணையும் சூர்யா

வெற்றிமாறன் படத்தை முடித்துவிட்டு ‘அடங்கமறு’ இயக்குனருடன் இணையும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

adanga maru directorசூர்யா தயாரித்து நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இதனையடுத்து ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிப்பார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் அது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் ‘அடங்கமறு’ பட இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் கோலிவுட்டில் உலா வருகிறது.

இது உறுதியான தகவலா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Adanga maru directors next film with suriya

சாதி சர்ச்சை பாடல் வரிகள்.; சூரரைப் போற்று படம் மீது வழக்கு.; ஓடிடி ரிலீசுக்கும் சிக்கல்..?

சாதி சர்ச்சை பாடல் வரிகள்.; சூரரைப் போற்று படம் மீது வழக்கு.; ஓடிடி ரிலீசுக்கும் சிக்கல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottruசூர்யா தயாரித்து நடித்துள்ள படம சூரரைப்போற்று.

சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை தியேட்டரில் வெளியிடாமல் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளார் சூர்யா.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது இது சர்ச்சையாகி உள்ளது.

அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற பாடல் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை படத்துக்கு தடை விதிக்க கோரி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே கார்த்திக் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது விசாரித்தார்.

அப்போது மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தினார் நீதிபதி.

அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார் நீதிபதி.

Madras High Court to sue Actor Suriya’s Soorarai Pottru

சூர்யா & விஜய்சேதுபதியை அடுத்து ஓடிடியில் லாரன்ஸ் போடும் ‘லட்சுமி பாம்’

சூர்யா & விஜய்சேதுபதியை அடுத்து ஓடிடியில் லாரன்ஸ் போடும் ‘லட்சுமி பாம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lakshmi bombகொரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே சில படங்கள் ஆன்லைன் ஓடிடியில் ரிலீசாகி வருகிறது.

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதியும் & விஜய்சேதுபதி நடித்த கா பெ ரணசிங்கம் அக்டோபர் 2ஆம் தேதியும் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழில் பேய் ஹிட்டான ‘காஞ்சனா’ பட ஹிந்தி ரீமேக் ஆன ‘லக்ஷ்மி பாம்’ படத்தை தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்கின்றனர்.

வருகிற நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி மற்றும் ஹாட் ஸ்டாரில் வெளியிட உள்ளதாக அதன் இயக்குநர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் அக்‌ஷய்குமார் ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

Raghava Lawrence in Laxmi Bomb to release in OTT platform

கல்வி துறையை சிறப்பாக்க சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் – சௌந்தரராஜா விருப்பம்

கல்வி துறையை சிறப்பாக்க சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் – சௌந்தரராஜா விருப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundar raja suriyaதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.

சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்க வைத்திருக்கிறார்.

இவர் ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்..

சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் சூர்யா. அவர்கள் குடும்பமே கல்விக்காக நிறைய விஷயங்களை செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கையை நான் ஆதரிக்கிறேன். பலரும் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து ஆதரிக்க வேண்டும்.

நடிகர் சூர்யா அண்ணா அரசியலுக்கு வர வேண்டும். குறிப்பாக கல்வி துறை அவர் வந்தால் சிறப்பாக இருக்கும். என்னுடைய விருப்பம் மட்டுமில்லை, பல ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

Actor Soundar Raja wants Suriya become politician

அப்பாவின் இழப்பை ஒவ்வொரு நாளும் உணர்வேன்..; தந்தை மரணம் குறித்து பில்கேட்ஸ்

அப்பாவின் இழப்பை ஒவ்வொரு நாளும் உணர்வேன்..; தந்தை மரணம் குறித்து பில்கேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bill gates with his fatherஉலகத்தின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

இதன் இணை நிறுவனரும் உலகப்புகழ் பில்கேட்ஸின் தந்தையுமான வில்லியம் ஹெச்.கேட்ஸ் செப்டம்பர் 14ல் காலமானார்.

அல்ஸைமர் நோயால் (Alzheimer’s disease) பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 94.

வழக்கறிஞராகவும் இருந்த வில்லியம் பல சமூக சேவைகளை செய்துள்ளார்.

தந்தையின் மரணம் குறித்து பில்கேட்ஸ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில்… “என் தந்தையின் பணிவு, ஞானம், இரக்கம் ஆகியவை மக்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனக்கு வயது கூட கூட எனது செயல்களில் அப்பாவின் தாக்கம் இருப்பதை உணர்ந்தேன்.

மைக்ரோசாஃப்ட்டின் முக்கியமான கட்டங்களில் சட்டரீதியான ஆலோசனைகளை அப்பாவிடம் கேட்பேன்.

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை அப்பா இல்லாமல் சாத்தியமில்லை.

புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள எப்போதும் ஆர்வம் காட்டினார். அவரின் மகனாக இருந்த அனுபவம் மிகவும் அற்புதமான ஒன்று.

என் அப்பாவின் இழப்பை ஒவ்வொரு நாளும் உணர்வேன்” என பில்கேட்ஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

I never stopped learning from his wisdom – Bill gates about his father

புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக உதவித்தொகை & அரிசி தானியங்கள்

புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக உதவித்தொகை & அரிசி தானியங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pudhucherry govtபுதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களும் ஒன்றிணைந்தது தான் புதுச்சேரி.

தற்போது கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

பள்ளிகளை எப்போது திறக்கலாம் என தெரியாமல் மத்திய & மாநில அரசுகளே திண்டாடி வருகிறது.

இந்த சூழ்நிலையால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடியவில்லை.

இதனால் பள்ளிகள் மூலம், பெற்றோர்களிடம் அரிசி மற்றும் உதவித்தொகை நேரடியாக நேற்று செப்டம்பர் 15 முதல் வழங்க அரசு உத்தரவிட்டது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி.. ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவுக்கு பதிலாக தானியங்கள், உதவித்தொகை வழங்கப் படுகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.290 ரொக்கமும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.390 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று இதனை பெற்றுக்கொள்ளலாம்

Pudhucherry govt provides 4kg rice to school students

More Articles
Follows