பாலிவுட்டில் மாதவனுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி

பாலிவுட்டில் மாதவனுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி

asuran manju warrierகேரளாவில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர்.

தமிழில் பல வாய்ப்புகள் வந்தபோதும் மறுத்தவர்.

ஆனால் கடந்த 2019ல் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழக ரசிகர்களையும் கவர்ந்தார்.

தற்போது முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் மஞ்சு வாரியர்.

ஹிந்தியில் மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் மஞ்சு வாரியார்.

கல்பேஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.

Actress Manju Warrier to act with Madhavan

கமல் கட்சிக்கு அழைத்தாலும் நோ.. மக்கள் தெளிவாக உள்ளனர்..; உஷாரான ஆதி

கமல் கட்சிக்கு அழைத்தாலும் நோ.. மக்கள் தெளிவாக உள்ளனர்..; உஷாரான ஆதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரசிகர் மன்றத்தினர் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திரைப்பட புகழ் நடிகர் ஆதி பங்கேற்றிருந்தார்.

முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆதி:

“நற்பணி மன்றத்தினரை சந்திக்கும் நேரங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, சமூக பணிகளில் ஈடுபடுவது வழக்கம். நம்மை பார்த்து மற்றவர்கள் நன்மை செய்ய வேண்டுமென்பதை ரசிகர்களுக்கு அறிவுறுத்துவதாகவும்

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அழைத்தால் செல்வீர்களா என்கிற கேள்விக்கு

இப்பொழுது நடிப்பில் கவனம் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

தற்போது மக்கள் விழிப்புடன் உள்ளனர் நல்லது செய்பவர்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்றார்.

விஜயகாந்த், கமல் என சினிமாத்துறையினர் தொடர்ந்து அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு:

அரசியலுக்கு சினிமாத்துறையினர் வரக்கூடாது என்பதில்லை சேவை செய்ய எந்த துறையினரும் அரசியலுக்கு வரலாம் என்றார்…

அடுத்து கிளாப், பார்ட்னர் என்கிற தமிழ் படங்களும் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருவதாக கூறினார்

அவருடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் இருந்தனர்.

Actor Aadhi reply on joining politics

தமிழ்நாட்டுக்கு விஜய்… கேரளாவுக்கு மம்மூட்டி..; கொண்டாடும் திரையுலகம்

தமிழ்நாட்டுக்கு விஜய்… கேரளாவுக்கு மம்மூட்டி..; கொண்டாடும் திரையுலகம்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் 2020 மார்ச் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

2020 நவம்பர் 10 முதல் தமிழகத்தில் 50% தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

ஆனாலும் ரசிகர்கள் கூட்டம் போதவில்லை.

பின்னர் 2021 ஜனவரி 13ல் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில் ரிலீசானவுடன் கூட்டம் அலைமோதியது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் முதல் அனைத்து தரப்பினரும் உற்சாகமடைந்தனர்.

கேரளாவிலும் மாஸ்டர் ரிலீஸ் சமயத்தில் தியேட்டர்கள் 50% இருக்கைகளுடன் திறக்கப்பட்டாலும் இரவு காட்சிக்கு அனுமதியில்லை.

கேரள தியேட்டர்களில் மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்பட்டன.

இதனால் தான் மோகன்லால் & மீனா நடித்து பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ‘த்ரிஷ்யம்-2’ படத்தை கூட ஓடிடியில் ரிலீஸ் செய்தனர்.

இரவு காட்சிக்கு அனுமதி கிடைக்கும் வரை தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டன.

இந்த நிலையில் நேற்று மார்ச்-11 இரவுக் காட்சிக்கு கேரள அரசு அனுமதி அளித்தது.

இதனையடுத்து மம்மூட்டி & மஞ்சு வாரியர் நடித்த ‘தி பிரைஸ்ட்’ என்ற படம் தியேட்டர்களில் வெளியானது.

இப்படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டுள்ளதாம்.

