எம்.ஜி.ஆரின் மனைவியாக மாறும் கபாலி ரித்விகா

எம்.ஜி.ஆரின் மனைவியாக மாறும் கபாலி ரித்விகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rythvikaமுன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ஏ.பாலகிருஷ்ணன் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இவர் காமராஜ் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் எம்.ஜி.ஆர் கேரக்டரில் சதீஷ் குமார் என்பவர் நடிக்கிறார்.

அண்ணாதுரையாக இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் கேரக்டரில் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உட்பட பல படங்களில் நடித்துள்ள ரித்விகா நடிக்கிறாராம்.

எம்.ஜி.ஆரின் பூர்வீக வீடு கேரளாவின் பாலக்கட்டில் உள்ளது. அங்கும் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

அஜித்-சிவா இணையும் விசுவாசம் பட நாயகி இவர்தானா..?

அஜித்-சிவா இணையும் விசுவாசம் பட நாயகி இவர்தானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Anushkaவீரம், வேதாளம், விவேகம் ஆகிய வீ சென்டிமெண்ட் படத்தலைப்புகளை தொடர்ந்து விசுவாசம் படத்தில் நடிக்கிறார் அஜித்.

இப்படத்தையும் சிவாவே இயக்க, சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக அனுஷ்கா நடிக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பே என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் இணைந்து அனுஷ்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவி தொகுப்பாளினி அஞ்சனா எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

டிவி தொகுப்பாளினி அஞ்சனா எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anjana vj (1)சினிமா நடிகர்களுக்கு இணையாக டிவி நடிகர்களும் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளனர்.
இதில் வரிசையில் மிக முக்கியமானவர் அஞ்சனா.

சன் டிவியில் நேரடி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் இவர் கயல் பட நாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் இது நேரடி நிகழ்ச்சிகளை வழங்கப்போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் 10 வருடங்களை கடந்துவிட்டேன். என் பெர்சனல் லைப்ஃபுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்ட அந்த அறிக்கை இதோ…

Anjana Rangan‏Verified account @AnjanaVJ

For all those who’ve been asking me why I’m not coming for the live show, here it is, it gives me so much memories.. thank you @SunMusic for letting me serve you for a decade.

அஜித்தின் விவேகம் வசூலை வீழ்த்திய வேலைக்காரன்

அஜித்தின் விவேகம் வசூலை வீழ்த்திய வேலைக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Velaikkaran and Vivegamஅஜித் நடிப்பில் ஹாலிவுட் பாணியில் எடுக்கபட்ட படம் விவேகம்.

படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது.

ஆனால் படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் தோல்வியை சந்தித்தது.

மேலும் படத்தின் பட்ஜெட்டும் இதற்கு மிகப்பெரிய காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் பல திரையரங்குகளில் விவேகம் படத்தின் வசூலை சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் வீழ்த்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

ஹிச்சி பட புரோமோசன் சமயத்தில் ஹீரோக்களை சந்திக்கிறார் ராணிமுகர்ஜி

ஹிச்சி பட புரோமோசன் சமயத்தில் ஹீரோக்களை சந்திக்கிறார் ராணிமுகர்ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rani Mukerjeeராணி முகர்ஜி சமூகத்தில் பாகுபடுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது பலவீனத்தை எடுத்துச்சொல்லி சமூகத்தில் முன்னேற பேசவுள்ளார்.

ராணி தனது திரைப்படத்தின் விளம்பரத்தை நாடெங்கும் பரப்ப திட்டமிட்டுள்ளார்.

சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தரும் செய்திகளை பேசவுள்ளார்.திரைப்பட விளம்பரத்தை தாண்டி பொது மக்களுக்கு அவர்களது பலவீனத்தை எடுத்துச்சொல்லி வாழ்கையில் முன்னேறும் பல கருத்துக்களை தெரிவிக்கவுள்ளார்.

சமூக பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வு,சமூக பழக்கவழக்கம் போன்றவற்றை எடுத்துக்கூறி வாழ்க்கையில் முன்னேற்றமடைய மக்களிடம் பேசவுள்ளார்.

ராணி முகர்ஜி மக்களிடம் எளிமையாக பேசும் திறன் படைத்தவர்.

ஹிச்சி திரைப்படம் மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேறும் கருத்துக்களை தெரிவிக்கும் எனவும் சமூகத்தில் மக்களுக்கு தங்களது பலவீனத்தை எடுத்துகாட்டி ஊக்கமளிக்கும் படமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

ராணி முகர்ஜி மக்களிடமும் ,தனது ரசிகர்களிடமும் சகஜமாக, எளிமையாக பழகும் குணம் உள்ளவர்.

ஹிச்சி திரைப்பட விளம்பரத்தில் பல நல்ல கருத்துகளை சொல்லவுள்ளார்.

ட்டூரெட்ஸ் நோய் அறிகுறியுடைய கதாபாத்திரமாக மிக சிறப்பாக நடித்துள்ளார்.

இத்திரைப்பட விளம்பரத்தில் சமூக மக்களுக்கு நல்ல கருத்துகளை சொல்லி பலவீனத்தை தகர்த்தெறியும் நல்ல விசயங்களை கூறயிருக்கிறார்.

ராணி அவர்கள் ஹிச்சி திரைப்படம் சமூக பாகுபாடு, சமூக பழக்கவழக்கம் போன்ற கருத்துக்கள் தரும் என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

இத்திரைபடத்தின் கதையும், கதைக்கருவும் மக்களுக்கு பலவீனத்தை குறைத்து வாழ்க்கையில் முன்னேறும் பல நல்ல செய்திகளை தரும் எனவும் கூறியுள்ளார்.

வாழ்க்கைக்கு தேவையான குறிக்கோள்களையும் ,நெறிமுறைகளையும் ஹிச்சி திரைப்பபட விளம்பரத்தில் தெரிவிக்க உள்ளார்.

ராணி முகர்ஜி இத்திரைப்படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய் அறிகுறியைக் கொண்டிருக்கும் “நினா மாதுர் “எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படி உள்ள நிலைமையிலும் வாழ்க்கையில் எப்படி போராடி வெல்ல வேண்டுமென்ற நல்லக்கருத்தை இத்திரைப்படம் தெரிவிக்கும் எனக் கூறியுள்ளார்.

வாழ்க்கையில் வெற்றி பெற சவால் நிறைந்த அழகிய செய்தியை முடிந்தவரை பல பார்வையாளர்களுக்குக் காட்டவுள்ளது இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தை சித்தார்த் P. மல்ஹோத்ரா இயக்கி , மனீஷ் ஷர்மா தயாரித்துள்ளார். ஹிச்சி திரைப்படம் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட உள்ளது.

அரசியல் அப்டேட்ஸ்: ரஜினி அறிவித்தார்; கமல் ஆரம்பிக்கிறார்!

அரசியல் அப்டேட்ஸ்: ரஜினி அறிவித்தார்; கமல் ஆரம்பிக்கிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Kamalஉலகில் மிகச்சிறந்த உறவு நட்புதான்.

எவ்வளவு நெருக்கமான நட்பாக இருந்தாலும் இந்த உறவில் விரிசல் விழ சில நேரங்களில் வாய்ப்புள்ளது.

ஆனால் நம் தமிழ் சினிமாவில் சக போட்டியாளர்களாக கருதப்படும் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் எத்தனையோ தடங்கல்களை தாண்டி கடந்த 40 ஆண்டுகாலமாக நட்புடன் பழகி வருகின்றனர்.

திரையுலகில் உச்சத்தை தொட்ட இவர்கள் இருவரும் தற்போது தங்கள் பார்வையை அரசியல் பக்கம் திருப்பியுள்ளனர்.

தமிழக அரசியலின் மோசனமான சூழ்நிலையில் கருத்தில் கொண்டு இவர்கள் மக்கள் பணியாற்ற களத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஆனால் அரசியலில் இருவரும் இரு துருவங்களாக செயல்பட உள்ளதாகவே தெரிகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து ரசிகர்கள் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றிவிட்டதாக அறிவித்தார்.

அரசியல் கட்சி அறிவிப்பை விரைவில் தெரிவிப்பேன் எனவும் அப்போது தெரிவித்தார் ரஜினி.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தன் அரசியல் கட்சியை அறிவித்துவிட்டு அன்றைய தினமே தான் பிறந்த ஊரான ராமநாதபுரத்தில் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கமல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows