வீண்பழி சுமத்திய பிரித்திகா மீது அவதூறு வழக்கு தொடருவேன்… : தியாகராஜன்

வீண்பழி சுமத்திய பிரித்திகா மீது அவதூறு வழக்கு தொடருவேன்… : தியாகராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Thiagarajan clarifies about Prithika menons MeToo issue on himபிரபலங்கள் மீது சினிமா துறை சார்ந்த பெண்கள் பாலியல் புகார்களை தொடர்ந்து கூறிய வண்ணம் உள்ளனர்.

வைரமுத்து மீது சின்மயி புகார்களை கூறியதை தொடர்ந்து தற்போது நடிகர் தியாகராஜன் மீது புகைப்பட கலைஞரான பிரித்திகா மேனன் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது… பொன்னர் சங்கர் படத்தில் நான் புகைப்பட கலைஞராக பணியாற்றினேன் அப்போது எனக்கு 21 வயது இருக்கும்.

கோவை அருகே போர் காட்சிகளை எடுத்தார்கள். படப்பிடிப்பில் 200க்கும் மேற்பட்ட300 ஆண்கள் இருந்தார்கள். நானும் 3 பெண்களும் மட்டுமே இருந்தோம்.

சூட்டிங் சமயத்தின் போது தியாகராஜன் எனக்கு பல விதங்களில் பாலியல் தொல்லை கொடுத்தார்.

நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு நள்ளிரவில் வந்து கதவை தட்டுவார். என பிரித்திகா மேனன் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தியாகராஜன் கூறியதாவது…

நான் இயக்கி தயாரித்த கலைஞரின் பொன்னர் சங்கர் பட சூட்டிங்கின் சமயத்தில் இரவில் யாரோ அவரது அறை கதவை தட்டியதாகவும் அது நானாக இருக்கலாம் என்ற யூகத்தில் அவரது பேஸ் புக் அக்கவுண்டில் தவறான ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார் பிரத்திகா என்ற பெண்.

இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை.

என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளேன்.

அதோடு இது போன்ற பொய் குற்றச்சாட்டு கூறுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்.

விரைவில் பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அவர்கள் முன்னிலையில் பல உண்மைகள் வெளிவரும்.” இவ்வாறு தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Actor Thiagarajan clarifies about Prithika menons MeToo issue on him

காஸ்மிக் எனர்ஜி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் *சந்தோஷத்தில் கலவரம்*

காஸ்மிக் எனர்ஜி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் *சந்தோஷத்தில் கலவரம்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Kranthi Prasad talks about his upcoming release Santhoshathil Kalavaramமுற்றிலும் புதியவர்களின் முயற்சியில் உருவாகி நவம்பர் 2 -ல் வெளிவரும் படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’.

இப்படம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது…

” எனக்கு சினிமா மீது அவ்வளவு காதல். எவ்வளவோ வேலை வாய்ப்பு வருமானம் எல்லாவற்றையும் இழந்து விட்டு துறந்து விட்டுத்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன்.

இப்படத்தைப் பல போராட்டங்களைச் சந்தித்துதான் எடுத்தேன். ஆனால் படம் எடுத்ததை விட வெளியிடுவதையே மிகவும் சிரமமாக உணர்ந்தேன். கடைசியில் நானே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். வெளியிடுகிறேன்.

நவம்பர் 2 -ல் உலகம் முழுதும் வெளியாகிறது. இந்தப் படம் காதல், நட்பு, நகைச்சுவை. ஆக்ஷன், ஹாரர், த்ரில்லர் என்று எல்லாமும் கலந்த ஒன்றாக இருக்கும்.

இந்த உலகம் இரு வேறு சக்திகளால் இணைந்தது. பாசிடிவ் சக்திக்கும் நெகடிவ் சக்திக்கும் இடையே தினமும் போர் நடக்கிறது. இது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொருவருக்குள்ளும் நடைபெறுகிறது.

இங்கே யாருக்கும் காஸ்மிக் எனர்ஜி பற்றித் தெரிவதில்லை. படித்தவர் கூட அறியவில்லை. அதன் அற்புதங்கள் எப்படி வெளியே தெரியும்? நான் காஸ்மிக் சக்தி பற்றிப் படத்தில் கூறியிருக்கிறேன்.

இந்த உலகில் உள்ள பாசிடிவ் எனர்ஜியையும் காஸ்மிக் எனர்ஜியையும் சேர்த்தால் பெரிய அற்புதம் நிகழும். எவ்வளவோ படித்தாலும் காஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அதைப் பற்றிப் படத்தில் கூறியிருக்கிறேன். ” இவ்வாறு இயக்குநர் கிராந்தி பிரசாத் கூறுகிறார்.

Director Kranthi Prasad talks about his upcoming release Santhoshathil Kalavaram

Santhoshathil Kalavaram

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாகும் *கரிமுகன்* ரிலீஸ் தகவல்

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ஹீரோவாகும் *கரிமுகன்* ரிலீஸ் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Singer Senthil Ganesh starrer Karimugan release on 26th Oct 2018விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர்.

இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்கு பிறகு இந்த பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது.

யூடியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளனர்.

உலகம் முழுதும் பிரபலமான இந்த குழு “கரிமுகன்“ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள்.

செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். காயத்ரி என்ற கேரளா பெண் நாயகியாக நடிக்கிறார்.

மற்றும் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா. கா. செந்தில் இவர்களுடன் இயக்குனர் செல்ல தங்கையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஏ விமல் புரொடக்சன்ஸ் சார்பாக T. சித்திரைச்செல்வி, M. செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் எஸ். கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்..

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் செல்ல தங்கையா. படம் பற்றி இயக்குனர் கூறியதாவது. .

கரிமுகன் படத்திற்காக திருக்கோளக்குடி என்ற கிராமத்தில் உள்ள பெரிய மலையில் ஒரு காதல் காட்சிக்காண படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருத்போது அமைதியான அந்த காட்டுப்பகுதியில் திடீரென்று ஸ்பீக்கர் சத்தம், நாங்கள் மைக்கில் பேசிய சத்தம் கேட்டு தேனீக்கள் படக்குழுவினரை துரத்தி துரத்தி கொட்ட ஆரம்பித்து விட்டது.

தேனீக்கள் கொட்டியதால் நான் உட்பட 15 பேர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டனர். உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவர்களை அருகில் இருந்த மருத்துவ மனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்துவிட்டு.

மறுநாள் பக்கத்தில் இருந்த வேறொரு மலையில் படிப்பிடிப்பை முடித்தோம்.
படம் இம்மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளது என்றார் இயக்குனர்.

ஒளிப்பதிவு – எழில் பூஜித்
எடிட்டிங் – பன்னீர் செல்வம், கேசவன்.
கலை – நித்தியானந்த்
நடனம் – சங்கர் R.
ஸ்டண்ட் – திரில்லர் முருகன்
தயாரிப்பு நிர்வாகம் – சுப்ரமணியம்

Super Singer Senthil Ganesh starrer Karimugan release on 26th Oct 2018

திலீப்பின் ராஜினாமாவை ஏற்றார் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால்

திலீப்பின் ராஜினாமாவை ஏற்றார் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dileep Removed From Malayalam Film Body Says Chief Mohanlalகேரளாவில் மலையாள நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணையில் முன்னணி நடிகரான திலீப்பை கேரள போலீசார் கைது செய்தனர்.

இதனால் சில நாட்கள் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

திலீப் கைது செய்யப்பட்டதும் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நீக்கப்பட்டார்.

அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவால் பின்னர் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

எனவே அவருக்கு பதிலாக மோகன்லால் பதவியேற்றார்.

இதனையடுத்து நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்தார் மோகன்லால்.

மோகன்லாலின் இந்த முடிவுக்கு நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் நடிகைகள் ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட சிலர் தங்கள் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

நடிகைகளின் எதிர்ப்பு வலுத்து வருவதால் நடிகர் சங்கத்தில் இருந்து தானே விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்.

இதனை மோகன்லாலும் ஏற்றுக் கொண்டார்.

Dileep Removed From Malayalam Film Body Says Chief Mohanlal

கௌதம்-சூரி இணையும் படத்தை விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்

கௌதம்-சூரி இணையும் படத்தை விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Karthik joins with Soori in Arun Chandran directionதனஞ்செயன் தயாரித்த `மிஸ்டர். சந்திரமௌலி’ படத்திற்கு பிறகு முத்தையா இயக்கும் `தேவராட்டம்’ படத்தில் நடித்து வருகிறார் கௌதம் கார்த்திக்.

இதில் நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

இதனையடுத்து கௌதம் கார்த்திக் நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒயிட்லைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அன்பு தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்க, முக்கிய வேடத்தில் சூரியும் நடிக்கிறார்.

இந்த படத்தை நடிகர் விஜய்சேதுபதி துவக்கி வைத்துள்ளார்.

Gautham Karthik joins with Soori in Arun Chandran direction

அஜித்துக்கு பாட்டு எழுத ஆசைப்படும் தமிழ்நாட்டின் முதல் பெண் ஆட்டோ டிரைவர்

அஜித்துக்கு பாட்டு எழுத ஆசைப்படும் தமிழ்நாட்டின் முதல் பெண் ஆட்டோ டிரைவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

female auto driverபுதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வருகிறார் அஜித்தின் தீவிர ரசிகையான சரோஜா.

அடிக்கடி கவிதைகள் எழுதும் இவர் தான் தமிழ்நாட்டோட முதல் பெண் ஆட்டோ டிரைவராம்.

இவர் அஜித்துக்கு பாட்டெழுத ஆசைப்படும் அனுபவத்தை கூறியுள்ளார்.

’’எனக்கு தல அஜித்தை ரொம்ப பிடிக்கும். அவரைப் பத்தி கவிதைப் புத்தகம் எழுதிட்டிருக்கேன்.

இதை அவர்கிட்ட கொடுக்கணும்.

அப்புறம்… தல அஜித்தோட படத்துல ஓபனிங் ஸாங் எழுத ஆசை.

இந்த ஆசை நிறைவேறினா போதும்”என்கிறார்.

இதுக்காக, புதுக்கோட்டைலேருந்து சென்னைக்கு ஆட்டோவிலேயே வரவும் இவர் ஆசைப்படுகிறார் என்பது கூடுதல் தகவல்.

More Articles
Follows