கோலிவுட்டின் ராசி நாயகி ப்ரியா பவானி சங்கருடன் இணையும் விஷால்

கோலிவுட்டின் ராசி நாயகி ப்ரியா பவானி சங்கருடன் இணையும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஜெயம் ரவி, ராஷி கண்ணா இணைந்து நடித்த படத்தை அடங்கமறு என்ற படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் தங்கவேல்.

தற்போது இவரின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படமொன்றில் நடிக்க உள்ளார் விஷால்.

விஷாலுக்கு ஜோடியாக லேட்டஸ்ட் சென்சேஷன் ப்ரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ப்ரியா பவானி சங்கர் நடித்த மான்ஸ்டர், மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட அனைத்து படங்களுமே ஹிட் அடித்துள்ளது.

எனவே தற்போது கோலிவுட்டின் ராசியான நாயகியாக மாறிவிட்டார் பிரியா.

ஷங்கர் இயக்கும் கமலின் இந்தியன் 2 படத்திலும் ப்ரியா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்-தா-னம் நிர்-வா-ணம்.; அத்து மீறும் ‘டிக்கிலோனா’ போஸ்டர்ஸ்

சந்-தா-னம் நிர்-வா-ணம்.; அத்து மீறும் ‘டிக்கிலோனா’ போஸ்டர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Santhanam nude poster from Dikkilona goes viralகார்த்திக் யோகி என்பவரின் இயக்கத்தில் சந்தானம் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்து வரும் படம் டிக்கிலோனா.

நாயகன் 3 வேடங்களில் நடிப்பதால் சந்தானம் என்ற பெயரை கூட சந்-தா-னம் என பிரித்து போட்டு வருகின்றனர்.

இந்த படத்தில் சந்தானம் உடன் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆடும் ஒரு மாதிரியான விளையாட்டின் பெயரே இந்த படத்தை தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்பட 2வது லுக் போஸ்டரில் ஆடையில்லாமல் நிர்வாணமாக நிற்கிறார் சந்தானம். அந்த இடத்தில் ஹாட் என வார்த்தையை வைத்து மறைத்துள்ளனர்.

ஏற்கெனவே ஆபாச காமெடி டைட்டிலை வைத்துவிட்டு, தற்போது போஸ்டரையும் இப்படி டிசைன் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் 3வது கெட் அப் போஸ்டர் ஒன்று வரவுள்ளதாம். அது சர்ச்சையாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Actor Santhanam nude poster from Dikkilona goes viral

பொன் மகளை பாராட்டும் பொன் மனங்கள்; வெளுத்துக் கட்டும் வெண்பா!

பொன் மகளை பாராட்டும் பொன் மனங்கள்; வெளுத்துக் கட்டும் வெண்பா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Celebrities praises Ponmagal Vandhal Jyothika as Lawyer Venba நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் படம் பொன்மகள் வந்தாள்.

இந்தப் படத்தில் வழக்கறிஞர் வெண்பா வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.

மேலும் பிரபல இயக்குனர்கள் பார்த்திபன், கே பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

96 பட புகழ் கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த படம் நாளை அமேசான் (ஓடிடி)யில் வெளியாகவுள்ளதால் இதன் புரோமோசன் மற்றும் விளம்பரங்கள் இணையத்தை வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது.

பிரபல நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாலும் தியேட்டர்காரர்களின் எதிர்ப்பை மீறி சூர்யா இந்த படத்தை ஆன்லைனில் வெளியிடவிருப்பதால் படத்திற்காக எதிர்பார்ப்பு ரசிகர்களை எகிற வைத்துள்ளது எனலாம்.

இவையில்லாமல் பிரபலங்கள் பாரதிராஜா, தனஞ்செயன், எஸ்ஆர் பிரபு, அட்லி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகின்றனர்.

படத்தின் கதை சுருக்கம்..

நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’.

ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்யராஜ்) என்பவர், 2004-ஆம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.

அவரது மகள் வெண்பா (ஜோதிகா) ஒரு தீவிரமான வழக்கறிஞர். உண்மையை வெளியே கொண்டு வர சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தேடிப் பிடித்து சரி செய்கிறார்.

மேற்பரப்பில் பார்க்கும் எதுவும் கண்ணை ஏமாற்றும் ஒரு மோசமானப் புதிராக இந்த வழக்கு விரிகிறது.

பெயருக்காகவும், புகழுக்காகவும் ஆசைப்படுவதாக அவதூறுகளைச் சந்திக்கும் வெண்பா, தன்னை நோக்கி வரும் சவால்களைத் தாண்டி நீதியை நிலைநாட்ட அசராது நிற்கிறார்.

200-க்கும் அதிகமான நாடுகளில், பிரத்யேகமாக ப்ரைம் உறுப்பினர்களுக்கு, மே 29-ஆம் தேதி முதல் ‘பொன்மகள் வந்தாள்’ ஸ்ட்ரீமிங்கில் காணக்கிடைக்கும்.

