ராம்நாடு மக்களின் வாழ்க்கை.. விட்டுக் கொடுக்காத நடிப்பு – ஆனந்தி

ராம்நாடு மக்களின் வாழ்க்கை.. விட்டுக் கொடுக்காத நடிப்பு – ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி, சஞ்சய், இளவரசு, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘இராவணக் கோட்டம்’.

ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருக்கிறார்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் பேசியதாவது..

மதயானைக் கூட்டம் ஒரு அற்புதமான படைப்பு , இயக்குநர் விக்ரம் சுகுமாரன் சாருடன் இணைந்து பணி செய்தது மிகவும் மகிழ்ச்சி, பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், ஷாந்தனு மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் வேலை செய்துள்ளார் கண்டிப்பாக அது அனைவரிடமும் சேரும், தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

நடிகை கயல் ஆனந்தி பேசியதாவது….

3 வருட உழைப்பு. பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இப்போது வெளியாகத் தயாராகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, யாரும் விட்டுக் கொடுக்காமல் இந்தப் படத்திற்கு உழைத்துள்ளோம்.

விக்ரம் சுகுமாரன் சார் சினிமாவை மிகவும் ரசித்து வேலை செய்பவர், அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஷாந்தனு உடன் இணைந்து நடித்தது மிகவும் சுலபமாக இருந்தது.

இந்தப் படம் ராம்நாடு மக்களின் வாழ்க்கை பற்றிப் பேசுவதாக இருக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் நன்றி.

anandhi speech at Raavana Kottam press meet

வெற்றிக்காக ஷாந்தனு போராடிக் கொண்டிருக்கிறார் – இளவரசு

வெற்றிக்காக ஷாந்தனு போராடிக் கொண்டிருக்கிறார் – இளவரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு கயல் ஆனந்தி சஞ்சய் இளவரசு தீபா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘இராவணக் கோட்டம்’.

ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருக்கிறார்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது நடிகர் இளவரசு பேசியதாவது..

இந்தப் படத்தின் கலை இயக்குநர் நர்மதாவிற்கு வாழ்த்துக்கள், விக்ரம் சுகுமாரனிடம் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராக பணி செய்வது மிகக் கடினம் இருவருக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள்.

இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்கு தெரியும், தென் பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.

அதற்கான காரணங்களையும் இந்த படத்தில் பேசியுள்ளனர், இயக்குநரை எனக்குப் பல வருடங்கள் முன்பே தெரியும். ஒரு படத்தின் வேலைக்காக மதுரைக்கு அருகில் ஒரு ஊருக்குச் சென்றேன், அப்போது ஒரு நாள் ஒருவர் வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடித்தேன் அது அவரது வீடுதான், பல நாட்கள் கழித்து அதை என்னிடம் சொன்னார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும், தயாரிப்பாளர் கண்ணன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி, இந்த குழுவினர் உழைப்பை, மக்களிடம் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி.

Shanthanu fighting for success says Actor Ilavarasu

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்க.. ஆண்கள் திருந்தனும் – தீபா

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்க.. ஆண்கள் திருந்தனும் – தீபா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு கயல் ஆனந்தி சஞ்சய் இளவரசு தீபா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘இராவணக் கோட்டம்’.

ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருக்கிறார்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது நடிகை தீபா பேசியதாவது..

இராவண கோட்டம் படத்தில் நடித்து வந்தது பள்ளிக் கூடத்திற்கு சென்று வந்தது போல இருந்தது, சுகுமார் சாரிடம் ஒரு நாள் நடித்தாலும் நடிப்பு என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளலாம்.

இளவரசு அண்ணனின் பேச்சை நான் பல இடங்களில் ரசித்துக் கேட்பேன், அவரின் ரசிகை நான். இப்படத்தில் அவருடன் பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது, தம்பி ஷாந்தனு என்னுடன் சகஜமாக பழகி வந்தார் அதற்கு நன்றி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன் அதில் கணவன் ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்துகிறார். பெண்கள் பலவீனமானவர்கள் தான்.. ஆனால் மனவலிமை கொண்டவர்கள்.. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்..

ஆண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பெண்கள் உங்கள் தோளோடு நிற்பார்கள். இதை மீடியாக்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.. எல்லா ஆண்களையும் சொல்லவில்லை.. சில ஆண்கள் அப்படி இருக்கிறார்கள். அவர்கள் திருந்த வேண்டும்” என்று பேசினார் தீபா

Give protection to women.. Men should change – Deepa

இராவண கோட்டத்திற்காக இரத்தம் சிந்திய நடிகர் சஞ்சய்

இராவண கோட்டத்திற்காக இரத்தம் சிந்திய நடிகர் சஞ்சய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இராவண கோட்டம்”. மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பேசியதாவது..

மதயானைக் கூட்டம் படத்திற்குப் பிறகு நான் வேலை செய்ய வேண்டும் என்று அதிகம் எதிர்பார்த்த ஒரு இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சார். அது நடந்து விட்டது , ஷாந்தனு நடிகராக மட்டும் இல்லை இப்படத்தில் அனைத்து வேலைகளையும் செய்தார்.

கண்ணன் சார் போன்ற சிறப்பான தயாரிப்பாளர் வருவது சினிமா துறைக்கு மிகவும் ஆரோக்கியமானது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் சஞ்சய் பேசியதாவது…

எனக்கு இந்த மேடை புதிது, நான் 12 வருடமாக பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படம் எனக்குக் கிடைத்தது ஒரு வரம், இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன்.

இந்தப் படத்திற்காக நிறைய இரத்தம் சிந்தி நடித்துள்ளேன், நான் மட்டும் அல்ல அனைவரும் அப்படித்தான் நடித்தனர். இந்த படத்தின் வாழ்வியல் அம்சங்கள் அப்படி அமைந்துள்ளது, அதற்கு நாங்கள் ஈடு செய்ய வேண்டும் என்று எண்ணினோம்,.

இயக்குநர் என்னைப் பெரிய அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தார், எனக்கு அவர் அண்ணனாக இருக்கிறார், அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் அனைவரும் எனக்குப் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர், நான்கு வருட போராட்டம் என்றே சொல்லலாம். இரவு பகல் பாராமல் அனைவரும் உழைத்துள்ளோம், உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

கலை இயக்குநர் நர்மதா பேசியதாவது…

எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த ஷாந்தனு மற்றும் இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நன்றி, இது மிகப்பெரிய அனுபவம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

Actor Sanjay shed his blood for Raavana Kottam

கிரிக்கெட்டர் தோனி தயாரிக்கும் முதல் தமிழ் பட சூட்டிங் அப்டேட்

கிரிக்கெட்டர் தோனி தயாரிக்கும் முதல் தமிழ் பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’.

இப்படத்தை இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக நதியா நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது ‘எல்.ஜி.எம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மே 1 ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

மேலும், ‘எல்.ஜி.எம்’ படத்தின் வெளியீட்டுத் திட்டத்தை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dhoni’s ‘LGM’ movie shooting wrapped

PS2 Box Office Update : கோடிகளை குவிக்கும் ‘பொன்னியின் செல்வன் 2’

PS2 Box Office Update : கோடிகளை குவிக்கும் ‘பொன்னியின் செல்வன் 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

‘பொன்னியின் செல்வன் 2’ படம் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

‘பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்திருந்தது.

இந்த நிலையில், இப்படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

மேலும், ‘பொன்னியின் செல்வன் 2’ படம் ரூ.200 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2

Ponniyin Selvan 2′ box office collected more than Rs.200 cr in 4 days

More Articles
Follows