FANTASTIC REPORT.. FANTASTIC RECORD FOR FIR..; வியப்பில் விஷ்ணு விஷால் & டீம்

FANTASTIC REPORT.. FANTASTIC RECORD FOR FIR..; வியப்பில் விஷ்ணு விஷால் & டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெளதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் இயக்கத்தில் உருவான படம் எஃப்ஐஆர்.

இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்திருந்தார்.

முக்கிய வேடத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா, ரெபோ மோனிகா, கௌரவ் நாராயணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் பிப்ரவரி 11ல் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியானது.

படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியான உள்ளனர்.

மேலும் படத்தின் வெற்றியின் மீது ஏற்கெனவே நம்பிக்கை இருந்தாலும் இந்தளவு பெரிய வெற்றியை பெறும் என நினைக்கவில்லை என வியப்பில் உள்ளதாம் படக்குழு.

சென்னையில் சில தியேட்டர்களில் நேரடி விசிட் அடித்தபோது மக்களின் மகிழ்ச்சியை நேரில் கண்ட படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

வாரத்தின் இறுதிநாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காட்சிகள் திரையரங்குகளில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Victory reports are pouring from everywhere for Vishnu Vishal’s FIR

கடைக்கோடி தமிழ் ரசிகனையும் கவர்ந்தார் ‘கடைசி விவசாயி’

கடைக்கோடி தமிழ் ரசிகனையும் கவர்ந்தார் ‘கடைசி விவசாயி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட தரமான படங்களுக்குப் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 11ல் வெளியான படம் “கடைசி விவசாயி”.

இந்த படத்தில் நல்லாண்டி, விஜய்சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

முதன்மை கேரக்டரில் நடித்த நல்லாண்டி கொரோனா காலத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த விதமான கமர்ஷியல் மசாலாக்களை இணைக்காமல் ஒரு யதார்த்தமாக அதே சமயம் ஆவணப் படம் போல் இல்லாமல் ஒரு விவசாயியின் உன்னதமான வாழ்க்கையை பதிவு செய்திருந்தார் மணிகண்டன்.

படத்தின் ரீலீசுக்கு முன்பே பிரஷ் ஷோ போடப்பட்டதால் செய்தியாளர்கள் பத்திரிகையாளர்கள் இப்பட விமர்சனங்களை பதிவிட்டனர்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது.

எனவே படம் வெளியானது முதலே திரையரங்குகளிலும் மக்கள் மனதிலும் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. மனநிறைவான படம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருபவர்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஆக கடைக்கோடி தமிழ் ரசிகனையும் இந்த கடைசி விவசாயி கவர்ந்து விட்டார்.

Kadaisi Vivasaayee gets good response from critics as well as public

வலிமை-யை அஜித்துக்கு திரையிட்டாரா வினோத்.? வைரலாகும் தகவல்

வலிமை-யை அஜித்துக்கு திரையிட்டாரா வினோத்.? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘வலிமை’ வருகிற பிப்ரவரி 24ல் உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

நேற்று வலிமை படத்தின் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட பதிப்புகளின் ட்ரெய்லர் வெளியானது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தை அஜித் நேரில் சென்று பார்த்ததாகவும் அப்போது எடுத்துக் கொண்ட போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அந்த படத்தின் பின்னணியில் ’வலிமை’ படம் பெரிய டிவி திரையில் ஓடுவது போல உள்ளது. அஜித்துடன் இயக்குனர் வினோத் அருகில் உள்ளார்.

ஆனால் ’வலிமை’ பட இறுதிகட்ட பணிகளையும் அஜித் நேரில் சென்று பார்த்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Did Ajith Kumar watch Valimai movie with his team?

தமிழக அரசு அறிவிப்பால் அஜித்-சூர்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழக அரசு அறிவிப்பால் அஜித்-சூர்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் கடந்த 2021ல் சில மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன.

பின்னர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதியளித்தது தமிழக அரசு.

இதனால் 2022 பொங்கலுக்கு ரிலீசாகவிருந்த அஜித்தின் வலிமை படம் தள்ளிப்போனது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழ்நாட்டில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் திரையுலகினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முக்கியமாக பெரிய பட்ஜெட் படங்கள் இந்த அறிவிப்பால் நல்ல லாபத்தை பெற வாய்ப்புள்ளது.

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் பிப்ரவரி 24ஆம் தேதியும் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற அறிவிப்பால் முதல் அதிர்ஷ்டம் அஜித் சூர்யா படங்களுக்கு கிடைத்துள்ளது எனலாம்.

100% occupancy allowed for theatres in Tamil Nadu

இளைஞர்களுக்காக ‘லெஜெண்ட்’ சரவணன் பட இயக்குனர்கள் ஜேடி-ஜெரியின் எழுதிய புத்தகம்

இளைஞர்களுக்காக ‘லெஜெண்ட்’ சரவணன் பட இயக்குனர்கள் ஜேடி-ஜெரியின் எழுதிய புத்தகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜேடி-ஜெரி என்று பிரபலமாக அறியப்படும் இயக்குநர் இரட்டையர்களான ஜோசப் டி சாமி மற்றும் ஜெரால்டு ஆரோக்கியம், உல்லாசம் மற்றும் விசில் ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தனர்.

தற்போது இவர்கள் பிரபல தொழிலதிபர் ‘லெஜெண்ட்’ சரவணன் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகின்றனர்.

விளம்பரப் படங்கள் இயக்குவதில் முன்னணியில் உள்ள ஜேடி-ஜெரி, பல தலைசிறந்த நிறுவனங்களின் விளம்பரங்களை வெற்றிகரமாக உருவாக்கி, விளம்பர உலகில் தனி முத்திரையை பதித்துள்ளனர்.

இத்துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இவர்களது அனுபவம் உதவ வேண்டும் எனும் நோக்கத்தோடு ‘விளம்பரப் படம்- வேற லெவல்’ எனும் புத்தகத்தை ஜேடி-ஜெரி எழுதியுள்ளனர்.

டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தார் இப்புத்தகத்தை வெளியிடுகின்றனர்.

“500-க்கும் மேற்பட்ட விளம்பரங்கள், கவிதை, சிறுகதை, தொலைக்காட்சித் தொடர்கள், டாக்குமெண்டரிகள், திரைப்படங்கள், அனிமேஷன் படங்கள், நிகழ்ச்சி மேலாண்மை என்று கடந்த 30 வருடங்களாக மீடியாவின் பல்வேறு துறைகளில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்,” என உற்சாகத்துடன் கூறுகின்றனர் ஜேடி-ஜெரி.

தங்களது புத்தகத்தை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இரட்டையர்….

“எங்களது 52 விளம்பர படங்கள் பற்றி, அவை உருவானவிதம், மற்றும் தொழில்நுட்பம் பற்றி இந்த புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறோம்.

முன்னுரையை கவிப்பேரரசு வைரமுத்து எழுத, எழுத்தாளர் பட்டுக்கோட்டைப் பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், மற்றும் லயோலா கல்லூரி ஊடகத்துறைத் தலைவர் சுரேஷ் பால் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். மீடியாவில் பயணிப்பவர்கள், மீடியா நோக்கி வரும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இது
மிகப்பயனுள்ள நூல் என்று அனைவரும் கருதுகின்றனர்,” என்றனர்.

அதோடு, வெற்றி பெற்ற தொழில் அதிபர்கள் பற்றியும், தங்களது நிறுவனத்தை விளம்பரபடுத்த விரும்பும் புதிய தொழில் முனைவோருக்கு, விளம்பரங்களின் வீச்சை பற்றியும், இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்துகிறது.

மேலும், புதுமையான முயற்சியாக, ஒவ்வொரு விளம்பரத்தைப் பற்றிய விளக்கத்தோடு அதன் கியூ ஆர் கோடும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கைபேசியில் அதை ஸ்கேன் செய்து உடனே அந்த விளம்பரத்தைப் பார்க்க முடியும்.

அந்த வகையில் தமிழ் விளம்பரத் துறை குறித்த புத்தகங்களில் முதல் முயற்சி இது என்றும் சொல்லலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெரியின் எழுதியுள்ள ‘விளம்பரப் படம்- வேற லெவல்’ புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும்.

Director duo JD-Jerry’s new creation: An innovative book on ad films

ஆர்யா & சக்திசௌந்தர் இணைந்த ‘கேப்டன்’ பட சூட்டிங் அப்டேட்

ஆர்யா & சக்திசௌந்தர் இணைந்த ‘கேப்டன்’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டெடி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர் தயாரிப்பாளர் சக்தி சௌந்தர் ராஜனும், ‘கேப்டன்’ என்ற அதிரடி சயின்ஸ்பிக்சன் திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்தை Think Studios நிறுவனம் நடிகர் ஆர்யாவின் The Show People உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் படப்பிடிப்பின் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்திருப்பதால், நடிகர் ஆர்யா நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

‘கேப்டன்’ படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், பரத் ராஜ் மற்றும் இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

D இமான் இசையமைக்கிறார், S.யுவா ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் கார்க்கி (பாடல் வரிகள்), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), R. சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), S.S. மூர்த்தி (கலை), மற்றும் V. அருண் ராஜ் (சிஜி) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

கேப்டன் திரைப்படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் எழுதி இயக்குகிறார். Think Studios நிறுவனம் நடிகர் ஆர்யாவின் The Show People உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

நடிகர் ஆர்யாவின் சமீபத்திய படங்களான சார்பட்டா பரம்பரை மற்றும் டெடி ஆகியவை இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றதால், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் ‘கேப்டன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.

Arya starrer Captain movie shoot wrapped up

More Articles
Follows