சினிமா பார்க்கும் போதே விமர்சனம் செய்பவர்களுக்கு சித்தார்த் நெத்தியடி

சினிமா பார்க்கும் போதே விமர்சனம் செய்பவர்களுக்கு சித்தார்த் நெத்தியடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siddharthஜனநாயக நாட்டில் எல்லாருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது.

அது சினிமா ஆனாலும், அரசியல் ஆனாலும் அனைவரும் அதை விமர்சனம் செய்ய தகுதியானவர்களே.

தற்போது வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சாதனங்கள் நம் செல்போனிலே இருப்பதால் நொடிக்கும் நொடி, தாம் பார்க்கும் விஷயங்களை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதிலும் சினிமா தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே படத்தின் காட்சிகளை விவரித்து, சூப்பர், மொக்கை என்றெல்லாம் விமர்சனம் செய்கின்றனர்.

இன்று வெளியாகியுள்ள இருமுகன் படத்தை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து நடிகர் சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது…

“படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ட்வீட் செய்தால், படத்தை முழுமையாக பார்ப்பதற்கு என்றே தனி மூளை வேண்டும்.

உங்களுக்கு படம் பிடித்திருந்தால் பாராட்டுங்கள். பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள்.
படத்தை பார்க்காதீர்கள் என்று சொல்லாதீர்கள்” என காரசாரமாக பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டுக்கள் இங்கே…
actor siddharth tweet about movie critics

சிம்புவுடன் இணைந்த அனிருத்; இது ‘ரம்’ கூட்டணி

சிம்புவுடன் இணைந்த அனிருத்; இது ‘ரம்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu anirudhஇன்றைய இளைஞர்களின் ஹாட் நாயகர்களான சிம்பு மற்றும் அனிருத் முதன்முறையாக ஒரு படத்திற்காக இணைந்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் ரம்.

இப்படத்தில் உள்ள ‘பேயோ போபிலியா’ என்ற பாடலை சிம்பு பாட, பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

பேய்களுக்கு நாம் பயப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை மையமாக கொண்டு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

பேய்களை விட நாம் வாழுகின்ற இந்த உலகம் அதி பயங்கரமானது என்கிற கருத்தை இந்த பாடல் வலியுறுத்தும் என்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி இருக்கும் படம்தான் இது.

இதில் ஹ்ரி ஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நயன்தாரா கேரக்டரை இப்போ சொல்ல மாட்டாங்களாம்..!

நயன்தாரா கேரக்டரை இப்போ சொல்ல மாட்டாங்களாம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaஅருள்நிதி நடிப்பில் பெரும் ஹிட்டடித்த படம் டிமான்ட்டி காலனி.

இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து, அதர்வா மற்றும் நயன்தாரா இணையும் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கவிருக்கிறார்.

ஆனால் இவர்கள் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நயன்தாராவின் கேரக்டர் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதுகுறித்து இயக்குனர் கூறியுள்ளதாவது…

“போலீஸ் வேடத்தில் நயன்தாரா நடிப்பதாக வரும் செய்திகள் உண்மையில்லை. ஆனால் அவர் கேரக்டர் படு சஸ்பென்ஸ்” என தெரிவித்துள்ளார்.

‘இருமுகன்’ ரீலீஸ் ஆகாததால் வருந்தும் ரசிகர்கள்

‘இருமுகன்’ ரீலீஸ் ஆகாததால் வருந்தும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iru mugan love vikramவிக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இருமுகன் படத்தை ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

விக்ரம் இரு வேடம் ஏற்றுள்ள நிலையில் ஒன்றில் திருநங்கையாக நடித்துள்ளார்.

இது சயின்ஸ் கலந்த மெடிக்கல் சப்ஜெக்ட் படம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் 450 க்கும் மேற்பட்ட அரங்குகளில் இருமுகன் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் 95 அரங்குகளிலும், பிரிட்டன், வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கையிலும் இப்படம் வெளியாகியுள்ளது.

ஆனால், காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அங்கு மட்டும் இப்படம் வெளியாகவில்லை.

இந்த பிரச்சினை ஓய்ந்த பிறகு இருமுகனை கர்நாடகாவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதனால் அங்குள்ள விக்ரம் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

‘பைரவா’ நிலைமை என்ன.? எங்கே இருக்கிறார்.?

‘பைரவா’ நிலைமை என்ன.? எங்கே இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa vijayபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் பைரவா.

தற்போது இதன் படப்பிடிப்புக்காக ஆந்திரா மாநிலத்திலுள்ள ராஜமுந்திரியில் முகாமிட்டுள்ளனர்.

அங்கு தயாராகவுள்ள செட்டில் தொடர்ந்து 3 வாரங்களுக்கு படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம்.

அங்குதான் க்ளைமாக்ஸ் காட்சி மற்றும் ஆவேசமான வசன காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.

இதனைத் தொடர்ந்து இம்மாத இறுதிக்குள் ஒட்டு மொத்த சூட்டிங்கையும் முடித்துவிடுவார்கள் என கூறப்படுகிறது

‘நீங்கதான் உண்மையான நண்பன்; நலம் விரும்பி…’ – தனுஷ்

‘நீங்கதான் உண்மையான நண்பன்; நலம் விரும்பி…’ – தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushஇதுநாள் வரை நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என அறியப்பட்ட தனுஷ், ஓரிரு தினங்களாக இயக்குனாராகவும் அறியப்பட்டு வருகிறார்.

ராஜ்கிரண், பிரசன்னா உள்ளிட்டோர் நடிக்கும் பவர் பாண்டி என்ற படத்தை இயக்குகிறார்.

இதற்காக பலரும் தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வாழ்த்தும்போது…

உங்கள் பெயரை எழுத்து இயக்கம் என்று பார்ப்பதில் சந்தோஷம் அடைகிறேன். கலக்குங்க சார். என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்து தனுஷ் கூறியுள்ளதாவது….

“நன்றி பாலாஜி. நீங்கள்தான் என் உண்மையான நண்பன். நலம் விரும்பி.” என குறிப்பிட்டுள்ளார்.

More Articles
Follows