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் நஷ்டத்தில் இருந்தன.

தற்போது மம்மூட்டி படத்தால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Fans and Critics praises Actor Mammootty

நீங்களே feel பண்ணினா எப்படி boss??.. பாஜக சீட் கொடுக்கல… ஆனாலும் மீடியாவை கலாய்க்கும் குஷ்பூ

நீங்களே feel பண்ணினா எப்படி boss??.. பாஜக சீட் கொடுக்கல… ஆனாலும் மீடியாவை கலாய்க்கும் குஷ்பூ

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியை பா.ம.க.விற்கு ஒதுக்கிவிட்டது அதிமுக கூட்டணி.

இத்தொகுதியில் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த நடிகை குஷ்பு, தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே அந்த தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராகவும் குஷ்பு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக முன்பு கூறப்பட்டது.

ஆனால் சேப்பாக்கம் தொகுதியை பா.ம.க.,விற்கு அதிமுகவுக்கு கொடுத்தவிட்டதால் குஷ்பு & பா.ஜ., தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்தது.

இன்று வெளியான திமுக வேட்பாளர் பட்டியலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குஷ்பூவுக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை என்பதை கலாய்த்து நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டனர்.

இது பற்றி குஷ்பு பேசியதாவது…

“தேர்தலில் போட்டியிட உள்ளதாக நான் கூறவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளைத்தான் நான் செய்தேன்.

எனக்கு சீட் கொடுப்பார்கள். நான் தேர்தலில் நிற்பேன் என்ற ஒப்புதலோடு பா.ஜ.க.வுக்கு வரவில்லை.

கட்சி மீது இருக்கும் நம்பிக்கை வந்தேன். இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்காக அசாம், மேற்கு வங்கம் கூட செல்வேன்.” இவ்வாறு குஷ்பூ பேசினார்.

மேலும் குஷ்பூவின் ட்விட்டர் பதிவில்…

“ஹஹாஹாஹாஹ .. என்னைப் பற்றி ஒரு பகுதி பத்திரிகைகள் போட்டியிடவில்லை ஏன்? என கேட்கின்றன.

நான் ஒரு போதும் போட்டியிடவில்லை என்று கூறவில்லை .

கட்சியும் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் நீங்களே ஒரு கண்ணு காது மூக்கு போட்டு ஒரு பொம்மை உருவாகி, நீங்களே feel பண்ணினா எப்படி boss?? உங்களை பார்த்தா பாவமா இருக்கு. பல்பு வாங்கிட்டாங்க” என்று கிண்டலாக கூறியுள்ளார்.

Khushboo reply to her haters

திருமண ஏற்பாடுகள் தீவிரம்.. உதய்பூர் அரண்மனையை 2 நாட்கள் வாடகைக்கு எடுத்த ஹன்சிகா

திருமண ஏற்பாடுகள் தீவிரம்.. உதய்பூர் அரண்மனையை 2 நாட்கள் வாடகைக்கு எடுத்த ஹன்சிகா

விஜய், சூர்யா, விஷால், ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கோலிவுட் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் ஹன்சிகா.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்

தற்போது இவரின் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதிலும் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார் ஹன்சிகா.

இந்த நிலையில் இவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறதாம்.

அதாவது… ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி என்பவருக்கு வருகிற மார்ச் 20-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளதாம்.

எனவே உதய்பூர் அரண்மனை ஒன்றினை 2 நாட்கள் வாடகைக்கு எடுத்து அதில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்திவிருக்கிறார்கள்.

Wedding bells for hansika’s brother

திமுக வேட்பாளர் பட்டியல்..: ஸ்டாலின் உதயநிதி துரைமுருகன் வேலு நேரு அன்பில் மகேஷ் தொகுதிகள் எது..?

திமுக வேட்பாளர் பட்டியல்..: ஸ்டாலின் உதயநிதி துரைமுருகன் வேலு நேரு அன்பில் மகேஷ் தொகுதிகள் எது..?

அடுத்த ஏப்ரல் மாத நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., மட்டும், 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இவர்களின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும், கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால், 187 தொகுதிகளில், களமிறங்குகிறது.

234 தொகுதிகளில், 47 தொகுதிகளில், தனி சின்னத்தில், கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

61 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் உள்ளிட்ட கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டார்.

*173 வேட்பாளர்கள் பட்டியல் இதோ…*

 1. பத்மநாபபுரம் – மனோ தங்கராஜ்
 2. நாகர்கோவில் – சுரேஷ்ராஜன்
 3. கன்னியாகுமரி – ஆஸ்டின்
 4. ராதாபுரம் – அப்பாவு
 5. பாளையங்கோட்டை – அப்துல் வஹாப்
 6. அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன்
 7. நெல்லை – லட்சுமணன்
 8. ஆலங்குளம் – பூங்கோதை ஆலடி அருணா
 9. சங்கரன்கோவில் – ஈ.ராஜா
 10. ஓட்டப்பிடாரம் – எம்.சி.சண்முகைய்யா
 11. திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
 12. தூத்துக்குடி – கீதா ஜீவன்
 13. விளாத்திகுளம் – ஜி.வி.மார்க்கண்டேயன்
 14. முதுகுளத்தூர் – ராஜகண்ணப்பன்
 15. ராமநாதபுரம் – கா.காதர் பாட்சா
 16. பரமக்குடி – சே.முருகேசன்
 17. திருச்சுழி – தங்கம் தென்னரசு
 18. அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்
 19. விருதுநகர் – ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்
 20. ராஜபாளையம் – சௌ.தங்கபாண்டியன்
 21. கம்பம் – ராமகிருஷ்ணன்
 22. போடி – தங்கதமிழ்ச்செல்வன்
 23. பெரியகுளம் – கே.எஸ்.சரவணக்குமார்
 24. ஆண்டிப்பட்டி – மகாராஜன்
 25. திருமங்கலம் – மணிமாறன்
 26. மதுரை மேற்கு – சின்னம்மாள்
 27. மதுரை மத்திய தொகுதி – பழனிவேல் தியாகராஜன்
 28. மதுரை வடக்கு – தளபதி
 29. சோழவந்தான் – வெங்கடேஷன்
 30. மதுரை கிழக்கு – பி.மூர்த்தி
 31. மானாமதுரை – ஆ.தமிழரசு
 32. திருப்பத்தூர் – கே.ஆர்.பெரியகருப்பன்
 33. ஆலங்குடி – மெய்யநாதன்
 34. திருமயம் – எஸ்.ரகுபதி
 35. புதுக்கோட்டை – முத்துராஜா
 36. விராலிமலை – பழனியப்பன்
 37. பேராவூரணி – அசோக்குமார்
 38. பட்டுக்கோட்டை – அண்ணாதுரை
 39. ஒரத்தநாடு – ராமச்சந்திரன்
 40. தஞ்சை – நீலமேகம்
 41. திருவையாறு – துரை சந்திரசேகரன்
 42. கும்பகோணம் – அன்பழகன்
 43. திருவிடைமருதூர் – கோவி.செழியன்
 44. நன்னிலம் – ஜோதிராமன்
 45. திருவாரூர் – கலைவாணன்
 46. மன்னார்குடி – டி.ஆர்.பி ராஜா
 47. வேதாரண்யம் – வேதரத்தினம்
 48. பூம்புகார் – நிவேதா முருகன்
