தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2018ல் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அந்தாதுன்’.
ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடித்திருந்தனர்.
சூப்பர் ஹிட்டான இப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
மலையாளத்தில் இந்த படம் ரீமேக் செய்யப்படுகிறது.
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இப்படத்தை இயக்க பிருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார். ராதிகா ஆப்தே கேரக்டரில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.
தெலுங்கு ரீமேக்கில் நிதின், தமன்னா நடிக்கின்றனர்.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கியுள்ள நிலையில் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
‘அந்தகன்’ என்று இப்படத்திற்கு தமிழில் தலைப்பு வைத்துள்ளனர்.
டாப் ஸ்டார் பிரசாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்க, முக்கிய கேரக்டரில் கார்த்திக் நடிக்கிறார்.
இசையமைப்பாளர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குனர் ஜெ.ஜெ.பெஃட்ரிக் இயக்கவிருந்தார்.
ஆனால் தற்போது இப்படத்திலிருந்து விலகிவிட்டார் இயக்குனர்.
தற்போது ‘அந்தகன்’ பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கவிருக்கிறார்.
படத்தில் பணிபுரியவுள்ள மற்ற கலைஞர்கள் விவரம் இதோ…
பிரசாந்த்
சிம்ரன்
கார்த்திக்
யோகி பாபு
ஊர்வசி
கே.எஸ்.ரவிக்குமார்
மனோபாலா
வனிதா விஜயகுமார்
லீனா சாம்சன்
செம்மலர்
பூவையார்
மற்றும் பலர்
ஒளிப்பதிவு
ரவியாதவ் DFT
கலை: செந்தில் ராகவன்
உடைகள்
உத்ரா மேனன்
பத்திரிக்கை தொடர்பு
நிகில் முருகன்
Thiagarajan returns to direction with Prashanth’s Andhagan