Celebrities praises Ponmagal Vandhal Jyothika as Lawyer Venba

2 கோடி பார்வையாளர்களுடன் ஜோ-WIN ‘பொன்மகள் வந்தாள்’ டிரைலர்

2 கோடி பார்வையாளர்களுடன் ஜோ-WIN ‘பொன்மகள் வந்தாள்’ டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ponmagal Vandhal on Amazon Prime receives 20M Views on TV and YouTube நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் படம் பொன்மகள் வந்தாள்.

இந்தப் படத்தில் வழக்கறிஞர் வெண்பா வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.

மேலும் பிரபல இயக்குனர்கள் பார்த்திபன், கே பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

96 பட புகழ் கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார்.

அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.

ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது.

இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களை * இந்த ட்ரெய்லர் சென்று சேர்ந்துள்ளது.

தென்னிந்தியாவில் பிரபலமான, முக்கிய நடிகைகளில் ஒருவரான ஜோதிகா நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சன் டிவி, கே டிவி, ஸ்டார் விஜய் டிவி, சன் நியூஸ், சிஎன்என் நியூஸ் 18 தமிழ், ஜீ தமிழ் உட்பட முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்திலும் இந்த ட்ரெய்லர் ஒளிபரப்பானது.

இதோடு சேர்த்து, ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லருக்கு, அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. 24 மணி நேரத்தில் 60 லட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றுள்ளது.

Ponmagal Vandhal on Amazon Prime receives 20M Views on TV and YouTube

*பார்க் தரவுகளை வைத்து மதிப்பிடப்பட்ட சராசரி பார்வையாளர்களின் அடிப்படையில்

யூடியூப் இணைப்பு:

https://www.youtube.com/watch?v=vzfe8UEJFd0

துபாயில் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி; ஆனா எல்லாரும் படம் பார்க்க முடியாதாம்

துபாயில் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி; ஆனா எல்லாரும் படம் பார்க்க முடியாதாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dubai theaterகொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் 60 நாட்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல ஆயிரக்கணக்கான கோடி பணம் முடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு குறையாத போதும் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இதுநாள் வரை தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

ஆனால் தற்போது சில விதிமுறைகளுடன் சூட்டிங் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சின்னத்திரை சூட்டிங் தொடங்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் துபாயில் திரையரங்குகளை இன்று முதல் திறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன் படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பட்டியலிட்டுள்ளது.

மொத்த இருக்கைகளில் 30 சதவிகிதம் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

12 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் திரையரங்குகளில் அனுமதிக்கக் கூடாது.

பார்வையாளர்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

இரு பார்வையாளர்களுக்கு இடையில் 2 மீட்டருக்கு மேல் இடைவெளிக் கடைபிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு காட்சிகளுக்குப் பின்னும் திரையரங்கத்தின் அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ஆன்லைன் கிளாஸ் கூடாது.. இல்ல இல்ல நடத்தலாம்.. அமைச்சர் பல்டி

ஆன்லைன் கிளாஸ் கூடாது.. இல்ல இல்ல நடத்தலாம்.. அமைச்சர் பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Minister sengottaiyanகொரோனா பொது முடக்கத்தால் கடந்த 2 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

10 வகுப்பு பொதுத் தேர்வுகள் கூட ஒத்திவைக்கப்பட்டன.

இதனையடுத்து சில தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று மே 27ஆம் தேதி காலையில் பேட்டி அளித்த தமிழக அமைச்சர் செங்கோட்டையன், “ஆன்லைன் வகுப்பு எடுப்பதை நிறுத்த இயக்குனர் மூலமாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. மீறி நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என ஊக்குவித்து வருகிறது.

தற்போது ஆன்லைனில் வகுப்பு நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதற்கு அனைத்து பள்ளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில்…

“60 நாட்களுக்கும் மேலாக தமிழக பள்ளிக் கல்வி மாணவர்கள் கரோனா எனும் கொடிய நோய் மற்றும் ஊரடங்கு காரணமாக வீட்டுச் சிறையில் முடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் படித்ததை மறந்து விட்டார்கள். கற்பதை நிறுத்திக் கொண்டார்கள்.

அதை மீட்டெடுப்பதற்காக தனியார் பள்ளிகள் பெற்றோரிடமோ மாணவரிடமோ எந்தவிதக் கல்விக் கட்டணமும் பெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதற்கு முன் கல்வி அமைச்சரே ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று கூறியுள்ளன. அதற்கான கட்டணம் கூட பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை செய்தி வெளியிட்டிருப்பது சரியல்ல” என்று அனைத்து பள்ளிகள் சங்கம் தெரிவித்தது.

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்று பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், உடனே மறுப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக புது விளக்கம் ஒன்றை அவர் அளித்துள்ளார்.

“ஆன்லைன் வகுப்பு எடுப்பதை நாம் தடுக்க முடியாது. மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வகுப்புகளை நடத்தக் கூடாது. தனிப்பட்ட முறையில் ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்துவதை நாம் தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows