நடிகர் சௌந்தரராஜா-தமன்னா திருமண நிச்சயத்தார்த்தம்

நடிகர் சௌந்தரராஜா-தமன்னா திருமண நிச்சயத்தார்த்தம்

actor Soundararaja engagement with Tamannaசுந்தரபாண்டியன்’ படம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா.

இதனையடுத்து `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, `ஜிகர்தண்டா’, `எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, `தங்கரதம்’, `தர்மதுரை’, `ஒரு கனவு போல’, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமா தவிர பல சமூக சேவைகளிலும் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்“ நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் தமன்னாவுக்கும் – சவுந்தர்ராஜாவுக்கும் திருமணம் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றுள்ளது.

வருகிற மே மாதம் மதுரையில் திருமணம் நடைபெற உள்ளது.

actor Soundararaja engagement with Tamanna

soundararaja-amp-tamanna-engagement-

நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கடுமையாக கண்டித்த சூர்யா

நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கடுமையாக கண்டித்த சூர்யா

suriyaசினிமாவைத் தாண்டியும் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்றவர் சூர்யா.

பொது இடங்களிலும் அமைதியான அனுகுமுறையை இவர் கடைப்பிடிப்பவர்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக ஆந்திரா சென்றிருந்த இவர் அங்குள்ள ரசிகர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்ட வீடியோ இணையங்களில் வைராகியுள்ளது.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து நள்ளிரவு சூர்யா காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

இதனையறிந்த ரசிகர்கள் அவரை படு வேகத்தில் பைக்கில் தொடர்ந்து சென்றுள்ளனர்.

எனவே அங்கு தன் காரை நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளார். இப்படி படு வேகமாக வண்டி ஓட்டினால் என்னாவது? வேகம் ஆபத்து என பேசியுள்ளார்.

இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

ஞானவேல்ராஜா-சிவகார்த்திகேயன்-விக்னேஷ் சிவன் புதிய கூட்டணி

ஞானவேல்ராஜா-சிவகார்த்திகேயன்-விக்னேஷ் சிவன் புதிய கூட்டணி

Producer Gnanavel Rajaவேலைக்காரன் படத்தை முடித்துவிட்டு பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகயேன்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தையும் அவரின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஏஆர். ரஹ்மானுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் இந்த படங்களை முடித்துவிட்டு ஸ்டூடீயோ கிரீன் தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்.

இனி வருடத்திற்கு இரண்டு படங்களை கொடுப்பேன் என சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்டிவி ஆபிஸ் முன்பு ரசிகர்கள் ஆர்பாட்டம்; சூர்யா அட்வைஸ்

சன்டிவி ஆபிஸ் முன்பு ரசிகர்கள் ஆர்பாட்டம்; சூர்யா அட்வைஸ்

suriya artசெல்வராகவன் படத்தை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இப்படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை அறிந்த சன் மியூசிக் தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து பேசியிருந்தனர்.

இதனையடுத்து அந்த தொகுப்பாளினிகளை ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், சூர்யாவை கிண்டலடிக்கும் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி அலுவலகம் முன்பு இன்று சூர்யா ரசிகர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் #AskSorrySuntv #BANFrankaSollata @SuriyaFansClub உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்டாக்கினர்.

இதனையறிந்த சூர்யா தன் ட்விட்டரில் பக்கத்தில் தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இதோ அந்த பதிவு…

Suriya Sivakumar‏Verified account @Suriya_offl
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. #AnbaanaFans

Suriya fans protest in front of Sun TV office to ban Franka sollata show

விஜய் 63 படத்தை இயக்கும் தீரன் பட இயக்குனர் வினோத்

விஜய் 63 படத்தை இயக்கும் தீரன் பட இயக்குனர் வினோத்

Vijay and vinothசதுரங்க வேட்டை என்ற மாபெரும் வெற்றி படத்தை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார் வினோத்.

கார்த்தி நடித்த இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இப்படம் கடந்த 2017ல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை பார்த்த நடிகர் விஜய், இயக்குனரை அழைத்து பாராட்டினாராம். மேலும் தனக்கான ஒரு கதையை உருவாக்க சொல்லியிருந்தாராம்.

இதனையடுத்து விரைவில் விஜய் 63 படத்தை வினோத் இயக்குவார் என கூறப்படுகிறது.

மீண்டும் இணையும் கார்த்தி-ரகுல் பிரித்திசிங்; இசை ஹாரிஸ் ஜெயராஜ்

மீண்டும் இணையும் கார்த்தி-ரகுல் பிரித்திசிங்; இசை ஹாரிஸ் ஜெயராஜ்

Harris jayarajபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரிக்கும் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இப்படத்தை அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்த ஜோடி ஏற்கெனவே தீரன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ரஜத் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவிருக்கிறார்.

இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் கார்த்தி படத்திற்கு இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்.

More Articles
Follows