 49. சீர்காழி – மு.பன்னிர்செல்வம்
 50. புவனகிரி – துரை சரவணன்
 51. குறிஞ்சிப்பாடி – எம்ஆர்கே பன்னீர்செல்வம்
 52. கடலூர் – கோ.அய்யப்பன்
 53. நெய்வேலி – சபா ராஜேந்திரன்
 54. திட்டக்குடி – சி.வி.கணேசன்
 55. ஜெயங்கொண்டம் – கே.எஸ்.கண்ணன்
 56. குன்னம் – சிவசங்கர்
 57. பெரம்பூர் – பிரபாகரன்
 58. துறையூர் – ஸ்டாலின் குமார்
 59. முசிறி – தியாகராஜன்
 60. மணச்சநல்லூர் – கதிரவன்
 61. லால்குடி – சவுந்திரபாண்டியன்
 62. திருவெறும்பூர் – அன்பில் மகேஷ்
 63. திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ்
 64. திருச்சி மேற்கு – கே.என்.நேரு
 65. திருவரங்கம் – எம்.பழனியாண்டி
 66. குளித்தலை – இரா. மாணிக்கம்
 67. கிருஷ்ணராயபுரம் – க. சிவகாமசுந்தரி
 68. கரூர் – வி.செந்தில்பாலாஜி
 69. அரவக்குறிச்சி – இளங்கோ
 70. வேடசந்தூர் – எஸ்.காந்திராஜன்
 71. நத்தம் – ஆண்டி அம்பலம்
 72. ஆத்தூர் – இ.பெரியசாமி
 73. ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி
 74. பழனி – ஐபி செந்தில்குமார்
 75. மடத்துக்குளம் – ஜெயராமகிருஷ்ணன்
 76. பொள்ளாச்சி – கே. வரதராஜன்
 77. கிணத்துக்கடவு – குறிச்சி பிரபாகரன்
 78. சிங்காநல்லூர் – கார்த்திக்
 79. தொண்டாமுத்தூர் – கார்த்திகேய சிவசேனாதிபதி
 80. கோவை வடக்கு – வ.ம.சண்முகசுந்தரம்
 81. கவுண்டம்பாளையம் – ஆர்.கிருஷ்ணன்
 82. திருப்பூர் தெற்கு – க.செல்வராஜ்
 83. மேட்டுப்பாளையம் – டி.ஆர்.சண்முகசுந்தரம்
 84. கூடலூர் – எஸ்.காசிலிங்கம்
 85. குன்னுர் – கா.ராமசந்திரன்
 86. கோபிச்செட்டிபாளையம் – மணிமாறன்
 87. அந்தியூர் – எ.ஜி.வெங்கடாசலம்
 88. பவானி – கே.பி.துரைராஜ்
 89. காங்கேயம் – சாமிநாதன்
 90. தாராபுரம் – கயல்விழி செல்வராஜ்
 91. மொடக்குறிச்சி – சுப்புலட்சுமி ஜெகதீசன்
 92. ஈரோடு மேற்கு – சு.முத்துசாமி
 93. குமாரபாளையம் – எம்.வெங்கடாசலம்
 94. பரமத்திவேலூர் – கே.எஸ் மூர்த்தி
 95. நாமக்கல் – பெ.ராமலிங்கம்
 96. சேந்தமங்கலம் – கே.பொன்னுசாமி
 97. ராசிபுரம் – மதிவேந்தன்
 98. வீரபாண்டி – தருண்
 99. சேலம் தெற்கு – சரவணன்
 100. சேலம் வடக்கு – இரா. ராஜேந்திரன்
 101. சேலம் மேற்கு – சேலத்தாம்பட்டி அ. ராஜேந்திரன்
 102. சங்ககிரி – ராஜேஸ்
 103. எடப்பாடி – சம்பத்குமார்
 104. மேட்டூர் – சீனிவாச பெருமாள்
 105. ஏற்காடு – தமிழ்செல்வன்
 106. ஆத்தூர் – ஜீவா ஸ்டாலின்
 107. கெங்கவல்லி – ரேகா பிரியதர்ஷினி
 108. சங்கராபுரம் – தா. உதயசூரியன்
 109. ரிஷிவந்தியம் – வசந்தம் கார்த்திகேயன்
 110. உளுந்தூர்பேட்டை – எ.ஜெ. மணிகண்ணன்
 111. திருக்கோவிலூர் – பொன்முடி
 112. விக்கிரவாண்டி – புகழேந்தி
 113. விழுப்புரம் – லட்சுமணன்
 114. திண்டிவனம் – சீத்தாபதி சொக்கலிங்கம்
 115. மயிலம் – மாசிலாமணி
 116. செஞ்சி – மஸ்தான்
 117. வந்தவாசி – எஸ்.அம்பேத்குமார்
 118. செய்யார் – ஓ.ஜோதி
 119. ஆரணி – எஸ்எஸ் அன்பழகன்
 120. போளூர் – சேகரன்
 121. கலசப்பக்கம் – சரவணன்
 122. கீழ்பென்னாத்தூர் – பிச்சாண்டி
 123. திருவண்ணாமலை – எவ வேலு
 124. செங்கம் – மு.பெ.கிரி
 125. பாப்பிரெட்டிபட்டி – பிரபு ராஜகுமார்.
 126. தருமபுரி – தடங்கம் பெ. சுப்பிரமணி
 127. பென்னாகரம் – இன்பசேகரன்
 128. பாலக்கோடு – முருகன்
 129. ஓசூர் – ஒய்.பிரகாஷ்
 130. வேப்பனஹள்ளி – முருகன்
 131. கிருஷ்ணகிரி – செங்குட்டுவன்
 132. பர்கூர் – மதியழகன்
 133. திருப்பத்தூர் – நல்லதம்பி
 134. ஜோலார்பேட்டை – தேவராஜு
 135. ஆம்பூர் – வில்வநாதன்
 136. குடியாத்தம் – அமலு
 137. கீழ் வைத்தியநாதன் குப்பம் – கே. சீத்தாராமன்
 138. அணைக்கட்டு – நந்தகுமார்
 139. வேலூர் – கார்த்திகேயன்
 140. ஆற்காடு – ஜே. எல். ஈஸ்வரப்பன்
 141. ராணிப்பேட்டை – காந்தி
 142. காட்பாடி – துரைமுருகன்
 143. காஞ்சிபுரம் – சி.வி.எம்.பி. எழிலரசன்
 144. உத்தரமேரூர் – சுந்தர்
 145. செங்கல்பட்டு – வரலட்சுமி மதுசூதனன்
 146. தாம்பரம் – எஸ்.ஆர்.ராஜா
 147. பல்லாவரம் – இ. கருணாநிதி
 148. ஆலந்தூர் – தா. மோ. அன்பரசன்
 149. சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ்
 150. ஆவடி – சா.மு.நாசர்
 151. பூவிருந்தவல்லி – ஆ. கிருஷ்ணசாமி
 152. திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன்
 153. திருத்தணி – எஸ். சந்திரன்
 154. கும்மிடிப்பூண்டி – டி.ஜெ. கோவிந்தராஜன்
 155. திருவொற்றியூர் – கே.பி.சங்கர்
 156. மாதவரம் – சுதர்சனம்
 157. அம்பத்தூர் – ஜோசப் சாமுவேல்
 158. மதுரவாயல் – காரப்பாக்கம் கணபதி
 159. மயிலாப்பூர் – த.வேலு
 160. தி.நகர் – ஜெ. கருணாநிதி
 161. சைதாப்பேட்டை – மா.சுப்ரமணியம்
 162. விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா
 163. அண்ணா நகர் – மோகன்
 164. ஆயிரம் விளக்கு – நா. எழிலன்
 165. சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின்
 166. துறைமுகம் – பி.கே. சேகர்பாபு
 167. ராயபுரம் – ஐட்ரீம் இரா. மூர்த்தி
 168. எழும்பூர் – பரந்தாமன்
 169. திருவிக நகர் – தாயகம் கவி
 170. வில்லிவாக்கம் – வெற்றியழகன்
 171. பெரம்பூர் – ஆர்.டி.சேகர்
 172. ஆர்.கே.நகர் – ஜே.ஜே.எபிநேசர்
 173. கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்.

Here is complete details on #DMKCandidateList

More Articles
Follows