ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஈரோட்டில் நடக்கிறது…

ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஈரோட்டில் நடக்கிறது…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலுடன் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படம் பி.டி. சார்.

இப்படத்தின் தலைப்பு நேற்று அதன் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.

அன்பறிவு படத்தில் ஆதியுடன் பணியாற்றிய காஷ்மீர் பர்தேஷி கதாநாயகியாக நடிக்க, மூத்த நடிகர்கள் பிரபு, பாண்டியராஜன், தியாகராஜன் ஆகியோர் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளனர்.

இந்த திட்டம் குறித்து CT யிடம் பேசிய இயக்குனர் கார்த்திக், “போஸ்டர் குறிப்பிடுவது போல, ஆதி படத்தில் PT ஆசிரியராக நடிக்கிறார், அது ஒரு சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நகரக் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் வெளியிட்டோம்.

இப்படம் கமர்ஷியல் என்டர்டெய்னராக இருந்தாலும், அதில் ஒரு சக்திவாய்ந்த செய்தி இருக்கும் இரண்டாம் பாதி, தாக்கத்தை உருவாக்கும்.”

இந்த ஃபேமிலி என்டர்டெயினரின் முக்கிய பகுதிகள் ஈரோட்டில் படமாக்கவுள்ளோம்.

பிப்ரவரியில் ஈரோடு சென்று சில முக்கிய காட்சிகளை படமாக்கப்படும் என்று கார்த்திக் கூறுகிறார்.

பி.டி. சார்

Hiphop Adi’s next film shooting in Erode

இயக்குனர் வெங்கட் பிரபு படத்தில் இணைந்தார் நடிகர் ராம்கி..!

இயக்குனர் வெங்கட் பிரபு படத்தில் இணைந்தார் நடிகர் ராம்கி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படம் ‘கஸ்டடி’.

இப்படத்தில் நாக சைதன்யாவின் காதலியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ள நிலையில், அரவிந்த் சாமி வில்லனாகவும்,ப்ரியாமணி, சம்பத் ராஜ், சரத்குமார், பிரேம்கி, வெண்ணிலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைத்துள்ளனர்.

நவம்பர் 23-ம் தேதி நாக சைதன்யாவின் பிறந்தநாளன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிட்டது படக்குழு.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ராம்கியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ‘கஸ்டடி’ படத்தை மே 12, 2023 அன்று திரைக்கு வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

கஸ்டடி

Actor Ramki joins director Venkat Prabhu’s ‘Custody’

துணிவை கொண்டாட மஞ்சு வாரியாரை அழைத்த அஜித் & வினோத்

துணிவை கொண்டாட மஞ்சு வாரியாரை அழைத்த அஜித் & வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் ‘துணிவு’ திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் ‘அசுரன்’ படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார்.

இதன் பிறகு அவர் பேசுகையில்…

‘ முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். அதிரடி வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பயிற்சி அவசியம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி.

கேரளாவில் இந்த படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன்.” என்றார்.

இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரம், வலிமையான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதற்காக நடிகை மஞ்சு வாரியார் தன் உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பெரும் வெற்றியை பெற்றதால் இதனை பகிர்ந்து கொள்ள நாயகன் அஜித் குமார், இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் பட குழுவினர் மஞ்சுவாரியருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

அத்துடன் ‘துணிவு’ படத்திற்கு அபிரிமிதமான ஆதரவை வாங்கியதற்காக‌ கேரள பார்வையாளர்களுக்கு படக்குழுவினர் தங்களுடைய மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு நடிகை மஞ்சு வாரியர் சென்னைக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அதே நாளில் அவரது நடிப்பில் தயாரான ‘ஆயிஷா’ எனும் திரைப்படம் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் ‘துணிவு: திரைப்படத்தின் கண்மணி எனும் கதாபாத்திரத்திற்கு நேர் மாறாக ‘ஆயிஷா’ எனும் குணச்சித்திர வேடத்தில் மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.

இதனிடையே பரதநாட்டிய கலைஞரான மஞ்சு வாரியர், ஜனவரி மாதம் இருபதாம் தேதி சென்னையில் நடைபெறும் சூர்ய விழாவில் அவருடைய அண்மைய தயாரிப்பான ‘ராதே ஷ்யாம்’ எனும் நாட்டிய நாடகத்தை நிகழ்த்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith & Vinoth invited Manju warrier to celebrate Thunivu success

5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் – திமுகவுக்கு விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை.?!; ரவி இது தமிழ்நாடு.; ஆளுநருக்கு அஜித் ரசிகர்கள் எச்சரிக்கை.?!

5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் – திமுகவுக்கு விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை.?!; ரவி இது தமிழ்நாடு.; ஆளுநருக்கு அஜித் ரசிகர்கள் எச்சரிக்கை.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று முன்தினம் ஜனவரி 11ஆம் தேதி அஜித் நடிப்பில் உருவான ”துணிவு’ படம் வெளியானது.

இந்த படத்தில் மத்திய அரசை சேர்ந்த (கமாண்டோ) ஊழியர் ரவீந்தர் என்ற கேரக்டரில் ஒருவர் நடித்திருப்பார்.

அப்போது தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் கமிஷனர் சமுத்திரக்கனி.. ‘ரவீந்தரிடம் உன் வேலையை இங்கு காட்டாதே என்பார்.

இந்த வசனம் தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பெயருடன் இருப்பதால் இதை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

இதே போல விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் விஜய் பேசும் ஒரு வசனம்.. “5 நிமிடத்தில் உங்க ஆட்சியே மாறும்” என்பார்.

இந்த வசனம் ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ளதாக விஜய் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன் அரசியல் ‘வாரிசு’ உதயநிதி மற்றும் சினிமா ‘வாரிசு’ விஜய் ஆகியோரிடையே ‘துணிவு’ பட விநியோகத்தில் மோதல் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட இந்த இரண்டு பட வசனங்களும் இணையதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

Vijay fans against DMK and Ajith fans against Governor

அமைச்சர் உதயநிதிக்காக தாத்தா கலைஞரின் திருவாரூர் வீடு சென்னை வந்தது

அமைச்சர் உதயநிதிக்காக தாத்தா கலைஞரின் திருவாரூர் வீடு சென்னை வந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனராக வலம் வரும் G துரைராஜ், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட பொங்கல் விழாவிற்காக, கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீட்டை அச்சு அசலாக சென்னையில் அமைத்துள்ளார்.

சட்ட மன்ற உறுப்பினர் வேலு அவர்கள் ஏற்பாட்டில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் பங்குகொண்ட பொங்கல் விழா குருபுரம் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.

இவ்விழாவிற்காக தான் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீட்டை சென்னையில் அமைத்துள்ளார் கலை இயக்குநர் G துரைராஜ். அச்சு அசலாக நிஜ வீட்டை போலவே அமைந்திருக்கும் இந்த வீட்டினை, பொதுமக்கள் ஆவலுடன் பார்வையிட்டனர். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் வீட்டினை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து கலை இயக்குநர் G துரைராஜ் கூறியதாவது…
நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறேன், ஆனாலும் ஒரு பொது விழாவிற்கு செட் அமைப்பது இதுவே முதல் முறை.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று கலந்துகொள்ளும் முதல் பொங்கல் விழா, அதற்காக செட் அமைக்க சொன்னபோது, கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அப்படித்தான் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீடு ஐடியா வந்தது.

உதயநிதி ஸ்டாலின் அவரது தாத்தாவின் இல்லத்தில் நின்று, பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்த வீட்டை உருவாக்கினோம்.

இதற்காக திருவாரூர் சென்று மாதிரி வரை படங்களை தயார் செய்து , கலைஞர் வாழ்ந்த வீட்டை அப்படியே இங்கு உருவாக்கினோம். பொதுமக்கள் கூட்டமாக வந்து, ஆவலுடன் பார்வையிட்டது மிகுந்த மகிழ்ச்சி தந்தது.

உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தனியே பாராட்டியது பெரிய ஊக்கம் தந்தது என்றார்.

கொடி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, ஐங்கரன் முதலாக பல்வேறு தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியவர் கலை இயக்குநர் G துரைராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Kalaignar house set in Chennai for Udhayanidhi

குடிநீரில் மலம்.; பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் காவல் துறை.; இயக்குநர் ரஞ்சித் கண்டனம்

குடிநீரில் மலம்.; பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் காவல் துறை.; இயக்குநர் ரஞ்சித் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான இயக்குனர் என்றால் பா ரஞ்சித்.

இவரின் படங்களில் சாதி சார்ந்த புரட்சிகரமான கருத்துக்கள் இடம்பெற்று இருக்கும்.

தற்போது ஒரு தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தபிழக காவல் துறையை கண்டித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில்…

தொடரூம் சமூக அநீதி!.. புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்.

கூடுதல் தகவல்…

புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

police officers intimidation to victims in vegaivayal peoples pa ranjith

More Articles
Follows